Pages

Tuesday, March 9, 2010

Re: [vallalargroups:2729] vallalar

நற்சிந்தனை: ஆன்மீக அரிச்சுவடி
யாழ்பாணத்து சுவாமிகளும், நந்திநாத சம்பிரதாயத்தின் கைலாச பரம்பரையின்
161ஆவது குருவுமான சிவயோக சுவாமிகளின் பாடல்களான "நற்சிந்தனை" என்கிற
தொகுப்புலிருந்து ஒரு பாடல்:

அன்பு சிவமென்ற ஆன்றோர் திருவாக்கை

இன்பமுடன் போற்றியிருப்பது எக்காலம்?

ஆதி அந்தமில்லாத ஆன்மாவை நாமென்ற

சேதி அறிந்து தெரிவிப்பது எக்காலம்?

இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்காத

செம்மலர் தாள்கண்டு சீவிப்பது எக்காலம்?

ஈசன் திருவடியை என்றும் மறவாமல்

வாச மலர்கொண்டு வணங்குவது எக்காலம்?

உருகி யுருகி உணர்விழந்து நின்று

பெருகி வருமமிழ்தைப் பருகுவது எக்காலம்?

ஊரும் பேருமல்லா ஒருவன் திருவடியை

நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம்?

எல்லா உயிரினும் நில்லாமல் நிற்பவனை

நினைந்து நினைத்துருகி நிற்பதுவு மெக்காலம்?

ஏக னேக னிறைவனடி வாழ்கவெனும்

மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம்?

ஐந்து புலன்வென்ற ஆன்றோர் திருவடிகீழ்

நைந்துருகி நின்று பெறுவதெக்காலம்?

ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று

அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம்?

ஓமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற

சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம்?


On 3/7/10, M.Sarathy Mohan <dmsarate@gmail.com> wrote:
> அன்புள்ள அன்பருக்கு ,
> அய்யன் உருவ வழிபாடு கூடவே
> கூடாது.இது அய்யன் கட்டளை.
> ஜோதி வழிபாடு மட்டுமே நன்று சன்மார்கிகளுக்கு .
>
> அன்புடன்
> சாரதி
>
> 2010/3/3 குருவே சரணம் <p.omguruvenamaha@gmail.com>
>
>> ஆன்மீக அன்பர்களே
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>>
>> எங்கே வள்ளலாரின் விக்ரகம் கிடைக்கும். specifically in ஐம்பொன்.
>>
>>
>> --
>> To register to this vallalargroups, and Old Discussions
>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>> To change the way you get mail from this group, visit:
>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment