Pages

Saturday, February 20, 2010

[vallalargroups:2686] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!


                                               
       அருட்பெரும் ஜோதி    அருட்பெரும் ஜோதி
        தனிப்பெரும்கருணை  அருட்பெரும் ஜோதி 
 
       கொல்லா  விரதம் குவலயம்மெல்லாம்  ஓங்குக
       ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல்
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம்
 
அன்பு உள்ளம் கொண்ட ஆண்மீக அன்பர்களுக்கு இது உங்கள் கவனத்திற்கு ஒரு ஏழை பசியினால் வாடும் போது எதிர்வீட்டில் வாழும் தனவந்தர் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இருந்தால் அந்த தனவந்தர் பிற்காலத்தில் எந்த நிலை அடைவார்  என்பதை உணர்த்தும்  ஒரு சிறு கதை 
 
அன்பர்களே முன்பு ஒரு காலத்தில் நாவலூர் என்ற நல்ல சிற்றூர்  அங்கே ஆறுமுகம் என்ற அன்பர் தன்மனைவி பிள்ளைகளுடன் 
எப்பொழுதும்  இறை சிந்தனையோடு நலமுடன் வாழ்ந்து வந்தார்கள்
அன்பர் ஆறுமுகம் தினந்தோறும் அருகில் உள்ள வயல்வெளியில் கூலி வேலை செய்து  அதில் வரும் வருமானத்தை கொண்டு தன்குடும்பத்தை நல்லமுறையில் நடத்திவந்தார் மற்றும்  அவர்தம் இல்லம் நாடி வரும் சிவனடியார்களுக்கும் யோகிகளுக்கும் பாமரர்களுக்கும் பக்தர்களுக்கும் பிர உயிர்களுக்க்ம்  பசி என்ற நோய்க்கு உணவு என்னும் அருமருந்தை கொண்டு அவர்களின் பசிப்பிணி நீக்கி அவர் எப்பொழுதும் அருட்பெரும்ஜோதியின் சிந்தனையோடு வாழ்ந்துகொண்டிருந்தார் இப்படி அவர் வாழ்ந்துவரும் வேளையில் இறைவனின் சோதனையாக மழைகாலம் வந்துவிட்டது அவருக்கு வயல்வெளியில் வேலையெதுவும் கிடைக்கவில்லை அவருக்கு ஒரேகவலை என்னவென்றால் நாம் பசித்திருக்கலாம் நம்முடையமனைவிமக்கள் பசித்திருக்கலாம் ஆனால் பசிஎன்று வரும் ஆண்டவனின் அடியார்களுக்கு உணவு இல்லை என்ற சொல்லை எண் நாவல் எப்படி எடுத்துரைப்பேன் இறைவா என்று அருட்பெரும் ஜோதியை தன்மனதில் தியாநித்தவாறு எல்லாம் திருவருளின் சித்தம்படிதான் நடக்கும் என்று  தன்முகம் வாடியநிலையில் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் அதேவேளையில் அவர்தம் எதிர்வீட்டில் வாழும் தனவந்தர் காளியப்பன் தருமசிந்தை என்பது கடுகளவும் இல்லை ஆனால் அவரிடம் செலவங்கள்  மலைபோல் கொட்டிகிடந்தன அவைகளால் ஒருபயனும் இல்லை அவரிடம் இறை சிந்தனைசிறிதும்  கிடையாது த்ருமசின்தனை கடுகளவும் கிடையாது அவர் எப்பொழுதும் விலைமாதர்களின் சகவாசத்தோடும் மது  மாமிசம் 
போன்ற ஆகாரங்களை உண்டு  துற்குனத்தோடு கூடிய நண்பர்களின் உறுதுணையால் ஆணவமே உருவாக வாழ்ந்துவந்தார்  இரவு ஒரு ஏழுமணி இருக்கும் மதுமயக்கத்தோடு காளியப்பன் தன்வீட்டின் எதிர்தின்னையில் முகவாட்டத்தோடு அமர்ந்திருந்த ஆறுமுகத்தை பார்த்து என்ன தருமபிரபுவே  சோகமாக இருக்கிறாயே  உன்தருமம் உன்னை காக்கவில்லையா என்று எள்ளி நகையாடியவாறு வந்தான் 
ஆறுமுகம் காளியப்பனை பார்த்து அய்யா செல்வந்தர்  தங்களிடம் நிறைய பொன்பொருள் கொட்டிக்கிடக்கின்றன  இவற்றை கொண்டு ஒரு அன்ன சத்திரம் அமைக்கலாம் அதனால் பல உயிர்கள் பலனடையும்  அதைவிடுத்து இப்படி தாங்கள் தீய வழியில் சென்று உங்களை அழித்து கொள்வதுடன் உங்களின் மனைவி மக்களையும் வேதனை அடைய செய்கிறீர்களே  என்றார் ஆறுமுகம் இவற்றை எல்லாம் காளியப்பன் தினையளவும் தன் செவிமடுக்கவில்லை இப்படியே சிலகாலம் உருண்டோடின  ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் நல்வினை தீவினை அவனை பின்தொடரும் அதைப்போலவே ஆறுமுக அன்பர் அருட்பேரும்ஜோதி ஆண்டவனின் அருளாசியினால் வாழ்வில் எல்லா நலமும்  பெற்று அன்ன சத்திரங்கள் வைத்து அங்குவரும் அடியார்களுக்கு எல்லாம் உணவு என்னும் அமுதை கொடுத்து  சந்தோசத்தோடு வாழ்ந்துவந்தார்  அதே வேளையில் எதிர்வீட்டில் வாழ்ந்த தனவந்தர் காளியப்பன் அவர்தம் செய்த தீய செயல்கள்  அவருக்கு வயது ஆக ஆக  தொற்றுநோய்  போன்ற கடும் வியாதியினால் அவதிபடலானார்  இப்பொழுது அவரிடம் நோய்தான் மலைபோல்கொட்டிகிடந்தன இவரிடம் இளமையில் செல்வங்கள் 
பெற்றுகொண்டு  சீராட்டிய சீமாட்டிகள் எல்லாம் இப்பொழுது  இவரை வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள் இவருடன் சேர்ந்து மதுபோதை உண்ட நண்பர்கள் எல்லாம் இவரிடம் பணம் இல்லை என்றவுடன் பட்டாய் பறந்துவிட்டார்கள்   காளியப்பன் இபோழுது உன்ன உணவுக்கு கூட வழியில்லாமல் இருந்தான் அப்பொழுது அன்பர் ஒருவர் காளியபனிடம் பக்கத்து தெருவில் அன்னசத்திரம் ஒன்று உள்ளது வாருங்கள் அங்கு சென்று நாம் பசியாறலாம் என்று அழித்து சென்றார் அந்த அன்பர் அங்கு சென்ற காளியப்பனுக்கு ஆச்சிரியம் தன் எதிர்வீட்டில் குடியிருந்த ஏழை ஆறுமுகம் தான் அங்கே அன்னசத்திரம் நடத்துவதை வியந்துபோனார்  தான் முன்பு பேசிய வார்த்தைகள் நடந்துகொண்டவிதங்கள்  எல்லாவற்றையும் நினைத்து நாணி வெக்கி  நின்றார்  அவர் அருகில் வந்த ஆறுமுகம் தன்யிருகரங்களால் பிடித்து காளியப்பனை உள்ளே அழைத்து  சென்று பலகாரங்கள் பலவற்றை பரிமாறி அவரின் பசியை போக்கினார் பிறகு நலம் விசாரித்து இப்பொழுது அவரின் நிலையை உணர்ந்து அவரை தன்சதிரத்திலே தங்கவைத்து வைத்தியம் செய்து அவரின் நோயை குனம்மடையசெய்தார் இவ்வாறு செய்த ஆறுமுகத்திற்கு 
உறுதுணையாக காளியப்பன் இறுதி வாழ்நாள் வரை  இறைவன் அருட்பெரும்ஜோதியின் சிந்தனையோடு இருவரும் சீறும் சிறப்புமாக வாழ்ந்தார்கள்  
 
எனவே அன்பர்களே நாமும் பசி என்று வந்தவர்களுக்கு அவர்தம் பசியை போக்கி வந்தால் இறைவன் அருட்பெரும்ஜோதியின் கருணையினால் நாம் நம் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ்வோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை
 
பசி என்று வந்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்!
 
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல்!
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ .இளவரசன்
நெ.34,அன்ன தெரு 
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்,
சென்னை-600 043
கைபேசி: 9940656549,9677160065 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment