இஸ்லாம் - சுத்த சன்மார்க்கம்
ஓர் இறை கொள்கை என்பதை தவிர இஸ்லாத்திற்கும்
சுத்த சன்மார்க்கத்திற்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.
இஸ்லாம், கிறிஸ்துவம், ஆபிரஹாமியம் அனைத்தும் இஸ்ரேலியர்களின் ஆதி
வேதாகமத்திலிருந்து வந்தவை.
ஆதி வேதாகமத்தில் இறைவன் பெயர் யெஹோவா ( யெஹ் வஹ்)
ஆதம் ஏவல் தொடங்கி கிறிஸ்துவுக்கு முன்பு வரை உள்ள அனைத்து இறை தூதர்களும்
இஸ்ரேலியர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும்
ஒன்றுதான்.கிறிஸ்துவத்தில் ஏசு நாதர் இறைவனின் மகனாக பார்க்கப் படுகிறார்.
ஆனால் இஸ்லாத்தில் ஏசு நாதர் ஈசா நபியாகவும், கடைசி நபியாக முகமது நபி மட்டுமே
ஏற்றுக் கொள்ளப் படுகிறார். (நபி = இறை தூதர்)
இந்த அனைத்து மதங்களுமே மனித நேயத்தை மட்டும் வலியுறுத்துகின்றன. (இந்த
மதங்களில் உள்ள ஒரு சிலர் இந்த பூமியில் உள்ள அனைத்துமே மனிதர்களுக்காக
படைக்கப் பட்டுள்ளன என்கின்ற கருத்து உள்ளவர்கள். மேலும் கொன்றால் பாவம்
தின்றால் போச்சு என்று நினைப்பவர்கள்.)
இந்த மதங்கள் அனைத்துமே இறைவன் மேலானவன் நாம் அனைவரும் இறைவனின் சொல்லை கேட்காத
ஆதி பாவத்தினால் வந்தோம் என்னும் நம்பிக்கையில் உள்ளவை.
மறு பிறவியில் நம்பிக்கை இல்லாதவை.
சுவர்க்கம், நரகம் எனும் நம்பிக்கை உள்ளவை.
நித்ய வாழ்வு என்பது சொரக்த்தில் இறைவனோடு இருப்பதே என்று நம்புபவை.
சன்மார்க்கம் என்பது அடிப்படையே அனைத்து ஜீவர்களிடமும் அன்பு செலுத்துவது.
எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது.
சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபே சன்மார்க்கம்.
இங்கே உரு, உருஅரு, அரு என்னும் கடந்த நிலையே.
இங்கும் அருட்பெரும் ஜோதி என்னும் ஓர் இறை கொள்கையே உள்ளது.
எனினும் இறைவன் வேறு நாம் வேறு என்னும் நிலை கடந்து இறைவனோடு ஐக்கியம் ஆக
முடியும் என்னும் நிலை உள்ளது.
மேலும் சைவ சமயத்தின் சைவ சித்தாந்தம் புரிந்தவர்கள் சன்மார்க்க நிலைக்கு மேல்
ஏற முடியும். ஒரு விதத்தில் சைவ சித்தாந்தம் சன்மார்க்கத்தின் படி என்றே
சொல்லலாம்.
வள்ளல் பெருமான் ஏன் சைவ சமயம் மற்றும் அனைத்து சமயங்களையும் விட சொன்னார்
என்றால் சமயங்களில் சொல்லப்பட்ட ஒருமை நிலையை அடைவதற்கு பதில் சடங்குகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து இறை நிலையினை உணராமல் போய் விடுவார்கள் என்பதனால்தான்.
ஆக சைவ சமயம் சார்ந்தவர்களின் அடுத்த படி சன்மார்க்கம்.
ஆகவே சைவ சமயத்தில் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள்
சன்மார்க்கத்தை பாதையாக தேர்ந்தெடுக்க வசதியாக வள்ளல் பெருமானின் சன்மார்க்கம்
சைவ சமயத்தவர்களால் சைவ சமயத்தோடு வைக்கப் பட்டுள்ளது.
ஆனால் சன்மார்க்க பாதைக்கு வந்த பின்னர் அனைத்து சமயங்களில் இருந்தும்
விடுபட்டு விடுவதனால் சன்மார்க்கிகள் சைவ சமயமோ அல்லது வேறு எந்த சமயமோ சார்வது
இல்லை.
வள்ளல் பெருமான் ஒரு போதும் தன்னை கடவுளாக சொல்லிக் கொண்டதில்லை. மேலும் அவரது
உருவத்தை புகைப்படம் எடுக்க கூட அனுமதி அளிக்க வில்லை. அப்படி இருந்தும் ஒரு
சில அன்பர்கள் அவருக்கு தெரியாமல் அவரை புகைப்படம் எடுத்தும் (எட்டு முறை)
அவர் புகைப் படத்தில் விழவில்லை.
பண்ருட்டி குயவர் ஒருவர் வள்ளல் பெருமானை போல் மண்ணினால் ஒரு சிலை செய்து வந்து
அவரிடம் காட்டினார்.
அந்த சிலையை பார்த்து பொன்னான மேனியை மண்ணாக செய்து விட்டாயே என்று உடைத்து
விட்டார்.
ஆகவே அவர் உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே
பாடுபட்டார்.
தன்னை துதி பாடுவதை என்றுமே அனுமதித்தது இல்லை.
ஆகவே ஓர் இறை கொள்கை என்பதை தவிர இஸ்லாம் மார்க்கத்திற்கும் வள்ளல் பெருமான்
காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment