1. நான் யார்?
2.நான் என்ன செய்ய வேண்டும்?
இவற்றிர்க்கு விடை:
1. பிரபஞ்சம் பூராவும் பரவி நிற்கும் மகா சக்தியில் நான் ஒரு துகள்.
2. எத்துணைப் பிறவி எடுப்பினும் அத்துணைப் பிறவியிலும் என் கடன் பணி
செய்து கிடப்பதே.
அம்மகா சக்தியின் துகளாகிய நாம் ஒவ்வொருவரும்(அம்மகா சக்தியைப் போன்றே)
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியே, மலத் திரைகள் நம்மை
மறைக்காதிருக்கும் வரை.
பணி செய்யும் மனம் கருணையின் விளைவு.
எனவே வள்ளலார் மனிதனுக்குத் தெரிந்திருக்க வேண்டிய இவ்விரண்டு
செய்திகளையும் மகா மந்திரமாக்கி,
"அருட்ப் பெருஞசோதி"
"தனிப் பெருங்கருணை" என்றார்.
இதனையே மணிவாசகப் பெருமான்,
1."ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி",
2."பெருங்கருணைப் பேராறு"
என்று இரு வரிகளில் கூறினார்.
வள்ளலாரின் வாய்ச் சொற்கள் மணிவாசகருக்குச் சொந்தமானவையே.
"ஆதியும்.........சோதி" என்பதனையும்," "என்று நீ அன்று நான்" என்ற
தாயுமானாரின் வாக்கையும் இணைத்துப் படித்தால், நாமும் இறையே என்பது
விளங்கும்.
அன்புடன்,
கோவிந்தராசன்.
On 2/4/10, Mahesh kumar <velmahesh@gmail.com> wrote:
> அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
>
> * *
>
> சிறப்பு விளக்கம் தருக ..
>
> *"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "
>
> *
> நமது வள்ளல் பெருமான் *"அருட்பெருஞ்ஜோதி மகா வாக்கியம் "* எதற்காக
> அருளினார்கள்..மேலும் "*தனிப்பெருங்கருணை *" காரணம் என்ன?
>
>
> அன்புடன்
> velmahesh
>
> --
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment