Isearched for the information. Luckly I got it. Thank you very much
2010/5/6 harimanigandan v <chamundihari@gmail.com>
---------- Forwarded message ----------
From: Krishnan S <krishnan.singai@gmail.com>
Date: 2010/5/6
Subject: [தமிழ் உலகம்] சித்தர்கள் ஜீவ சமாதி
To: tamil_ulagam <tamil_ulagam@googlegroups.com>, "minTamil@googlegroups.com" <mintamil@googlegroups.com>
சித்தர்கள் ஜீவ சமாதி
தமிழ் நாட்டுப் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள்.
சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இந்த இறைவுணர்வும், ஈர்ப்பு சக்தியும்
அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்.
நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, ஆகியவை எழும் போது நம்
உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும்.
இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர்.
நாம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள்
14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் என கூறுகின்றனர்.
அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.
இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.தவ நிலையில் உள்ள
சித்தர்களின் உடலில் இருந்து வெளிப் பட்டு கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான
கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான்.
பதினெட்டு சித்தர் அடங்கியிருக்கும் ஜீவ சமாதி பீடங்கள்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளன. உதாரணமாக சென்னையில் திருபொற்றீஸ்வரர் ஆலயம்.
அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம்.தண்டையார் பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான்
தர்க்கா,மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம்,முண்டகக் கன்னியம்மன்ஆலயம்,திருவான்மியூர்அன்பொடு,
மருந்தீஸ்வவரர்
ஆலயம், கொரட்டூர் ஐம்புகேஸ்வரர் ஆலயம்,திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம்,பூந்தமல்லி
அருகில் திருமிழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு ரத்தினசபாபதி ஈஸ்வரர்
ஆலயம், திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம்,மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி,காளகத்தி,
திருப்பதி இவையாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள்.
இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றியும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.
ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீராமானுஜரும்,சீர்காழி,ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் சட்டமுனியும்(சீர்காழி சட்ட
நாதர்),சிதம்பரம் திருவாடுதுறை ஆகிய இடங்களில் திருமூலத்தேவரும் இருந்து அருள்புரிகின்றனர். திருவாடுதுறை நரசிங்கம் பேட்டைக்குக்கருகில்(மயிலாடுதுறை கும்பகோணம் மார்க்கம்) உள்ளது.
இங்கு தான் சிறப்புமிகு திருவாடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது.இங்கே ஸ்ரீ மாளிகை தேவரின் சமாதிபீடமும் உள்ளது.
இதற்கு அருகிலேயே திருவிடைமருதூர் உள்ளது. இங்கு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இங்கு ரோமரிஷி,நாரதர் ஜீவ சமாதியில் இருந்து அருள்கின்றனர். இங்கு தல விருட்சமாக உள்ள
மருத மரத்தினருகில் இருந்து வாசி லயம் செய்தால் உணரலாம்.இங்கிருந்து பத்து கி.மீ தூரத்தில் கும்ப
கோணத்தில் உள்ளது. இங்கே கும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது.இங்கு அகத்தியப் பெருமான
அருளுகின்றார். இதற்கு அருகிலேயே சாதார வீதி என்ற இருக்கிறது. இங்கே சிவவாக்கியராக இருந்த
திருமிழிசை ஆழ்வாரகிய பெருமான் ஜீவ சமாதி கொடுள்ளார்.
குடந்தைக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடாலயத்திலும் சித்தர்கள் ஜீவ சமாதிலிருந்து
அருள்கிறார்கள்.இதற்கு அருகில் திருபுவனம் இருக்கிறது.இங்கு விராலிமலைச் சித்தர்கள் ஜீவசமாதியுள்ளது.
திருவிடைமருதுருக்கு அருகிலிருப்பது கோவிந்தபுரம். இங்கு ஸ்ரீ போதேந்திராள் ஜீவசமாதியுள்ளது.
ஆடுதுறை,குத்தாலம் கதிராமங்கலத்தில் வன துர்க்கை ஆலயமுள்ளது. இங்கு அகத்தியர் அருள்கிறார்.
மயிலாடுதுறையில் மயூரநாதர் ஆலயத்தில் காலங்கி நாதரும்,மற்றும் பல சித்தகளின் ஜீவசமாதியாகி
உள்ளார்கள். மயிலாடுதுறைக்கு அருகில் தருமபுர ஆதீனம். இங்கும் பல சித்தர்கள் ஜீவசமாதி
ஆகியுள்ளார்கள்.திருக்கடையூரிலும் காலங்கிநாதர் அருள்கின்றார்.
மாயவரம், சீர்காழி மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருந்தீஸ்வரர்,முத்து குமாரசுவாமி ஆலயம்
இருக்கிறது.இங்கே தல விருட்சமாகிய வேப்பமரத்தினடியில் தன்வந்திரியின் ஜீவசமாதியும்,ஆலயத்தினுள்
வசிஷ்டரின் ஜீவசமாதியும் அமைந்து அருள் ஒளி பாய்ச்சுகின்றது. சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில்
கொள்ளிடத்திலிருந்து 4 கி,மீ. தூரத்தில் ஆச்சாள்புரம்.இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர் அருள்கின்றார்.
திருஞானசம்பந்தர் ஜோதியில் கல்ந்த ஆலயம் இங்குள்ளது.வடலூரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ தூரத்தில்
மேட்டுக்குப்பம்.இங்கே அருட்பிரகாசர் இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த சித்தி வளாகம்
தவறாது கண்டு களித்து அருள்பெற வேண்டிய இடம். நெய்வேலிக்கருகில் விருத்தாசலம் இருக்கிறது.
இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது.திருவாரூர்,நாகை சாலைக்கருகில் எட்டுக்குடி
ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தல விருட்சத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும்,
இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சந்நிதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும்,மற்றும் பல
சித்தர்களும் அருளாட்சி செய்கிறார்கள்.
அகப்பேய் சித்தர் எட்டுக்குடி,தஞ்சைக்கருகில் திருவையாற்றிலும் அருள்புரிகின்றார்.தஞ்சையிலும்,திருச்சியை
அடுத்த கருவூரார் எனப்படும் கருவூர்த்தேவரும், திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டரும், நாகப்
பட்டினத்தில் நாகை நாதர் ஆலயத்தில் அழுகண்ணரும்,காசிபரும் வரதரும் அருள்புரிகின்றனர்.
நாகைக்கருகில் பொய்கை நல்லூரில் ஸ்ரீகோரக்க நாதரும், அருகில் புஜண்டவனத்தில் ஸ்ரீ காக
புஜண்டரும்,நவநாதாக்களும் அருள் புரிகின்றனர்.நாகப்பட்டினம் அருகில் நாகூர் மீரான் சாகிப்,முகைதீன்
ஆண்டவர் தர்க்கா இருக்கிறது.மதுரையில் ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் சுந்தரனந்தர் அகத்தியரரும்,
அருகிலே அழகர்மலையில் பதஞ்சலியும்,இராமதேவர்,யாக்கோப்பு என்ற தேரையரும்,அழமுதிர்சோலையில்
ஸ்ரீ போகநாதர்,கமலமுனியும்,மதுரைக்கருகில் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ போகநாதரும்,மலை உச்சியில்
மச்சமுனியும்,சிக்கந்தர் பாத்ஷா ஒலியுல்லாவும் அருலள்கின்றனர்.
திருச்செந்தூரில் புண்ணாக்கீசர்,காசிபர் ஆகியோர் மாபெரும் திருவருள் புரிகின்றார்கள். இங்கே
எம்பெருமான் சுப்ரமண்யர் சந்நிதிக்கருகில் இடது புறத்தில் சிறிய கதவுண்டு.இதன் வழியே உள்ளே
சென்றால் குகையினுள் பஞ்சலிங்க வடிவாக ஐந்து சித்தர்கள் இருப்பதையும்,அக்குகைக்குள் சூரிய ஒளி
உள்ளே புகுவதையும் கண்ணாரக் கண்டு அருள் பெறலாம்.
திருச்செந்துருக்கு அருகில் காயல்பட்டினம் உள்ளது.இங்கு பல சித்தர்களும் அருள் வழங்குகின்றனர்கள்.
தரிசித்து இன்புறுக.கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரத்தில் விஸ்வாமித்திரர்,வசிஸ்டர்,பிருகு முனிவர்
ஆகியோரும்,பழனியில் உள்ளது போல் இங்கு நவபாஷாணத்தால் உள்ள சிவலிங்கமுள்ளது.
சுசீந்திரத்திற்கு அருகில் மருந்து மலை உள்ளது. இங்கு காகபுஜண்டாரும், நவநாதாக்களும் நாகர்
கோயிலுக்கு அருகில் 11 கி.மீ தூரத்தில் திருவணந்தபுரம் செல்லும் சாலையில் தக்கலை உள்ளது. இங்கு
கேட்டதை வழங்கும் இறைவள்ளர் பீர் அப்பா எனப்படும் பீர் முகமது தர்க்கா உள்ளது. இரவு,பகல்
தங்கிதொழுது கண்கூடாய் அருள் பெறலாம்.இராமேஸ்வரத்தில் பதஞ்சலி முனிவரும், இங்கிருந்து
இராமநாதபுரம் செல்லும் சாலையில் 12கி.மீ. தூரத்தில் கோசமங்கை உள்ளது. இங்குள்ள தலவிருட்சம்
இலந்தை மரத்தடியில் மரத்தடியில் காகபுஜண்டர் ஜீவ சாமதியும், மற்றும் திருக்கழுகுன்ற ஆலயத்தில், உச்சியில் ஸ்ரீ
கோரக்காரும்,காஞ்சிபுரத்தில் கடுவெளிச்சித்தர்,காளங்கிநாதர், மற்றும் பல சித்தர்களும்
இருந்து ஞானச் செல்வத்தை வாரி வழங்குகின்றார்.
திருக்கழுகுன்ற ஆலய உச்சியில் ஸ்ரீ கோரக்கரும்,காஞ்சிபுரத்தில் கடுவெளிச்சித்தர்,காளங்கிநாதர்,
மற்றும் பல சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்துள்ளார்கள்.
திருவாரூரில் கமல்முனி,சுந்தரானந்தர், இடைக்காடரும், திருவண்ணாமலயில் தேரையார்,இடைக்காடர்,
கெளதம மகரிஷி,நந்தீஸ்வரர்,சுப்ரமணியர்,அகப்பேய்ச்சித்தர் மச்சமுனி,குகை நமச்சிவாயர்
மற்றும் எண்ணிடலங்கா சித்தர்களும் ஜீவசமாதியில் இருந்து அருள்புரிகின்றனர்.
திருவண்ணாமலைக் கார்த்திகை மாத பெளர்ணமியன்று உள்ளன்போடு சென்றால்,மானிட வடிவில்
வந்து இன்றும் சித்தர்கள் காட்சிக் கொடுத்து காத்து இரட்சிக்கின்றனர்.சத்குருநாதர்
ஸ்ரீ காகபுஜண்டரின் ஜீவசமாதிகள் பல்வேறு இடங்களில் இருக்கிறது.
சேலம், நாமக்கள்(வழி சேந்தமங்கலம்) சாலைக்கருகில் கொல்லிமலை என்னும் சதுரகிரி அமைந்து
உள்ளது. தென்காசிக்கு அருகில் திருகுற்றாலமலை அமைந்துள்ளது. பாபநாசத்திற்கு அருகில் பொதிகை
மலை அமைந்துள்ளது.மதுரை ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலைக்கருகில்(தானிப்பாறை வழி) சுந்தரமகாலிங்கமலை
என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. பக்தியோடு,உள்ளுணர்வோடு இம்மலைகளுக்குச் சென்று தங்கி வந்தால்
சித்தர்கலின் அருளை,சிவனருளையும் முழுமையாகப் பெறலாம்.
கொல்லியில் ஸ்ரீ அறைப்பள்ளீஸ்வரர் ஆலயம்(குகையில் குடிகொண்ட ஈசன்) பெரியண்ணசாமி
ஆலயம், சோரமடையான் ஆலயம், எட்டுக்கை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களும் காகபுஜண்டர்
குகை,அகட்தியர் குகை,பாம்பாட்டி சித்தர்,புலிப்பாணி குகை,காலங்கிநாதர் குகை,கன்னிமார் குகை,
கோரக்கர் குன்றம் ஆகிய இடங்கள் சித்தர்கள் வழி செல்லும். நாமும் தரிசித்து, தங்கியிருந்து அருள்
பெற வேண்டிய இடங்கள்.
குற்றாலமலையில் அருள்மிகு செண்பகாதேவி ஆலயமும்,வாலைக்குகை என்று வழங்கும் தெட்ணா
மூர்த்தி குகை, [பொதிகையில்]அகத்தியர் குகை, ஒளவையார் குகை,கோரக்கர் குகை,புஜண்டர் குகை –
[தேனருவியில் உட்புறடத்தில் உள்ளது] பரதேசிப்பாறை ஆகிய தரிசித்து தங்கி அருள் பெற வேண்டியஇடங்கள்.]
---
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_ulagam@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en--
----------------
Harimanikandan.V
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment