பசித்திரு தனித்திரு விழித்திரு
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
அன்புள்ளம் கொண்ட ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம் ஒருமுறை சோழசாம்ரஜ்ஜியதிலே அடங்கியுள்ள ஒரு சிறுகிராமத்தில் பாலன் என்பவர் பயிர் தொழில் செய்துகொண்டு தன்மனைவி மக்களுடன் சீறும்சிறப்புமாக வாழ்ந்துவந்தார்கள் பாலனுக்கும் அவன் மனைவி பாக்கியதிர்க்கும் ஒரு ஆண்குழந்தை ஒரு பென்குழந்தை மகனின் பெயர் ஆறுமுகம் மகளின் பெயர் அம்பிகா அவர்களின் இரண்டு பிள்ளைகளும் இறைவன் அருளால் வாழ்வில் கல்வி ஞானம் போன்ற எல்லாநலமும் பெற்று அன்னைதந்தையரின் பாசத்திற்குரியவராக எவ்வுலகமும் போர்ருதளுக்குரியவர்களாக திகழ்ந்தார்கள் ஒருநாள் இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்தார்கள் அப்பொழுது வழியில் ஒருக்காகமும் ஒருகோழியும் பேசிகொண்டிருந்தன இதை கவனித்த குழைந்தைகள் இருவரும் இவை அப்படி என்னத்தான் பேசிகொள்கிறதுபார்ப்போம் என்று மரத்தின் ஓரமாக நின்று கேட்டுகொண்டிருந்தார்கள் கோழியானது காக்கையை பார்த்து என்ன காக்கயாரே, ஏதோ கவலையில் இருப்பது போல் தெரிகிறது என்று விசாரித்தது நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு கூடுகட்டி முட்டையிட்டு அவற்றை அடைகாத்து குஞ்சு பொரித்து அவைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் அவைகளை இந்த பொல்லா மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டு சாப்பிட்டுவிடுகிரார்களே இவற்றை எல்லாம் பார்க்கும் போது என்மனம் வேதனை அடைகிறது இவ்வாறு காகம் கோழியிடம் தன்குறைகளை சொன்னது இதைகேட்ட கோழி காக்கையிடம் இந்த சம்பவத்திற்கே நீங்கள் இவ்வளவு துயரபடுகிறீர்களே என்னுடைய நிலையை சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள் என்று அது
தன்னுடைய நிலையை இவ்வாறாக கூரியது நான் தினந்தோறும் முட்டை போடுகிறேன் அவற்றை எல்லாம் கல்நெஞ்சம் படைத்த பாழாயிபோனமனிதர்கள் என்முட்டைகளைஎல்லாம் கருவிலே கொன்று தின்றுவிடுகிறார்கள் இவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்ட ஒருசிலமுட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிக்கசெய்தால் அவை சேவல் கோழியாக இருந்தால் சிருதெய்வத்தின் பெயரை சொல்லி அவர்களுக்கு பளிகொடுக்கிறேன் என்று என்பிள்ளைகளை நான் பார்த்துகொண்டிருக்கும் வேளையில் சிறிதும் இறக்கம் இல்லாமல் அறக்க குணம் படைத்த மனிதர்கள் கத்தியால் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொள்கிறார்கள் தெய்வத்தின் முன்னாள் நாம் அனைவரும் பிள்ளைகள் நம்தாய் நம்மை எவ்வாறு பலி கேட்பாள் இந்த நயவஞ்சக மனிதர்கள் தன்நாவின் சுவைக்காக நம்மையும் நம்மை சார்ந்த உயிரினங்களையும் கொன்று தன் வயிற்றிலே புதைத்துவிடுகிறார்கள் நமக்காக வாதாட ஒருமாபெரும் தபோசீலர் வடலூர் பெருவெளியில் தங்கி இருக்கிறாரம் வாங்க காக்கை அண்ணே என்று கோழியும் காக்கையும் வடலூருக்கு புறப்பட்டு சென்றது இவற்றை எல்லாம் கேட்ட குழைந்தைகள் இருவரும் நாமும் நம் ஊரில் தெய்வத்தின் பெயரால் பலியிடுவதையும் மற்ற உயிரினங்களை கொன்றுசாப்பிடுவதையும் தவறு என்பதை உணர்த்த நம் தாய்தந்தயரிடம் கூரி அவர்களின் துணையோடு இந்த உலகத்தில் உள்ள மனிதர்களிடம் ஜீவகருன்யத்தை பற்றியும் வடலூர் தபோசீலரை பற்றியும் எடுத்துரைப்போம் என்று இரு பிள்ளைகளும் வீடு திரும்பினார்கள்
எனவே அன்பர்களே நாமும் இரண்டு பிள்ளைகளை போலவே நம்மால் இயன்றவரை ஜீவகாருண்ய சிந்தனையை எல்லா அன்பர்களிடமும் எடுத்துரைப்போம் பசியினால் வாடுபவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொடுத்து அவர்களை வாழசெய்வோம் நாம் அனைவரும் இவற்றை எல்லாம் தடையின்றி செய்ய எல்லாம் வல்ல நமது அருட்குரு சிதம்பர ராமலிங்கமும் அவர் போற்றி வணங்கிய அருட்பெரும்ஜோதி ஆண்டவரும் துணை செய்வார் என்பதில் சிறிதும் ஐயமில்லை ஆகவே அன்பர்களே நாமும் இவர்றைஎல்லாம் நம் வாழ்வில் கடைபிடித்து உயர்வடைவோமாக
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment