Pages

Friday, May 7, 2010

Re: [vallalargroups:2938] ஜீவசமாதியின் சிறப்புகள்

அன்புள்ள அன்பர்களுக்கு வணக்கம்,
                                                                         இங்கு ஜீவ சமாதியில் இருக்கும் இவர்களை நம் ஆண்டவர் எழுப்பி அவரின் சுத்த சன்மார்க்க பெருநெறியில் அவர்களுக்கும்  உண்மை நெறியின் விளக்கத்தை அறிவிப்பார் இது அவரின் அவா.சமாதி பழக்கம் சுத்த சன்மார்க்க பழக்கம் அல்ல.இந்த நல்ல ஆன்மாகளுக்காக நம் ஆண்டவர் அவர்களை மீண்டும் வர செய்து வுண்மை நெறியினை போதிப்பார். 
 
"மாண்டாரை எழுப்பு தெய்வம் " - " துஞ்சியவர்களையும்  எழுப்புவார் "
 
ஆகவே நாமும் அய்யன் இடம் இவர்களுக்காக ப்ராத்தனை செய்வோம்.
 
அன்புடன்
சுத்த சன்மார்க்க அன்பர் .

2010/5/4 balamurugan d <to.dbala@gmail.com>

ஆன்மீக அன்பர்கலே வணக்கம்  ,

            தன்னை உணர்ந்து தெளிந்த மகான்கள், ஜீவன் முக்தர்கள் தாங்கள் இதுவரை இந்த உடலுடன் மக்களுக்கு உழைத்து போதும், இனி தங்கு தடையில்லாமல் எப்போதும் அந்த பேரின்பதிலேயே லயித்து, லயம் ஆகி நிற்கலாம் என்று முடிவு எடுப்பார்கள். அந்த முடிவு அவர்கள் மற்றும் தனியே எடுப்பதில்லை. மேலிடத்திலிருந்தும், அதற்கு ஆமோதிப்பு வரும். அதற்கு பின்பே அவர்கள் ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தை கணித்து, ஊர் மக்களுக்கு எல்லோருக்கும் அதனை அறிவித்துவிட்டு, அவர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கிவிட்டு சமாதியில் இறங்கி மோன தபத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். தியானத்தில் ஒரு எல்லையை தாண்டும் வரை அவர்களின் இறந்த மனம் பழைய உறவுகளை, சம்பந்தங்களை, நிகழ்ச்சிகளை, எல்லாம் எடுத்து காடும். அந்த எல்லையை அவர்கள் தாண்டிவிட்டால் பின்பு மனமும் இல்லை, எதுவும் இல்லை, எல்லாம் அந்த பரம்பொருளே எங்கும் வியாப்பித்து இருக்கும். ஆனாலும், ஜீவ அங்க சமாதியில் ஒரு நுட்பமான பேரியிக்க தன்மையில் தான் என்ற உணர்வு கொலுவீற்றிருக்கும்.

அந்த உணர்வு மகானின் நெருங்கிய சொந்தங்கள், மற்றும் சிஷ்ய கோடிகள் மற்றும் அவரை நினைத்து உருகும் ஆன்மீக குழந்தைகள் ஆகியவர்களின் வருகை அமையும் போது அந்த உணர்வு அதிர்வுறும். அந்த அதிர்வுகள், வந்திருக்கும் மக்கள் அனைவரிடமும் சொல்ல முடியாத, வார்த்தைகளில்லாத, பல அனுபவங்களை ஏற்படுத்தும். அவரின் அந்த அதிர்வலைகள் ஆன்மீக வளர்ச்சிக்காக வரும் அன்பர்களின் ஆன்மீக வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும். அப்போது ஆன்மீக அன்பர்கள் மற்றும் தபஸ்விகள் தவம் இயற்றும்போது, யார் யாருக்கு, எந்த இடத்தில் எவ்வாறு தவம் இயற்ற வேண்டும் என்ற வழியில்லாத வழியை மகான்கள், தபஸ்விகள், ஞானிகள், மாமுனிகள் மட்டுமே காட்ட முடியும்.

ஆகவே ஜீவ சமாதிகள் எங்கு இருந்தாலும், அங்கு போய், அங்கு அடங்கி இருக்கும் மகானுடனும் அவரின் நுண்ணிய அதிர்வலைகளிடமும் நாம் தொடர்பு வைத்துகொண்டால் இந்த மானிடப் பிறவியில் நாம் எதை சாதிக்க வேண்டும் என்று நர உடலை எடுத்தோமோ அந்த சாதனைக்கு முதல் அடி எடுத்து வைத்தது போல ஆகும். தினமும் ஜீவ சமாதியில் உள்ள மகானை உள்ளார்ந்த அன்போடும், திவிரபக்தியுடனும், நாம் தரிசித்து வந்தால், எல்லா பலன்களையும் அடையலாம். பெறுவதிலும் அரிய பேராம் வீடு பேற்றை எளிதில் அடையலாம்.

Note :-  Herewith i have attached  All Siddhar Samathi List.
Please make it use and visit samathikal.


பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

2634-40.gifஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 2634-40.gif




withimage007.gif
            Balamurugan

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment