Pages

Thursday, October 8, 2009

[vallalargroups:2257] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.

                                         
    பசித்திரு        தனித்திரு              விழித்திரு  
 
   அருட்பெரும்ஜோதி      அருட்பெரும்ஜோதி 
   தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்
 
எல்லா  உயிர்களும்  இன்புற்று   வாழ்க!
    
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
 
ஆன்மிக அன்பர்களுக்கு வந்தனம்  இங்கே நமது வள்ளல் பெருமான் இயற்றிய திருஅமுதம் ஒன்று ஒரு மனிதன் தன்னிலை அறியாமல் வாழ்ந்தால் எப்படி இருப்பான் என்பதற்கு உதாரணமாக  கிழேகொடுக்கபட்டுள்ளது
 
காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
கரும்பைவிட்டுக்  கடுவிரைத்துக் கழிகின்ற உலகீர்
கூடுவிட்டுப்  போயினபின் எதுபுரிவீர்  எங்கே 
குடியிருப்பீர்  ஐயோநீர் குறித்தறியீர்   இங்கே 
பாடுபட்டீர்  பயனறியீர் பாழ்கிரைத்துக் கழித்தீர்  
பட்டதெலாம்  போதும்இது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவிரேல்   இன்பமிகப் பெறுவீர் 
எண்மைஉரைத்தேன்  அலன்நான் உண்மையுரைத்தேனே !     
(இது அருட்பா )
 
அன்பர்களே  ஒரு மனிதன் காட்டை வெட்டி  அதை நல்ல புன்செய் நிலமாக உருவகபடுத்தினாலும்  அதிலே மாமரம்   பலாமரம் தென்னைமரம்  வாழைமரம்  இன்னும்  எல்லா    உயிரினங்களுக்கும்   பயன்  தரக்கூடிய  நல்ல   மரங்களையும்  பயிர்களையும்  விளைவிக்காமல்  எதற்குமே  உதவாத எட்டிமரம்  முள்செடிகளையும்   பயிருட்டு  பாடுபட்டு  வந்தால்  அவைகள்   எந்த ஒரு ஜீவனுக்கும்    அதில்  ஒரு பயனும்  வராது  அதுபோல  நாம் பெற்றுள்ள  கிடைபதர்க்கறிய  மனித பிறப்பில்  துற்குண  சிந்தனைகளாகிய   தீய  எண்ணங்களையும்  செயல்களையும்  ஒரு தினையளவும்  செயல்பட  நினைக்காமல்  நாம் எப்பொழுதும்  நமது  அருட்பெரும்ஜோதியின்   தெய்வசிந்தனையோடும்  நல்ல எண்ணங்களையும்  ஜீவகாருண்ய  செயல்களையும்  கடைபிடித்துவந்தால்   நஞ்செய் நிலத்தில்  விளையும்  நற்கரும்பின் இனிய  சாறு போல  உங்கள் வாழ்க்கை  இன்பம்  நிறைந்ததாக  அமையும்   எனவே   நீங்கள் இதுவரை   வீண்காலம்  கழித்தது  போதும் இப்பொழுது  நமது ஆண்டவர் அருட்பெரும் ஜோதி  வரும்  தருணம் எனவே  நீங்கள் அனைவரும்  அவர் திருவடியைபற்றி  நீங்கள்  உங்கள் ஆனந்தமான   வாழ்க்கைநெரியை   
செம்மைபடுத்திகொல்லுங்கள்   
 
 மற்றும்  இந்த  உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள்  அனைவரும்  இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக்   எவ்வாறு  அறியவேண்டும்  என்றால்?
 
 நமது  சகா கலை  பெற்ற  வள்ளல் பெருமான்  கூறியபடி  எல்லா ஜீவராசிகளிடத்திலும்  அன்புடனும் தயவுடனும்  ஜீவநேயத்தோடும் வாழ்ந்து  வந்தால்     எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதியின் அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பரிபூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்திலும்  யாதொரு     தடையுமில்லாமல்  வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால்  நாம் அடையத்தக்க ஆன்மலாபமென்று அறியவேண்டும் .
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக!
 
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின்   திறவுகோல்!
 
பசித்தவருக்கு  உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய  அன்பன்
அ.இளவரசன்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
 
 
 
 
 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment