Pages

Thursday, March 4, 2010

Re: [vallalargroups:2708] ஆன்மீக வாழ்க்கை

Inbutru Vazga,
 
அன்பர்களே ,
 
உண்மையை விரும்புவர்கள் , தேடுபவர்களுக்கு சன்மார்க்கம் ,எல்லாம் வல்ல  இறைவனால் காட்டி கொடுக்கப்படும்.

பொய்யை(போலி/பகட்டு/பந்தா) விரும்பும் மனிதர்கள் , பொய்யைத்தான் நாடி செல்வார்கள். அவர்கள் என்று சத்தியத்தை உண்மையை கடைபிடிக்க தயார் ஆகிறார்களோ , அந்த கணமே , இறைவன் கருணை செய்வார். 
 

என்னிடம், சில நபர்கள் கீழ்கண்ட கேள்விகளை பல நாட்களுக்கு  முன் கேட்டார்கள்?

கேள்வி:.சன்மார்க்கம் என்று கூருகிறீர்களே, ஏன் உங்கள்  சன்மார்க்கத்தில் குறைவான  மக்களே உள்ளார்கள்?

  1. சன்மார்கத்தில் "உண்மை" ஒன்று மட்டுமே உள்ளது.( ஆனால், பாமர மக்கள் பொய்யை கலந்து கொடுத்தால் தான், அதனை எடுத்து கொள்வார்கள் ).

     2.   சன்மார்கத்தில் "ஒழுக்கங்கள்" உள்ளது.   ( மற்ற மார்கங்களில் , அது "ரிலாக்ஸ்" ,  செய்யபடுவதால், மற்ற மார்கங்களை  பாமர மக்கள் விரும்புகின்றார்கள் ).

  1. சன்மார்கத்தில் "உயிர் இரக்கமே" உயிர் நாடி.( மற்ற மார்கங்களில் ,    இதனை மேலோட்டமாக கூருகின்றார்கள்.எனவே, அங்கு , கூட்டம்   அலை ,அலையாக  மோதுகின்றது).

   4.  சன்மார்க்த்தில் , "கொல்லாமை" அறம் வலிறுத்தபடுகின்றது.  .( மற்ற மார்கங்களில் , இதனை மேலோட்டமாக கூருகின்றார்கள்)

முடிவாக , அனைத்து மார்க்கங்களின் உள்ள நல்ல , தூய உண்மையை விரும்பும் ஆன்மாக்கள் சன்மார்க்கத்தை நோக்கி  ஈர்க்கக்கப்படுகின்றன



























உண்மையை விரும்புவர்கள் சிலராகவும் , பொய்யை விரும்பவர்கள் பலராகவும் இருப்பதால் , சன்மார்க்கத்தில் சிலராகவும் , மற்ற மார்கத்தில் பலராகவும் இருந்து கொண்டு  இருக்கின்றார்கள் 



"பொய்யர்க்கு பொய்யன்.
பொருந்தி உளம் தேறும் மெய்யர்க்கு மெய்யன்"

anbudan,
karthikeyan



2010/3/4 kumaresan krishnamurthy <kumaresh.bcet@gmail.com>
                     ஆன்மீக வாழ்க்கை

காவித்துணியைக் கட்டிக்கொண்டு, ருத்ராட்சத்தை அணிந்துக்கொண்டு உருவ
வழிப்பாட்டை வலியுறுத்தி, ஜோதி பரம்பொருளை மறைக்கும் செயல்களில் ஈடுபட்டு
வரும் போலி சாமியார்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.
இது போன்ற போலி சாமியார்களை நாடாதீர் என்று பல கட்டுரைகள் இதே தளத்தில்
வெளிவந்திருக்கிறது. இறைநிலை, பரஞானம், மற்றும் டான் ஆஃப் விஷ்டம் (Dawn
of Wisdom).

 மக்களின் ஜீவ காருண்ய கருணையில்லாத வாழ்க்கை முறை மற்றும் சுயநலத்துடன்
கூடிய தனி மனித ஒழுக்கமில்லாத வாழ்க்கையே பல பிரச்சனைக்களுக்கு
வழிவகுக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி  போலி தியான மையங்களும்
நாள்தோறும் தெருவிற்கு தெரு பெருகி வருகிறது.

எத்தனை, எத்தனை தியான மையங்கள்? ஆனால் அவர்கள்  தனி மனித ஒழுக்கம்,
ஜீவகாருண்யம், பரோபகாரம் -அன்பு இருந்தால் போதும் இறைவன் உங்களை நாடி
வருவார். நீங்கள் இறையை நாடி செல்ல தேவையில்லை என்று ஒரு போதும் சொல்ல
மாட்டார்கள், மாறாக என்னை நாடுங்கள் நான் வழி சொல்கிறேன், என்று மக்களை
பல வழிகளில் ஏமாற்றி வருகின்றனர்.

மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம். ஆனால் செம்மையான –
புனிதமான- பரிசுத்தமான மனம் இல்லாமல் இறையை எவ்வாறு கண்டுக்கொள்ள
முடியும். இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறார். நம்முள்ளும்
இருக்கிறார். மேலும் இங்கு செம்மையான மனம் என்பது பிற உயிர்களின்
துன்பத்தை நீக்குவது ஆகும்.

எனவே இனியாவது மக்கள் திருந்தி சுத்த சன்மார்க்கத்தை நாடி வர வேண்டும்.

--
.K.Kumaresan,

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment