Pages

Thursday, December 3, 2009

[vallalargroups:2463] அன்பும் சிவமும் ஒன்றே அன்பு வேறு சிவம் வேறல்ல

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

அன்பும் சிவமும் ஒன்றே !

அன்பே சிவம் என்பதே சன்மார்க்கத்தின் முடிந்த முடிபான கொள்கை.
அன்பும் சிவமும் ஒன்றே அன்பு வேறு சிவம் வேறல்ல
அப்படிப்பட்ட அன்பு மனிதர்களிடம் அவர்களது பக்குவ நிலைக்கு ஏற்ப
ஒவ்வொரு வடிவில் வெளிப்படுகிறது.
உயர்ந்த ஞான  நிலையில் உள்ளவர்களுக்கு 
அது ஜீவகாருன்யமாக அருளாக வெளிப்படுகிறது.
பக்குவப்பட்ட ஆன்மாக்களிடம் சுத்த அன்பாக வெளிப்படுகிறது.
பக்குவம் இல்லாத ஜீவர்களிடம் அது காமமாக வெளிப்படுகிறது.
அன்பின் உயர்ந்த நிலை ஜீவகாருண்யம்.
அன்பின் கீழ் நிலை காமம். 

அன்பின் கீழ் நிலையான காமம் ஏன் நம்மை பற்ற வேண்டும் ?
காரணம் நாம் அனைவரும் காமத்தினால் பிறந்தவர்கள்.
மேலும் நம்முடைய உடலில் 
ஆணாக இருந்தால் பெண் தன்மையும்
பெண்ணாக இருந்தால் ஆண் தன்மையும்
பிறக்கும் போதே நமது  உடலில் இணைந்துள்ளது.

மேலை நாட்டு மனோ தத்துவ ஞானி சிக்மன்ட் பிராய்ட் 
நமக்கு  காமம் ஏறபட முதல் காரணம் நாம் குழந்தையாக இருந்த போது
நாமருந்திய தாய் பாலில் ஆரம்பிக்கிறது என்று ஆராய்ச்சி செய்துள்ளார்.
அதற்கு முன்பே  நமது வள்ளல் பெருமானாரும் 
குழந்தை பருவத்தில் பால் உணும் போதே  
அதில் அருவருப்பு ஏற்பட்டதாக எழுதி உள்ளார்கள்.
அவர்தான் கருவிலேயே திருவை அடைந்தவர் ஆயிற்றே.
ஆகவேதான் காமத்தை பால் உணர்வு என்று 
நமது தமிழில் காரண பெயராக அமைத்தார்கள்.

மேலும் திருவள்ளுவ தேவரும் 
மாதாந்த ரத்தமல்லோ சடலமாச்சு
என்று எழுதி உள்ளார்கள்.
அதாவது ஆணின் சுக்கிலம் பெண்ணின் சுரோநிததுடன் 
சேர்ந்து குழந்தையாக உருவெடுக்கிறது.
அந்த குழந்தை தாயின் ரத்தத்தினால் வளர்க்கப் படுகிறது.
அப்படி வளர்ந்த குழந்தை எப்படி காம வயப்படாமல் இருக்கும்.

ஆகவேதான் சித்தர்கள் இந்த காம உடலை 
தூய உடலாக மாற்றிக்கொள்ள வழி கண்டார்கள்.
தூய உடலாக மாறுவதற்கு மனம் ஒரு பெரிய தடையாக 
இருந்ததனால் முதலில் மனதை தன் வசப்படுத்தி 
அறிவே வடிவாக மாறினார்கள்.
சித்தர்கள் என்றால் அறிவே வடிவானவர்கள் என்று பொருள்.

நமது மனம் மட்டுமே உருவ பேதம் மற்றும்  
பால் பேதம் பார்க்கும் தன்மை உடையது. 
மனம் அறிவின் வழி நடக்க தொடங்கினால் 
பேதம் நீங்கி அனைத்து உயிர்களையும் 
சகோதர உயிராக காண தோன்றும்.
அங்கு அன்பு ஊற்று எழும்.
அன்பு ஊற்று எழும் நிலையில் அடுத்து
ஜீவ  காருண்யம் நம் நிலையாக ஒன்றி விடும்.
 ஜீவ காருண்யமே வடிவாக மாறினால் 
உயிர்களை தானாக காணும் ஒருமை தானே வந்தெய்தும்.

ஒருமை வந்தால்  இறை  அருள் தானே வரும்.
இறை அருள் வந்தெய்தினால் 
சிவமும் நாமும் ஒன்றாவோம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

 
 

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment