அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
* விரதங்களை மிகவும் புனிதமானதாக நாம் எண்ணுதல் வேண்டும். விரதங்களை நாமே அலட்சியமாக எண்ணும் தீய பழக்கங்கள் நம்மை விட்டுப் போதல் வேண்டும்.
மேற்கண்ட தங்களின் கருத்துக்கள் நமது சன்மார்க்கத்திற்கு எதிரானவை.
விரதங்கள் எல்லாம் மாயை வயப்பட்ட சமய கர்த்தாக்களால் ஏற்படுத்தப்பட்டவை என்று நமது வள்ளல் பெருமானார்
கூறி இருக்கிறார்கள்.
விரதம் இருப்பதால் எந்த ஞானத்தையும் அடைய முடியாது.
அந்த விரதங்கள் நம்மை ஞான நிலையில் இருந்து உருவ வழிபாட்டிற்கு கீழே தள்ளி விடும். மேலும் அடுத்த கீழ் நிலையான் சடங்குகளில்
ஈடுபட வைத்து ஞான நிலையினை அடைய முடியாமல் தடுத்து விடும்.
விரதங்களை புனிதமாக கருதாமல் அதை விட்டு ஒழித்து
சடங்குகள், ஆசாரங்கள், போன்றவற்றில் இருந்து விலகி
சுத்த சன்மார்க்க பயிற்சியை மேற்கொண்டு
சன்மார்க்க பாதையில் பயணிப்போம்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
2009/11/10 Mohan Suresh <psureshdreams@gmail.com>
* தீயவைகளைச் செய்யாதிருக்க நமக்கு உறுதியான மனம் வேண்டும். ஐம்பொறி இன்பங்களை நாம் அடக்க வேண்டும். ஆடல் பாடல்களைப் பார்ப்பது தேவையற்ற ஒன்றாகும்.* விரதங்களை மிகவும் புனிதமானதாக நாம் எண்ணுதல் வேண்டும். விரதங்களை நாமே அலட்சியமாக எண்ணும் தீய பழக்கங்கள் நம்மை விட்டுப் போதல் வேண்டும்.* தீயவை எல்லாம் இனிச் செய் யேன் என்கிற உறுதியான மனம் நமக்கு வேண்டும்.*உறுதியான மனம் உடையவனே துன்பத்தைப் பொறுத் துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.*இன்றைய உலகம் இன்ப கேளிக்கைகளில் மூழ்கி உள்ளது. எங்கு பார்க்கினும், "சுகம் வேண்டும்" "சுகம் வேண்டும்" என மக்கள் எப்படியும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் துடிக்கின்றனர். பொருளுக்காகப் பிறரை அடித்து நொறுக்கவும் தயங்கவில்லை.* நல்லவர்களிடம் நட்பு, இனிய சொற்கள் பேசுதல், எளியவர்களுக்கு உதவுதல், மனத்தூய்மை, நல்ல குணங்கள் ஆகியவை மேன்மக்களிடம் அமைந்திருக்கும் குணங்கள்.* நாம் வாழ்கின்ற நாட்களும் நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு வாழும் ஒவ்வொரு நொடியும் நேர்மையான ஆன்மிக நாட்டம் உள்ளவர்களாக வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்வாகும்.* ஆயுட்காலம் மிகக் குறைவே. எனவே, குறைபாடுகளை உதறிவிட்டு நல்ல வழியில் செல்லுங்கள். சுற்றி வளைந்து செல்லும் பாதையிலிருந்து விலகி விடுங்கள்.* பிறரை இகழ்வதும் பழிப்பதும் கோபமாகப் பேசுவதும் தீமையையே விளைவிக்கும். மேலும் பிறரை இகழ்ந்து பேசுபவர்களை உலகம் பழிக்கும்.* பாவங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில் தயக்கம் கூடாது. பாவம் செய்தது நாம் தானே! செய்த பாவத்தை ஒத்துக் கொள்வதில் மட்டும் போலி கவுரவமும் பிடிவாதமும் கொள்வது ஏன்?* மனதில் நல்ல எண்ணங்களையே சிந்திப்போம். அந்த எண்ணங்களே நம் வாழ்க்கையில் பல மேன்மைகளை உருவாக்கும். நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல் இவை மூன்றும் புண்ணியத்தைத் தரும்.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment