அன்பு சன்மார்க்க அன்பர் கருணை மிகு ஜோதி மைந்தன் அவர்களுக்கு,
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
நமது சன்மார்க்க அன்பர்கள் தவறான கருத்துகளை
பொருளாக கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால் தான்
உண்மையை எடுத்து சொன்னேன்.
மற்றபடி யாரையும் குற்றம் காண்பது எமது குறிக்கோள் இல்லை.
அவரை குறை சொல்லாமல் இவரை குறை சொல்கிறீர்களே என்று
தாங்கள் கூறுவது எனக்கு வியப்பாக இருக்கிறது.
முதல் கட்டுரையில் தங்கம் போல் பிரகாசிக்கும் என்றால்
தங்கம் என்பது இருட்டில் வைத்தால் பிரகாசிக்கும் தன்மை இல்லாதது
என்பது அனைவரும் அறிவர். ஒளி இருந்தால் மட்டுமே
தங்கம் அந்த ஒளியின் தன்மையை பிரதி பலிக்கும்.
அதுபோல் மனம் அதன் அசுத்தம் நீங்க பெற்றால்
ஆன்மாவின் ஒளியை பிரதி பலிக்கும்..
ஆன்மாவின் ஒளி இல்லை என்றால்
மனம் ஒரு உட் பொருளாக மட்டுமே இருக்கும்.
அடுத்த கடிதத்தில் திரு. ஜ. நா. அவர்கள்.
புனையுருவிலுள்ள குருக்களை நம்பி வழிதவறிக் கெடுவதைவிட, வள்ளலார் சுட்டும் வழியில் நம் ஆழ்மனத்தின் உள்ளொளி கொண்டு அறிவு காட்டும் பாதையில் சென்று ஞானம் பெறுவது சிறக்கும்
என்று கூறி இருந்தார்கள்.
இந்த கடிதத்தில் ஆழ் மனதின் உள்ளொளி கொண்டு என்று
ஆழ் மனத்திற்கு ஏதோ சுய ஒளி இருப்பது போல்
எழுதி இருந்தார்கள்.
அதில் வள்ளல் பெருமான் சுட்டும் ஆழ் மனதின் உள்ளொளி
என்ற வார்த்தை பொருந்தாதாக இருந்ததால்
ஆழ் மனதிற்கு உள்ளொளி இருப்பதாக
நமது வள்ளல் பெருமான் கூறவில்லை என்று கூறினேன்.
இதற்க்கு இடையில்
நீங்கள் திருவிளையாடல் புராணத்தில்
வருவது போல சொற் குற்றம் பொருட் குற்றம்
பற்றி எழுதி இருககிறீர்கள்.
இது எனக்கு மேலும் வியப்பை அளிக்கிறது.
ஆகவே குற்றம் காண்பது எனது வேலை இல்லை என்பதை
தெளிவு படுத்தவே இவ்வளவும் எழுத வேண்டியதாகி விட்டது.
மன்னிக்கவும்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2009/11/16 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,குரு என்பவர் நடை முறையில்இரு வகையாக பிரிக்கப் படுகிறார்.காரிய குரு, காரண குரு.ஞானத்தை தேடுபவர்கள்வாழ்வியலில் உள்ள உலகியல் குருக்களைவிடுத்து சூக்குமமாய் உள்ள ஆன்மா குருவைசரண் அடைந்தால்அந்த ஆன்மா குரு நமக்குஉண்மை வழியை காட்டுவார்.வாழ்வியலில் உள்ள குருக்களின் அனுபவங்கள்மாயை வயப்பட்டது. ஏனென்றால் வாழ்வியலில்உள்ளவர்கள் முழு ஞானத்தை அடைவது என்பதுமிகப்பெரிய சவால்.அப்படி வாழ்வியலில் உள்ள உண்மை குருவின் தன்மைஉலக விஷங்களை நாடாது.அவருடைய அறிவு ஆன்மா அறிவாக இருக்கும்.ஆகவே நாம் ஞான பாதையில் முன்னேறசரியான குரு சூக்கும நிலையில் உள்ளஆன்மா அறிவென்னும் குருவாகும்.அதே போல் வாழ்வியல் குருக்களின்அனுபவங்கள் நமக்கு பாடமாக அமைவதை விடநமக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லையே என்றுநமக்கு நம் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி விடும்.நமது அனுபவத்தை மற்றவரின் அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்த்துஅவரின் அனுபவம் எனக்கு ஏற்பட வில்லையே என்றுநம்மை வழி திருப்பி விட்டுவிட வாய்ப்பு உள்ளது.ஆகவே ஒவ்வொருவரும் நம்மிடம் சூக்குமம் ஆக உள்ள ஆன்மா அறிவின் துணை கொண்டு ஞான அனுபவத்தை பெற முயல்வோம்.அன்புடன்விழித்திரு ஆறுமுக அரசு
2009/11/16 Arumugha Arasu.V.T <arvindhoffset@gmail.com>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,ஒன்றான சிவம் அசைவற்ற நிலையில் உலகம் என்ற ஒன்று இல்லை.அதன் அசைவின் பயனாய் சக்தி என்ற ஒன்று தோன்றியது.அதுவே ஆன்மா. அசைவின் காரணமாய் அது சுத்த மாயை வயப்பட்டது.நமது மனதை ஜீவனிலும்,ஜீவனை ஆன்மாவிலும்ஆன்மாவை சிவத்திலும்சேர்க்கின்ற ஜீவ ஐக்கியத்தைகாலம் காலமாக சமாதி நிலை என்று நமது பெரியவர்கள் வழங்கி வருகிறார்கள்.சமாதி என்பது மனம், அறிவு, ஜீவன், ஆன்மா ஆகிய எதுவும்இயங்காமல் சிவத்துடன் கலந்த நிலை ஆகும்.இதைதான் சித்தர்களும் ஞானிகளும்பக்குவப்பட்ட ஜீவர்களுக்கு போதித்து வந்தார்கள்.ஆக இந்த இயக்கமற்ற நிலைக்கு செல்ல வல்லவர்முக்தி நிலை பெற்றவர்.இதற்க்கு மேலான நிலை பக்குவப்பட்ட ஜீவர்களுக்கும், விட்ட குறை உள்ளவர்களுக்கும் விளங்கும்.அன்புடன்விழித்திரு ஆறுமுக அரசு.2009/11/14 Jyothimaindhan palani <jyothimaindhan@gmail.com>
கருணைமிகு நம்மவீர் வந்தனம்,
மோகன் சுரேஷ் அவர்கள் " மனம் அழுக்கு நீங்கப் பெற்று ஒளியுடன்
பிரகாசிக்கும்" என்றார். மனதைப் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை சிறப்பாக
இருந்தது. அடுத்ததாக இந்தக் கருத்தை வி.ஆ.அரசு அவர்கள் அற்புதமான
கருத்துக்கள் என்றார். அதற்கடுத்ததாக ஜ.நா.சாமி அவர்கள் இந்த
கருத்துக்களை "ஆழ்மனத்தின் உள்ளொளி" என்ற வார்த்தைகளை பயன்படுத்தி
பின்பற்றக் கேட்டுக் கொண்டார். இந்த வார்த்தையில் பொருள் குற்றம்
இருந்தால் அதை மோகன் சுரேஷ் அவர்களின் "அழுக்கு நீங்கப் பெற்று ஒளியுடன்
பிரகாசிக்கும் " என்ற வார்த்தைகளை கண்டபோது பாராட்டி வெளீயிட்ட
வ்மரிசனத்திலேயே மன ஒளி பற்றிய கருத்தை வெளியிட்டிருக்க வேண்டும். அதே
சமயம் சொற்குற்றமாக கருதவும் இடமில்லை.
என்பதை சுட்டிகாட்டவே யாம் வள்ளலார் அகவல் வரிகளை வெளியிட வேண்டியிருந்தது.
மனத்திற்கு சுயஒளி கிடையாது என்பதை அனைவரும் அறிவர். ஜ.நா. சாமி
அவர்களும் அதை சுய ஒளி என்று குறிப்பிடவில்லை. நிலவொளி,கண்ணொளி,விளக்கொளி
போன்ற வார்த்தைகளை நாம் பயன் படுத்துகிறோம், இவையெல்லாம் சுயஒளி பெற்றவை
அல்ல. அதை நாம் சொற்குற்றமாகவோ,பொருட்குற்றமாகவோ யாரும் கருதுவதில்லை.
மனதில் அருள் ஒளி ஏற்றப்பட்டுள்ளது என்று வள்ளல் பெருமான் பல இடங்களில்
குறிப்பிடுகிறார். அதை விரிக்கில் பெருகும். அனைவர் உள்ளத்திலும் ஒளி
ஏற்றப் படவேண்டும் என அனைவரும் எதிர்ப்பார்க்கிறோம். மனம் என்றாலேயே அது
தவறான வழியில்தான் செல்லும் என்று முடிவுக்கு வந்து விடுவதும்
ஏற்புடைத்தல்ல. இவைகளை மனதில் கொண்டுதான் யாம் சத்விசாரத்தன்மையை நினைவு
கூர்ந்தோம். இந்த சத்விசாரத்தில் கலந்து கொண்ட தாங்கள் மூன்று பேரும்
மிகச்சிறந்த ஆய்வுக் கருத்துக்களை இந்தப் பகுதியில் வெளியிட்டு
வருகிறீர்கள். யாம் கூர்ந்து நோக்கி வருகிறோம். இவ்வளவு சிறப்பான
கருத்துக்களை , ஆய்வுகளை வெளியிட்டு வரும் தங்களுக்குள் கருத்துக்கள்
வெவ்வேறாக திசைமாறி போய் விடக்கூடாது, அது சன்மார்க்கத்திற்கு நன்மை
பயக்காது என்ற உள்ளார்ந்த அன்பின் நோக்கமே இரண்டுமுறை எம்மை விவரிக்கப்
பணித்தது.
என்றென்றும் சன்மார்க்கபணியில்,
ஜோதிமைந்தன்.சோ.பழநி.
On 11/14/09, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> wrote:
> அன்பு சன்மார்க்க அன்பர் கருணை மிகு ஜோதி மைந்தன் அவர்களுக்கு,
>
> முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
> என்னுள வரைமேலெழுந்த செஞ்சுடரே
>
> நமது வள்ளல் பெருமானின் வரிகளுக்கு
> முன்னுறு மல இருள் என்றால்
> நமது ஆன்மா ஒன்றான சிவத்திலிருந்து பிரிந்து
> ஜீவன் என்ற நிலையை அடைந்து
> உடல் எடுத்தது. அந்த உடலுடன் அறிவும் சேர்ந்தது
> அறிவு தன்னுடைய நிழலாக மனதை கொண்டது.
> நமது ஆன்மா சிவத்திலிருந்து பிரிந்த போது
> சுத்த மாயை வயப்பட்டது.
> ஜீவன் நிலைக்கு இறங்கிய போது அசுத்த மாயை வயப்பட்டது.
> காரணம் ஜீவன் உடல் எடுக்கும் போது மனம் எனும் அசுத்த மாயையும்
> கூட வந்ததுதான்.
> மனதின் வழி சென்ற ஜீவன் தன் செய்கையால் (கர்மங்களால்)
> நல் வினை தீ வினை என்ற வினைகளை சேர்த்துக்கொள்ள தொடங்கியது. இதன் பயனாய் பிறவி
> பிணி நம்மை தொடர தொடங்கியது.
> இந்த பிறப்பிற்கு வித்தான அசுத்த மாயையான இரு வினையினை தான்
> நமது வள்ளல் பெருமான் முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே
> என்னுள வரை என்பது என்னுடைய உள்ளில் விளங்கும் ஆன்மா வரை
> மேல் எழுந்த செஞ்சுடர் என்பது
> உள்ளே விளங்கும் ஞான சபையில் செஞ்சுடர் அனுபவத்தை
> ஆன்மா அனுபவிப்பதை குறிக்கிறது.
> அதே போல்தான்
> ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
> ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்த மெய்ச்சுடரே
>
> உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
> வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே.
>
> இந்த இரு வரிகளுக்கு
> ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய் சுடரே
> ஆன்மா ஜோதி தரிசனம் பெற்ற அனுபவமும்
> உள்ளொளி ஓங்கிட என்பதற்கு
> ஆன்மா மாயையால் மறைப்புண்டு இருப்பதனால்
> அதன் ஒளி மங்கி இருக்கிறது.
>
> அசுத்த மாயை விலகினால் ஆன்மாவின் ஒளி ஓங்கி ஒளி விடும்.
> அதன் பயனாய் உயிர் எனும் ஜீவனும் ஒளி பெறும்
> அப்படிப்பட்ட மாயை வென்றதனால்
> சிவத்தின் உண்மை ஒளியான வெள்ளொளி தரிசனம்
> பெற்றதனை குறிப்பிடுகிறார்.
>
> ஆகவே
> ஆன்மாவிற்கு மட்டும்தான் ஒளி உண்டே தவிர
> மனத்திற்கு ஒளி இல்லை என்பது தெளிவாகும்.
>
> அன்புடன்
> விழித்திரு ஆறுமுக அரசு
>
>
>
>
>
> 2009/11/11 Jyothimaindhan palani <jyothimaindhan@gmail.com>
>
>> கருணைமிகு அன்பர்களே, வந்தனம்,
>> சன்மார்க்க விஷயங்களை அன்பு கூர்ந்து சத்விசாரமாக கலந்துரையாடவும்
>> வேண்டுகிறேன்.
>> அகவலில் உள்ளகீழ் கண்ட வரிகளை தயவு செய்து மனதிற்கும் ஒளிக்கும் உள்ள
>> தொடர்பை சுட்டுகிறதா என்று கருத்தில் கொள்க.
>>
>> முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
>> என்னுள வரைமேலெழுந்த செஞ்சுடரே
>>
>> ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
>> ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்த மெய்ச்சுடரே
>>
>> உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
>> வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே.
>>
>> என்றென்றும் சன்மார்க்கப் பணியில்,
>> ஜோதிமைந்தன்.சோ.பழநி.
>>
>> On 11/11/09, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> wrote:
>> > அன்புள்ள சன்மார்க்க அன்பர் ஜெகநாதன் நாராயண சாமீ அவர்களுக்கு,
>> > நமது வள்ளல் பெருமான் எந்த இடத்திலும்
>> > ஆழ் மனத்திற்கு உள்ளொளி உள்ளது என்று சொன்னது இல்லை.
>> > உள்ளொளி என்பது உரை மனம் கடந்த ஒரு பெரு வெளி மேல்
>> > உணர்வு கடந்த நிலையில் காண்பது.
>> > மனதிற்கு எந்த ஒளியும் ஒலியும் கிடையாது.
>> > மனம் எப்போது அறிவில் ஒடுங்குகிறதோ
>> > அப்போதுதான் சுடர் தெரியும்.
>> > அந்த சுடரும் ஆன்மாவின் ஒளி தானே தவிர
>> > மனதிற்கு ஒளி என்பது கிடையாது.
>> > ஆக ஆழ் மனதிற்கும் வெளி மனதிற்கும்
>> > ஒளியோ அருளோ கிடையாது.
>> > நம்மை தவறான பாதைக்கு செலுத்த வல்ல மனம்
>> > ஆழ் மனமாக இருந்தால் என்ன வெளி மனமாக இருந்தால் என்ன
>> > மனம் எப்போதும் மனம்தான்.
>> > அதன் இயற்கை குணம் எப்போதும் மாறாது.
>> > மனம் வென்ற வல்லபதாலேயே
>> > இறை நிலையை உணரவாவது முடியும்.
>> > ஆகவே ஆழ் மனத்திற்கு உள்ளொளி உண்டு என்று
>> > தவறான கருத்தை புகுத்த வேண்டாம்.
>> > அன்புடன்,
>> > விழித்திரு ஆறுமுக அரசு
>> > .
>> >
>> >
>> >
>> > 2009/11/11 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
>> >
>> >>
>> >> அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி
>> >> தனிப்பெரும்கருணை அருட்பெரும்சோதி
>> >> எலோரும் இன்புற்று வாழ்க வளமுடன்.
>> >>
>> >> வள்ளலார் கோட்ட அன்பர்களுக்கு வணக்கம்.
>> >> புனையுருவிலுள்ள குருக்களை நம்பி வழிதவறிக் கெடுவதைவிட, வள்ளலார் சுட்டும்
>> >> வழியில் நம் ஆழ்மனத்தின் உள்ளொளி கொண்டு அறிவு காட்டும் பாதையில் சென்று
>> >> ஞானம்
>> >> பெறுவது சிறக்கும்.
>> >>
>> >> அன்புடன் செ.நாராயணசாமி.
>> >> --- On *Tue, 10/11/09, Mohan Suresh <psureshdreams@gmail.com>* wrote:
>> >>
>> >>
>> >> From: Mohan Suresh <psureshdreams@gmail.com>
>> >> Subject: [vallalargroups:2375] குருவிடம் உபதேசம்
>> >> To: "vallalar groups" <vallalargroups@gmail.com>, br0411@sib.co.in,
>> >> vallalargroups@googlegroups.com, vallalartrust@gmail.com, "Ramanujam A"
>> <
>> >> getramanujam@gmail.com>
>> >> Date: Tuesday, 10 November, 2009, 10:52 PM
>> >>
>> >> நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கி பிரகாசிப்பது போல், ஒரு குருவிடம்
>> >> உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால், மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று
>> >> ஒளியுடன் பிரகாசிக்கும்.
>> >>
>> >> ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது. அதுபோல உள்மனதில்
>> >> தன்னைப்
>> >> பற்றிய ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான
>> >> மனதில்
>> >> ஞானம்
>> >> தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதை
>> >> பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
>> >>
>> >> எதிரி, நண்பன், மகன், உறவினன் என்று பிரித்துப் பார்க்காமல், யாரிடத்தும்
>> >> நட்பும் பகையும் கொள்ளாமல் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.
>> >>
>> >> பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள் திரும்பத் திரும்ப வந்து
>> >> கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. ஆனால்,
>> >> ஆசை
>> >> மட்டும் மனிதனை விடுவதில்லை.
>> >>
>> >> நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த
>> >> நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.
>> >> மனதுடன்
>> >> நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல,
>> உறக்க
>> >> நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை
>> >>
>> >> உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு
>> >> நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை
>> >> விட்டு
>> >> விட இடம் தருவதில்லை.
>> >>
>> >> பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல,
>> >> மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை
>> >> நிரந்தரமானதல்ல
>> >>
>> >>
>> >>
>> >> *அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> >> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி*
>> >> **
>> >> *எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க*
>> >>
>> >> ------------------------------
>> >> The INTERNET now has a personality. YOURS! See your Yahoo!
>> >> Homepage<http://in.rd.yahoo.com/tagline_yyi_1/*http://in.yahoo.com/>
>> >>
>> >> >
>> >>
>> >
>> >
>> > --
>> > அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> > தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>> > எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>> >
>> > அன்புடன்
>> >
>> > விழித்திரு ஆறுமுக அரசு
>> >
>> > >
>> >
>>
>> >
>>
>
>
> --
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> அன்புடன்
>
> விழித்திரு ஆறுமுக அரசு
>
> >
>
--
Arutperum Jothi ! Arutperum Jothi !
Thaniperum Karunai ! Arutperum Jothi !
Ella Vuyirgalum Inbutru Vazhga !
Yours
V.T. Arumugha Arasu
--அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment