Pages

Saturday, June 5, 2010

[vallalargroups:3069] சுதந்திரம்

சுதந்திரம்

இந்த மனித சமுதாயத்தில் நாம் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக 
நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நாம் அனைவரும் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா என்றால் ?
இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
இறைவன் நம்மை எல்லாம் இயற்கையின் அடிமையாகத்தான் வைத்திருக்கிறார்.
எப்படி என்றால்
நமக்கு தினமும் பசி என்னும் ஒன்றை ஏற்படுத்தி 
உணவை உண்ண வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக 
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்.
அடுத்து உண்ட உணவு செரித்து மலம் கழித்தல் என்னும் உணர்வு மூலம்
மலம் கழித்தல் மூலம் ஒரு திருப்தியை அடைவதாக 
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
தாகம் என்னும் உணர்வு மூலம் நீரை பருக வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக 
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
அடுத்து சிறு நீர கழித்தல் மூலம் ஒரு திருப்தியை அடைவதாக 
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
அடுத்து மாற்று பாலினத்தவரை பார்த்து (அவர் அங்கங்களை பார்த்து)
காம வயப்பட வைத்து அந்த காமத்தில் (சிற்றின்பம்) உடல் ஒரு திருப்தியை அடைவதாக 
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
அதன் மூலம் புதிய சந்ததியை உருவாக்கி தன்னுடைய விளையாட்டிற்கு 
புதிய அடிமைகளை உருவாக்குகிறார்.

ஆக நாம்
பசி என்று ஒன்று இல்லை என்றால் உணவு உண்போமா ?
உண்ட உணவு செரிக்க வில்லை என்றால் மலம் கழிப்போமா ?
தாகம் என்ற உணர்வு தோன்றவில்லை என்றால் நாம் நீரை குடிப்போமா ?
சிறு நீர் கழிக்கும் உணர்வு தோன்றவில்லை என்றால் சிறு நீரை கழிப்போமா ?
பாலின ஈர்ப்பு இல்லை என்றால் காம உணர்வு தோன்றுமா ?
காமத்தில் இன்பம் இல்லை என்றால் யாராவது காமத்தில் ஈடு படுவார்களா?

ஒரு நாள் பசிக்க வில்லை என்றால் ஐயோ இன்று பசிக்கவில்லையே என்று பயபடுகிறோம்.
ஒரு நாள் மலமோ, சிறு நீரோ கழிக்கவில்லை என்றால் ஒரு நாள் முழுவதும் மலம், சிறு நீர் கழிக்க வில்லை என்று பயப் படுகிறோம்.
பாலின ஈர்ப்பு இல்லை என்றால் எதோ குறைபாடு உள்ளது என்று பயப் படுகிறோம்.

ஆனால் 
ஒரு வாரத்திற்கு எனக்கு பசிக்காது என்றோ
ஒரு மாதத்திற்கு நான் நீர் அருந்த மாட்டேன் எனக்கு தாகமே எடுக்காது என்றோ 
ஒரு வாரத்திற்கு நான் மலமோ, சிறு நீரோ போக மாட்டேன் அந்த உணர்வு எனக்கு ஏற்படாது என்றோ
எப்போதும் பாலின கவர்ச்சி எனக்கு ஏற்படாது என்றோ
நான் சுதந்திரமானவன் ஆகவே இயற்கையின் உபாதைகள் என்னை அடிமை படுத்த் முடியாது என்று சொல்ல முடியுமா ?

ஆக நாம் இயற்கை ஏற்படுத்திய பசி உணர்வு முதல் காம உணர்வு வரை அடிமையாகதானே இருக்கிறோம்.
அப்படி இருக்கும் போது நான் சுதந்திரமானவன் என்று எப்படி கூற முடியும் ?

அடுத்து சிந்திப்போம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment