Pages

Monday, November 23, 2009

[vallalargroups:2420] Re: திருநீறு ( விபூதி ) தத்துவம்

அன்புள்ள ஆறுமுக அரசு அவர்களுக்கு,
வீபூதி தத்துவம் அற்புதம்!
மூன்று பட்டைகள் போடுவதின் விளக்கம் என்ன?
தயை கூர்ந்து பதிலளிக்கவும். அதேபோல்
நாமத்திற்கும் விளக்கமளிக்கவும்.
நன்றி!
 
   இப்படிக்கு,
ந.ராஜராஜன்
செல்: 9791038178

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

21 நவம்பர், 2009 6:11 pm அன்று, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> எழுதியது:
திருநீறு ( விபூதி ) தத்துவம் 

பதி - பசு - பாசம் என்கின்ற சைவ தத்துவத்தில் 
பதி என்பது இறைவனையும் 
பசு என்பது ஜீவர்களான மனிதர்களையும்
பாசம் என்பது மனிதர்கள் உலகின் மீது வைத்துள்ள பற்றுக்களையும்
( பாசம் என்றால் கயிறு என்று பொருள் படும்)
பசு ஆகிய மனிதர்கள் பாசம் எனப்படும் உலகியல் பற்றுகளில்
கட்டுண்டு பிறவி துன்பத்தில் அவதி பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
சாதாரணமாக் திருநீறு எனப்படும் விபூதி எப்படி தயாரிக்கிறார்கள் என்றால்
பசு மாட்டின் சாணத்தை வரட்டியாக்கி பின்னர் அதை எரித்து
அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வாசனை திரவியங்களை 
சேர்த்து இறைவனுக்கு படைத்து பின்னர் அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

இதில் உள்ள தத்துவம் 
பசு என்பது ஜீவர்களாகிய மனிதர்கள்
பசுவின் சாணம் (மலம்)  என்பது மனிதர்களை பற்றிய மலமாகிய
ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் 
ஆகியவற்றை ஞானம் என்னும் தீயினால் எரித்தால்
அசுத்தமான மலம் எரிக்கப்பட்டு சுத்தமான சாம்பலாக மாறுவது போல்
நம்மி பற்றிய அசுத்தங்கள் நீங்கி சுத்த நிலையினை அடையலாம்.

இது வரை பதி ஆகிய இறைவனை நினைக்க விடாமல் தடுத்த
மலம் ஆகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நீங்கி
இறைவனே நம்மை எடுத்து ஆட்கொள்வார்.

ஆகவே நாமும் நம்மிடம் இருக்கும் அசுத்த மாயை நீங்கி
இறை நிலையை அடைய முயற்சிப்போம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.
 
 

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு




--



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment