Inbutru Vazga
அன்பரே,
நல்ல கேள்வி ...
ஒவ்வொருவர்களும் கோயிலுக்கு / மற்ற இடங்களுக்கு, செல்ல வேண்டுமா / வேண்டததோ, அவர் அவர்களின் (பக்குவ நிலையை/நோக்கத்தை) பொறுத்தது.
"எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே
இறங்கி ஈந்து அருளும் பதம்" ....
"எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டுகினும்
அங்கங்கு இருந்தருள் அருட்பெருஞ்சோதி"...
வள்ளலார் தனது சத்திய ஞான விண்ணப்பத்தில்(Vallalar Hand Written)...
1. கருதுவார் , கருதும் வண்ணகளும்..
2. துதிப்பார் , துதிக்கும் வண்ணகளும் ..
3 . எண்ணுவார் , எண்ணும் வண்ணங்களுமாக
அருள் புரிபவர் .. " அருட்பெருஞ்சோதி தனிபெருங்கடவுள்"
இது மேட்டுக்குப்பத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் உண்மையான சன்மார்க்க அன்பர் தயவுதிரு . சேதுராமன் ஐயா அவர்கள் கூறியது ...
1.வள்ளலார் "இறைவனால்" வருவிக்கவுற்ற வந்தவர் ..
2.வள்ளலார் தனது இளமை கால வாழ்கையில் , எந்த ஒருவரையும் பிரிக்க விரும்ப வில்லை . அதனாலேயே , சன்மார்க்கத்தை சைவத்தோடு இணைத்து கொண்டு வர முயற்சி செய்தார்கள்.
அந்த கால கட்டங்களில் , சமய ஆசாரங்கள் நிறைந்து இருந்தன.
3.முதல் ஐந்து திருமுறைகளிலும் , சன்மார்க்க கருத்துக்களை பிண்ணி வைத்துள்ளார்கள்.பெருமானுக்கு சைவத்தில் , உயர்ந்த ஆன்மாக்கள் இருந்து வந்ததாலும்அனைத்து சன்மார்க்க கருத்துகளையும் "சைவம்" மூலம் வெளி படுத்த விரும்பினார்கள்.
4.பெருமான் மேற்பார்வையிலே , முதல் நான்கு திருமுறைகள் , தொழுவூர்.வேலாயுத முதலியார் வெளியிட்டார்கள். எனவே , முதல் நான்கு திருமுறைகள் பெருமான் சம்மதத்துடன் உடனே , வெளியாகி உள்ளன.
5. ஆனால், அதனை சைவ பெருமார்கள் முழுமையாக ஏற்கவில்லை.
6.பழைய மார்கங்களில் , ஒவ்வொருவரும் செய்த வினையை அனுபவித்து தான் மேலே ஏற வேண்டும் என்ற கருத்து இருந்தது.. அனைவரும் வினையை கழிக்க வேண்டும் . அதற்கு அடுத்த தடுத்த தேகங்களை எடுக்க வேண்டும் என்ற வரையறை இருந்தது.
7.அதனை முதல் முதலாக ,உடைத்து எறிந்தவர் நமது அருட் ப்ரகாச வள்ளலார்.
8.வள்ளலார் , இந்த வினையை , "ஜீவகாருண்ய ஒழுக்கத்தின்"(தயவு) மூலம் தடுத்து கொள்ள முடியும் என ரகசியத்தை கொடுத்தார்கள்.
9. ஆறாம் திருமுறையில் , அதிக தாக்கத்துடன் கொடுத்தார்கள். அன்றைய நாட்களில் , வள்ளலாரின் ஆணை காரணமாக வெளியிட வில்லை.
10.அந்த காலத்தில் சமயங்களை சார்ந்தவர்கள் , வள்ளலார் கொள்கைகளை ஏற்று கொள்ளாத காரணத்தினால் , வள்ளலார்,"தாம்" வந்த வழிக்கு தனிமார்கத்தை ஏற்படுத்தினார்கள்.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை எனவும்,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலை எனவும் ,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான பாட சாலை எனவும் ...
சமய
பெயர்களை நீக்கி, சன்மார்க்க பெயர்களை வைத்தார்கள். 11.வள்ளலார் படிகள் மேல் ஏற ஏற , தான் அடைந்த வழியினை மக்களுக்கு எப்படியாவது கொடுக்க வேண்டும் என முயற்சி செய்தார்கள்.
12.மக்களுக்கு புரியாத காரணத்தினால் , "அருட்பெருஞ்சோதி அகவல்" கொடுத்தார்கள்..வள்ளலார் எதிர்பார்த்த பலன் ஏற்படவில்லை.
13.மீண்டும் , வள்ளலார் , சித்தி வளாகத்தில் , உண்மையை தெரிவிக்க, சன்மாக்க கொடி கட்டிய பின் ,"மஹா உபதேசத்தை" உபதேசித்தார்கள். தான் வந்த வழியை இந்த மஹா உபதேசத்தில் , உபதேசித்தார்கள். வள்ளலார் எதிர்பார்த்த பலன் ஏற்படவில்லை.
14.கடைசியாக , "மரண பயத்தை" உண்டு பண்ண செய்தார்கள். இதனை "ஞான சரியை " என்ற தலைப்பின் மூலம் பாடல்களை கொடுத்து விட்டு அனைத்து ஆன்மாக்கள் -லிடமும் புகுந்து விட்டார்கள்...
வள்ளலார் அனைத்து திருமுறைகளிலும் "தயவு" என்ற நுட்பத்தின் மூலம் , இறைவனை மிக எளிதாக
அடைய முடியும் கூறி விட்டார்கள்.
If anyone have dobts on above statements, please contact mettukuppam .sethuraman ayya - 098426-81522
anbudan,
Karthikeyan
2010/6/23 Vadivelu Velu <velan534@gmail.com>
23.6.2010
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஐயா கார்த்திகேயன் அவர்களே வணக்கம்.,1.வள்ளற்பெருமான் வாலிப பருவத்தே அருட்பெருஞ்ஜோதியை அறிந்திருக்கிறார் என்றால் பிறகு ஏன் இறை தலங்களுக்குச் சென்றார்?நன்றி.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
----
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment