உலகத்துக்காக பிரார்த்திப்போம்
ஆகஸ்ட் 08,2008,19:43 IST
அருள் என்பது கடவுளின் கருணையாகும். அந்த அருளை எவ்வாறு பெறக்கூடும்? சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெருவெளிச்சத்தைப் பெறுவதுபோல, சிறிய கருணையாகிய உயிர்கருணையைக் கொண்டு இறைவனின் அருளாகிய தனிப்பெருங்கருணையைப் பெற வேண்டும். நன்மை என்பது புண்ணியம் தருவது. தீமை என்பது பாவத்தைத் தருவதாகும். புண்ணியம் தொடக்கத்தில் துன்பமாக இருக்கும் முடிவில் இன்பத்தைக் கொடுக்கும். பாவம் என்பது தொடக்கத்தில் சுகமாகவும், பின்னர் துன்பத்தில் முடிவதாகவும் இருக்கும். ஒருவன் பிரார்த்தனை செய்வதாக இருந்தால் அவனுக்காக மட்டும் செய்தல் கூடாது. இந்த உலகம் எல்லாம் வாழும்படியாக பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் அவனுக்கு வேண்டிய நன்மையெல்லாம் அதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லா உயிர்களையும் தம்முயிராக பாவிக்கவேண்டும். அவற்றை வணங்குவது இறைவனை வணங்குவதற்கு சமம். கள், காமம், கொலை, களவு, பொய் இவ்வைந்தும் ஒருமனிதனுக்கு கொடிய துன்பங்களைக் கொடுக்கக்கூடிய பஞ்சமகாபாதகங்களாகும். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அதனால் இவ்வைந்தில் ஒன்று கூட உங்களை நெருங்காவண்ணம் பாதுகாத்துக் கொள்ளுங்கள் --
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment