2470
திருக்கண்ணமங்கை
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தௌ;ளமுதே
மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே
திருச்சிற்றம்பலம்
-------------------
இந்தப் பாடல் திருஅருட்பாவா?
இந்தப் பாடலை பெருமான் எப்போது பாட்டினார்கள்?
இந்தப் பாடலில் வரும் "திருவே கண்மங்கைத் தாயே" என்பது யார்?
நன்றி
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment