அன்பு உள்ளம் கொண்ட சீனிவாசன் ஐயா அவர்களுக்கு
"மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக் களித்தனை " (அகவல்)
மூவரும்,தேவரும் என்ற வரிகளின் உட்பொருளை என்ன என்று கேட்டிருந்திர்கள். மொத்த படிநிலை 108
தேவர்கள் என்றால் : தேவேந்திரன் மற்றும் அவனை சார்ந்த சகாக்கள் இவர்களை குறிக்கும் இவர்கள் அனைவரும் 51 படிநிலை கடந்தவர்கள்.
மூவர் என்றால் : பிரம்மா விஷ்ணு ருத்திரன் இவர்கள் 102 படி நிலை கடந்தவர்கள் இவர்களுக்கு உருவம் கிடையாது இவர்களுடைய தேகம் அருவமான நிலை.
100 படிநிலை பெற்றவர் பிரம்மா இவருக்கு படைக்கும் தொழில் மட்டும்தான் செய்வார். இவர் கால திரையால் மறைக்கபடுபவர்
காலத்திரை என்பது ஆயுட்காலம் இவருடைய ஆயுள் 4,32,௦௦௦000
வருஷம்
101. படிநிலை பெற்றவர் விஷ்ணு இவருக்கு படைத்தல் காத்தல் என்கிற இரண்டு தொழில் மட்டும்தான் செய்வார் .இவர் கால திரையால் மறைக்கபடுபவர் காலத்திரை என்பது
ஆயுட்காலம் இவருடைய ஆயுள் 8,64,௦௦௦000.
வருஷம்
102. படிநிலை பெற்றவர் ருத்திரன் இவருக்கு படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற மூன்று தொழில் மட்டும்தான் செய்வார் .
இவர் கால திரையால் மறைக்கபடுபவர் காலத்திரை என்பது
ஆயுட்காலம் இவருடைய ஆயுள் 12,96,000
103. படிநிலை பெற்றவர் மகேஷ்வரன் இவருக்கு படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் என்கிற நான்கு தொழில் மட்டும்தான் செய்வார்.
104. படிநிலை பெற்றவர் சதாசிவம் இவருக்கு படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்கிற ஐந்தொழில் மட்டும்தான் தெரியும்.
105,106. படிநிலை நாதம் விந்து பரநாதம் திக்கிராந்தம் இவர்கள்
சதகோடி ஆயுளை பெற்றவர்கள்
107. படிநிலை சுத்ததேகம் மட்டும்கிடைக்கும் அதாவது பிரனவதேகம்
108. படிநிலை ஞான நிலை அதவாது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்
சரியை கிரியை யோகம் என்பவை மும்முர்திகளை சார்ந்திருந்தன இதனால் இவர்கள் ஆணவம் என்கிற பேய்பிடித்துகொண்டு
நம்மைவிட பெரியவர்கள் யாரும் இல்லை என அலைந்தார்கள்
ஆகையால் இவர்களால் ஞானநிலையை அடையமுடியவில்லை
ஆனால் நமது பெருமான் மருதூர் மாணிக்கம் 108 படிநிலை கடந்தவர் கிடைபதர்கரிய மனித தேகத்தை பெற்றவர் அதனால் ஒருநிலைக்கு அப்புறம் தன்னுடைய தேகத்தை பொன்மேனியாக மாற்றிக்கொண்டார் இவை எவ்வாறு நிகழ்ந்தது ஆணிபொன்னம்பலம் என்று சொல்லகுடிய அம்பலவாணன் அருளால் நடந்தது
ஆகவே தேவர் மூவர்களாலும் பெறமுடியாத பொன்னுடம்பு என்று சொல்லக்குடிய தேகத்தை நமது மருதூர் மாணிக்கம் இறை அருளால் அடைந்ததற்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு நன்றி கூறும் வகையில் மேலே சொல்லக்குடிய முப்பதிக்முக்கோடி தேவர்கள் இந்திராதியர் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகள் என்று சொல்லக்குடிய அனைவறாலும் பெறமுடியாத பொன்னுடம்பை நமது வள்ளல் பெருமான் பெற்றிருந்தார் அதனால் நமது வள்ளல் பெருமானார் மூவரும் தேவரும் பெற்றிடா இயல் எனக் அளித்தனை தன ஆழ்மனதில் இருந்து நாம் அனைவரும் பயனடையும் வகையிலே அகவலில் தந்தார் எனவே ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் அகவலை நன்றாக பயின்றால் அவர்கள் வாழ்வில் எல்லா நலமும் பெறுவார் என்பதி சிறிதும் ஐயமில்லை
சரியை பெற்றவர் ஞானசம்பந்தர்
கிரியை பெற்றவர் ஆதிசங்கரர்
யோகநிலை பெற்றவர் விஷ்வாமித்திரர்
ஞான நிலை பெற்றவர் நமது வடலூர் வள்ளல்பெருமானார்
எனவே அன்பர்களே நாமும் நமது சிதம்பரம் ராமலிங்கத்தை
போலவே ஞான நிலையை பெறுவதற்க்கு அவர் வழி நடந்து ஆண்டவன் அருளைப்பெற்று நாம் நம் வாழ்வில் உயர்வடைவோமாக.
மற்றும் அன்பர்களே நாம் எப்பொழுதும் ஜீவகாருண்ய
சிந்தனையோடு பிற உயிர்களின் பசியை போக்கி இறைவனின்
அருளைபெருவோம்
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
பசித்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
2009/11/8 aswin chittan
<aswinchittan@gmail.com>
அய்யா,
ஒரு சிறு வினா
வள்ளலார் அகவலில் " மூவரும், தேவரும்...." என்ற
வரிகளின் உட்பொருளாக சொல்லி இருப்பது என்ன?
ஸ்ரீநிவாசன்
கோடம்பக்கம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment