Pages

Monday, March 29, 2010

[vallalargroups:2799] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.

 
                 
  
        
 
 
        
 
                                 
    பசித்திரு           தனித்திரு              விழித்திரு 
 
   அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
   தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக
ஜீவகாருண்யமே   மோட்ச வீட்டின்   திறவுகோல்
 
எல்லா  உயிர்களும்  இன்புற்று   வாழ்க!
   
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
 
அன்புஉள்ளம்  கொண்ட  ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம் ஒருவன் தன்னைவிட ஏழ்மை  நிலையில் மற்றும்  இயலாதவர்களிடம்  இருக்கும் பொருள்களை  களவாடினால்  பிற்காலத்தில் அவன் நிலை எவ்வாறு  அமையும்  என்பதை உணர்த்த   பேரருள் பெருங்கருணை கொண்ட நமது வடலூர்  வள்ளல் பெருமானின் அவர் பாதம் வணங்கி இச்சிறுகதையை சமர்பிக்கிறேன்
 
அன்பர்களே முன்பு ஒரு காலத்தில் பாரத பூமியிலே காண்பவர் கண்டு நடுங்கும் அளவிற்க்கு கொடிய முகமும் பருத்த சரீரமும்  கொண்ட கபாலி என்ற திருடன் இருந்தான்  அவன் தினந்தோறும் திருடி சம்பாதித்து வாழ்ந்து வந்தான் இப்படி அவன் வாழ்ந்த ஊரிலே கோவில் திருவிழா நடைபெற்று கொன்டிருந்தது அங்கே அவன் ஒரு பக்த்தன் போல வேடமிட்டு கொண்டு விழாவிற்க்கு வருபவர்களின் பொருள்களை திருடிகொன்டிருந்தான் அப்பொழுது  தினந்தோறும் கூலிவேளை செய்து அதில்வரும் குறைந்தவருமானத்தை கொண்டு தன் இல்லம் நாடி வரும் அடியார்களுக்கு அவர்தம் பசிப்பிணியை போக்கி தன் மனைவிமக்களுடன் தன் வாழ்நாளை இறைவன் அருளால் இனிதே வாழ்ந்துவந்தார்  அன்பர் ஆனந்தன் இப்படி இருக்கும் வேளையில் அவ்வூரில் திருவிழா நடைபெற்றுகொன்டிருந்தது   அன்பர் ஆனந்தனும்  திருவிழா காண வந்திருந்தார்  அவர் தம்
 மழலை செல்வங்களுக்கு  திருவிழாவில் விளையாட்டு பொருள்  வாங்கிசெள்ளலாம் என்று தன் பையில் சிறிதளவு பணம் வைத்திருந்தார்  இதை கவனித்த கபாலி அப்பணத்தை  எப்படியாவது  களவாடவேண்டும் என்று அன்பர் ஆனந்தன் அருகில்வந்து பிறரிடம்  நலம் விசாரிப்பதுபோல் நடித்துகொண்டிருந்தான் கபாலி  கள்ளம் இல்லாத பிள்ளை குணம் படைத்த அன்பர் ஆனந்தன் திருவிழாவில் காண்பிக்கப்படும் வானவேடிக்கை பொய்கால்குதிரை நடனம்  மற்றும் வண்ணவிளக்குகள் அலங்காரம் முதலியவற்றை 
வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார் இப்படி அவர் பார்த்துகொண்டிருக்கும் வேளையில்  கபாலி அவரிடம் தன் கைவரிசையை  காட்டி அவர் பையில் இருந்த பணத்தை கன்யிமைக்கும் நேரத்தில்  அபகரித்து சென்றுவிட்டான் கபாலி  சிறிது நேரம் சென்றபிறகு  அன்பர் ஆனந்தன் தன் மழலை செல்வங்கள் விளையாடுவதற்காக  அருகில் இருந்த கடையில் பொம்மை ஒன்றை விலைபேசிவிட்டு தன் சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுக்க தன்சட்டை பைக்குள்  கைவிட்டார்  சட்டைப்பைக்குள் பணம் இல்லை அப்பொழுது திருவிழாவில்  தான் நாளெல்லாம் உழைத்து சம்பாதித்த பணம் களவு கொடுத்துவிட்டோமே என்று அனல்மேல் விழுந்த விட்டில் பூச்சி துடிப்பது போல் துடித்து  தன்னுள்ளம் வாடினார் ஆனந்தன் சற்றே தன்மனதை சாந்தபடுத்திகொண்டு நான்யாருக்கும் 
எந்தகெடுதலும் செய்யவில்லையே என்று  இறைவனிடம் 
முறையிடலானார் இந்த ஏழையிடம் களவாடிய  கொடியவன் யாராகயிருந்தாலும்  நான் இவ்வேளையில் எவ்வாறு துன்பபடுகிறேனோ அதுபோல் 
அக்கொடியவனும் இத்துன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்று இறைவன் அருட்பெருஞ்ஜோதியிடம்  தன்வேண்டுதலை வைத்துவிட்டு வீடுதிரும்பினார்  அன்பர் ஆனந்தன் 
ஒருமனிதன் உண்மை அன்பால் கடவுளை வேண்டினால் அவன் காரியம் அனைத்தினையும் கைகூட செய்வார்  என்பதற்க்கு எடுத்துகாட்டாக அன்பர் ஆனந்தன் வாழ்க்கையிலும் நடந்தது அது எவ்வாறுயெனில்  ஆனந்தன் திருவிழா பார்த்துவிட்டு வீட்டிற்க்கு வரும் வழியில் அன்புஉள்ளம் கொண்ட தனவந்தர்  ஒருவர் சீரிய தருமசிந்தனையோடு அன்னதானம் சொர்ணதானம்  ஆடை ஆபரணங்கள் சிறுபிள்ளைகள் விளையாடகூடிய விளையாட்டு  பொருட்கள் முதலிய  தான தருமங்களை செய்துகொண்டிருந்தார் இப்படி செய்துகொண்டிருக்கும் வேளையில் அவ்வழியாக வந்த ஆனந்தனை தனவந்தர் பார்த்து அன்பரே தாங்கள் 
ஏன் முகவாட்டத்துடன்  செல்கிறீர்கள் என்று கேட்டார்     ஆனந்தன் திருவிழாவில் நடந்தவற்றை ஒளிவுமறைவு இல்லாமல் கூறினான்  இதைகேட்ட தனவந்தர் தாங்கள் ஒன்றும் கவலைபடவேண்டாம் என்னிடம் ஆண்டவன் அருட்பெருஞ்ஜோதியின் கருணையினால் நிரைய செல்வங்கள்  இருகின்றன எனவே அன்பர் அவர்களே தங்களுக்கு தேவையானவற்றை பெற்று செல்லுங்கள்  என்றார்  தனவந்தர் கூரியத்தை கேட்ட ஆனந்தன் மகிழ்வுற்று  அவர் தமக்கு தேவையானவற்றை தனவந்தரிடம்  பெற்று கொண்டு இறைவன் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு நன்றி கூரி வீடு வந்து சேர்ந்தார்  அன்பர் ஆனந்தன். இதேவேளையில் கபாலி  தினந்தோறும் தான் களவாடிய பணத்தை கொண்டு துமார்க்க செயல்களில் ஈடுபட்டு அதாவது கள்குடித்தல் பிறர்மனைவியிடம் சகவாசம் கொள்ளுதல் 
போன்றவற்றில்  தன் வாழ்நாளை கழித்துவந்தார் கபாலிக்கு இப்பொழுது வயது முதிர்ந்து விட்டது  அவனால் இப்பொழுது நடக்ககூட முடியவில்லை தான் செய்த பாவத்தின்பலனாக வியாதியும் வந்துவிட்டது  அவன் உண்ண உணவுக்கு கூட வழியின்றி தவித்தான்  பாவம் என்று யாராகிலும் சிறிது உணவு கொடுத்தால் அதை அவனால் அருந்தகூடமுடியவில்லை  அப்பொழுது அவ்வழியாக  வெள்ளை நிற ஆடை  அணிந்த தபோசீலர்  வந்துகொண்டிருந்தார்  கபாலி தபோசீலரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி  அய்யா நான் இளமையில் செய்த கொடுஞ்ச்செயல்களினால் நான் அடைந்திருக்கும்  இந்நிலையை பாருங்கள் என்னை தாங்கள் தான் இந்நிலையிலிருந்து காப்பாற்றவேண்டும்  என்றான் இதை கேட்ட தபோசீலர் தாங்கள் செய்தபாப காரியங்களை நினைத்து எப்பொழுது 
தாங்கள்  வருந்தினிர்களோ    அப்பொழுதே உங்கள் உள்ளம் தூய்மையாகிவிட்டது   
 ஆனாலும் நம்மையெல்லாம் வழி நடத்திசெல்லும் வடலூர் அருட்பிரக்காச வள்ளலார் அருளிய அருட்பாவை தாங்கள் தினந்தோறும் ஜோதியின் முன்னாள் வாசியுங்கள் அப்பொழுதுதான் உங்கள் உடல் பூரண குனம்மடையும் என்றார் தபோசீலர்  கபாலி அன்று முதல் தினந்தோறும் காலையில் அருகில் உள்ள குளத்தில் நீராடி திருநீறு அணிந்து ஜோதியின் முன்னாள் அமர்ந்து அருளமுதமாம் அருட்பாவை வாசித்து வந்தான் இவ்வாறு அவன் செய்துவந்ததினால் அவனுடல் பூரண குனம்மடைந்தான் அன்றுமுதல் அவன் தன்னால் இயன்றவரை பிறருக்கு உதவிகள் செய்து அருளாளர் அருளிய ஜீவகாருண்ய சிந்தனையோடு 
வாழ்ந்துவந்தான்  
 
 எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்நாளில் ஜீவகாருண்ய சிந்தனையோடு வாழ்ந்து பிறர் பசியை போக்கி வந்தால் வாடியபயிரை கண்டு வருந்திய நமது வடலூர் வள்ளலார் வணங்கிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் நம்முள்  காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை  
 
ஆகவே பசி என்று யார்வந்தாலும் அவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
 
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல்
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
      
 
 
 
 
 
    
 
 
 
    

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

No comments:

Post a Comment