Pages

Wednesday, March 10, 2010

[vallalargroups:2741] Structure Of Dhavam ( தவத்தின் உருவம்)

இன்புற்று வாழ்க !!

பொதுவாக மக்கள் அனைவரும், ஒருவர் அணிந்து இருக்கும் உடையை வைத்தும் , வளர்த்து இருக்கும் முடியையும், தாடியையும் வைத்து , பல சின்னங்களை வைத்து  , பெரிய மகான் என்றும் ,பெரிய தவசீலர் என்றும் , பெரிய யோகியர் என்றும் , தன்னுடைய துன்பத்தின் காரணமாக , அவர்களிடம்(அயோகியர்களிடம்)  சிக்கி கொள்கிறார்கள்.

திருவள்ளுவர் "தவத்திற்கு" கொடுக்கும் உருவம்:
 
உண்மை தவம் செய்பவர்களின் "உருவத்தை" , திருவள்ளுவர் ,இரண்டே வரிகளில்  கிழ்கண்டவாறு நமக்கு எடுத்து காட்டுகின்றார் .
  1. நமக்கு வரும் துன்பத்தை பொறுத்து கொள்ளல்.
  2. பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது இருத்தல். 
"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுக்கண் செய்யாமை
 அற்றே தவத்திற்கு உரு. "              - திருக்குறள் (261) 

 
கேள்வி : திரு.மு.நமசிவாயம் அவர்கள் , கொசு கடித்தால் என்ன செய்வது எனக் கேட்டார்கள் ?
பதில் :  கொசு கடித்தால் பொறுத்து கொள்ள வேண்டும் . உணர்ந்தவுடன், ஊதி விட்டால் கொசு பறந்து விடும்.சிறியேன் அறிவிற்கு பட்ட வரை , இதுவே வள்ளுவர்,வள்ளலார் கூறும் தவத்தின் அடையாளம். (இதற்கு மேற்கண்ட குறளே ஆதாரம் )
 
உடையை(காவியோ / வெள்ளையோ / மற்ற நிறங்களோ ) வைத்து ஒருவரை எடை போடாமல் , இந்த "உயிர் இரக்க"  செயலை வைத்து உத்தமரை கண்டு கொள்ளலாம்.
 
ஏதேனும் , குற்றம் , குறை இருப்பின் மன்னிக்கவும்.
 
அன்புடன்,
கார்த்திகேயன்
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment