Pages

Saturday, October 10, 2009

[vallalargroups:2264] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு

 
 
                                         
    பசித்திரு           தனித்திரு              விழித்திரு  
 
   அருட்பெரும்ஜோதி      அருட்பெரும்ஜோதி 
   தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக!
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்!
 
எல்லா  உயிர்களும்  இன்புற்று   வாழ்க!
    
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
 
ஆன்மிக அன்பர்களுக்கு வந்தனம்  மருத நாடு  என்ற  ஒரு வளம்மிக்க நாடு அந்நாட்டை  ஆண்டுவந்த  மண்ணன்  தனது  நாட்டு  மக்களுக்கு யாதொரு  குறையும்  இல்லாமல்  சீரும் சிறப்புமாக  நல்லாட்சி  செய்துவந்தான்  இப்படி  வளம்மிக்கதாக  நாட்டில்  ஒருமுறை  பெரும்மழை  பெய்தது  எங்கு பார்த்தாலும்  ஒரே தண்ணீர் மயமாக காட்சியளித்தது  குளம் ஆறுகளில் எல்லாம்  வெல்லம் பெருக்கெடுத்து  ஓடி  கொண்டிருந்தது  அப்பொழுது ஒரு தாய் ஆடும்  அதன் இரண்டு  குட்டிகளும்  தங்களுடைய  இருப்பிடம்  நோக்கி வந்து கொண்டிருந்தது அவைகள் செல்லும் வழியில் ஆற்றை கடக்கவேண்டிய  சூழநிலை ஆற்றிலோ  பெருவெல்லாம்   ஆற்றுக்குமேலே  இருக்கும்  ஒற்றையடி  பாலத்தின்  வழியாகத்தான்  செல்லவேண்டும்  தவறி கிழே  விழுந்தால்  நம்மை  ஆற்றுவெள்ளம் அடித்து சென்றுவிடும்    என்ன செய்வதுதென்று   யோசித்த  அந்த ஆடு  நமக்கு நம் வடலூர் வள்ளல் பெருமானார்   அளித்த  மகா மந்தரமாகிய  அருட்பேரும்ஜோதி  ஆருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை  அருட்பேரும்ஜோதி  என்று சொல்லிக்கொண்டு தன்     இரண்டு  குட்டிகளுடன்  பாலத்தின்  வழியாக  மெதுவாக சென்றுகொண்டிருந்தது   அப்பொழுது எதிர்திசையில் ஒரு நரியானது  நின்றுகொண்டிருந்தது  துற்குணம் படைத்த  நரியானது ஆட்டையும்  அதன் குட்டிகளையும்  பார்த்து  ஆகா  இன்று  நல்லவேட்டை  கிடைத்துவிட்டது  என்று நினைத்து  மரத்தின் ஓரத்தில்  பதுங்கிகாத்துகொண்டிருந்தது  அப்போது  அங்கே
கொடியமனமும் கொடூர பார்வையும் கொண்ட புலி  வந்தது  புலியானது  அவ்வழியாக  வந்துகொண்டிருந்த 
ஆட்டையும்  அதன் குட்டிகளையும்  பார்த்து  ஆகா  இன்று  நல்லவேட்டைதான்  என்று தன் கொடிய  நாவால் உதடுகளை தடவிக் கொண்டு  பாலத்தின் மேல்  நடக்கத்தொடங்கியது   அதை கண்ட தந்திரகுணம்  படைத்த    நரியானது  யென்உணவை  பறிக்க வந்த  சதிகாரனே!  இந்த புலியை  என்ன செய்யலாம் என்று யோசித்தது  நரியானது  தன்  தந்திரத்தினால் புலி அண்ணே  புலி அண்ணே  உங்களை  கொள்வதற்காக  ஐந்து  மனிதர்கள்  துப்பாக்கியுடன்   வருகிறார்கள்  நீங்கள்  தான்  மகாபலம்படைத்தவர் ஆயிற்றே  ஆற்றில்  குதித்து  தப்பித்து சென்றுவிடுங்கள்  என்று தந்திரமாக  கூறியது தன் உயிர்மீது  கொண்ட  பற்றின்  காரணமாக  சற்றும் முன்பின் சிந்திக்காமல்  புலியானது ஆற்றில் குதித்தது. புலியை ஆற்றுவெள்ளம் அடித்துசென்றுவிட்டது   நரியானது  தன் எண்ணம்  பலித்ததை  நினைத்துக்கொண்டு  மறுபடியும்  மரத்தின் ஓரத்தில்  பதுங்கிகாத்துகொண்டிருந்தது   இதை கண்ட  ஆடு  ஒருதுன்பத்தில்  இருந்து விடுபட்டுவிட்டோம்  ஆனால் இந்த நரியிடம்மிருந்து  நம்மை  காப்பாற்றயாருமே  இல்லையா என யோசித்துக்கொண்டு  இருந்த நேரத்தில் அன்பும் தயவும் ஜீவநேயம்  கொண்ட இராமலிங்க சுவாமிகளின் நினைவு  வந்தது  அய்யா  அவர்கள்  வணங்கிய  ஒளிகடவுள்  அருட்பெரும்ஜோதியை  நினைந்து  மனதார  வேண்டிகொண்டது  அப்பொழுது  கருணையே  உருவான  காருண்யமூர்த்தியின்  அருளால்  வானத்தில்  இருந்து  இந்தவையகம்  அதிரும் அளவிர்க்கு  ஒரு இடி இடித்தது  அந்த சத்ததை கேட்டமாத்திரத்தில்   நரியானது  தப்பித்தோம்  பிழைத்தோம்  என்று காட்டைநோக்கி ஓடிவிட்டது  இதை கவனித்த  ஆடனது  அருள்ஜோதி இறைவனுக்கு  நன்றிகூறி  மனமகிழ்ச்யோடு  பாலத்தை கடந்து  தன்   இருப்பிடத்தை  சென்றடைந்தது   
 
ஆகவே  அன்பர்களே  ஒரு ஜீவன்  தன் மெய்யுருகி  வேண்டினால்  அந்த இடத்தில்  கடவுள்  காரியப்பட்டு  காப்பாற்றுவார்  என்பதில்  சிறிதும் ஐயமில்லை  எனவே  மனிதர்களாகிய நாமும்  இறைவனிடத்தில்  தூய சிந்தனையோடும்  ஜீவகருன்யத்தோடும்  வாழ்ந்து  நமது  வாழ்க்கைநெறியை  செம்மைப்படுத்திகொல்வோமாக    
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக!
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்!
 
பசித்தவனுக்கு  உணவு கொடு  அதுவே ஜீவகாருண்யம்
 
என்றும் உங்கள்  அபிமானத்துக்குரிய  அன்பன்
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா  தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்:9940656549
 
 
 
 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment