கருணைமிகு சதீஷ் அண்ணா,நல்ல செய்திக்கு நன்றி.இது கதை அல்ல.உண்மை சம்பவம்.பெயர்கள் மட்டுமே மாற்றம்.இரக்கம் உள்ள மனிதர்களுக்கு இது போன்றசம்பவங்கள் நடந்து இருக்கும். நடக்கும்.நாம் கொள்ளும் இரக்க பண்பு ஒருநாள் நமக்கு பெரிய உதவியை செய்யும்.அருள் நகரில் முருகன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான்.அவன் அந்த ஊரில் உள்ளபள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.அவன் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து இருந்தாலும்பிறருக்கு உதவி செய்து வாழ்ந்தான்.அவன் உணவை உண்ணும் போது அருகில் பறவையோ,விலங்கோ வந்தால் அவைகளுக்கும் கொடுத்து உண்பான். இவனே ஏழை,,இவன் பிறருக்கு தானம் செய்கிறான் எனபலரும் கிண்டல் செய்தனர்.அதனை பொருட்படுத்தாமல் பிறருக்கு உதவி செய்து வாழ்ந்தான்.ஒருமுறை ஒரு வெளியூர் பயணி இரவு நேரத்தில் தங்க இடம் இல்லாமல் ஒரு பெரிய வீட்டு திண்ணையில் படுத்து இருந்தார்.அவர் மிகவும் களைப்பாக பசியோடு இருந்தார்.அவரை அந்த வீட்டு செல்வந்தர் இது என்ன சத்திரமா? என விரட்டி விட்டார்.அதை பார்த்துகொண்டு இருந்த முருகன் தன் வீடுக்கு அழைத்து உணவு கொடுத்து படுப்பதற்கு அந்த சிறிய வீட்டில் இடமும் கொடுத்தான்.மறுநாள் காலையில் அந்த பயணியைசுற்றி பெரிய கூட்டம்.அதன் பிறகு தான் தெரிந்தது.அவர் இன்னொரு ஊரில் உள்ள பெரிய செல்வந்தர்.அவர் ஒரு பெரிய கூட்டதோடு பயணம் செய்தவர் வழி தெரியாமல் வந்து உள்ளார்.அவரை தேடி வந்த கூட்டம் தான் அது.அவர் கையில் பணம் இருந்தும் இரவு நேரத்தில் உணவு கிடைக்காமல் பசியில் வாடி இருந்த அவருக்கு உரிய நேரத்தில் முருகன் உணவு கொடுத்த காரணத்தால் அவர் மகிழ்ந்து அந்த சிறுவனின் படிப்புக்கு பண உதவி செய்தார்.அவனின் அப்பாவிற்கும் நல்ல வேலை வாங்கி கொடுத்தார்.அந்த சிறுவனின் இரக்க பண்பு தான் ஒருநாளில் அவன் வீட்டுவறுமையைபோக்கியது.பிறர் பசியை போக்க பணம் தேவை இல்லை.நல்ல இரக்க மனம் பிற ஜீவர்களின் பசியை போக்க முயலும்."பசித்தோரின் பசியை போக்குவதே கடவுள் வழிபாடு."-வள்ளலார்.by,Aruljothisujatha.
On 20/03/2010, Sathesh Kumar <satips@gmail.com> wrote:Dear All,
கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான்.
பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள்.
எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான்.
மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது.
அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.
--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
No comments:
Post a Comment