Pages

Thursday, August 20, 2009

[vallalargroups:2014] ஒவ்வாமை ஏற்படக் காரணம்

பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படை ஆதாரமாகத் திகழ்வது ஒவ்வாமை எனப்படும்
Allergy என்றால் மிகையில்லை.

ஒவ்வாமை பிரச்சினைக்கு நமது உடலிலேயே தீர்வு உள்ளது. உடலுக்குள்ளுள்
ஏற்படும் ஒவ்வாமையை இரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தியானது விரட்டியோடச்
செய்து உடல் நோய்க்குத் தீர்வை அளிக்கிறது.

பொதுவாக உடலில் மேற்கொள்ளப்படும் சோதனையின் போது, தீங்கிழைக்காத செல்கள்
என்றால், அதனை உடல் அனுமதிக்கிறது.

ஒருவேளை உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்குமேயானால், அது சில நோய்களை
உருவாக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.

பொதுவாக ஆஸ்துமா அல்லது மூச்சுத் திணறல் என்பது சிறுவயது குழந்தைகள்
முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இருக்கக்கூடிய சாதாரண வியாதி எனலாம்.

ஆஸ்துமாவிற்கு முந்தைய நிலையே ஈஸ்னோபீலியா எனப்படும் ஒருவகை ஒவ்வாமை.

ஈஸ்னோபீலியாவாக இருக்கட்டும். ஆஸ்துமாவாக இருக்கட்டும். எந்த வயதில் எந்த
நிலையில், நாம் அதனைக் கண்டுபிடிக்கிறோம் என்பதைப் பொறுத்து மருத்துவ
சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பல பொருட்களை நாம் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. அது
ஒருவருக்கொருவர் மாறுபடும்.

என்றாலும் ஒவ்வாமையை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த
வேண்டும்.

ஒவ்வாமை என்று அறியப்பட்டதும், குடும்ப மருத்துவரையோ அல்லது
சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களையோ அணுகி உரிய அறிவுரையைப் பெறுவதுடன்,
அதற்கேற்ற மருந்துகளையும் உட்கொள்தல் அவசியம்.

ஒவ்வாமையில் பல்வேறு வகைகள் உண்டு. தொடர்ந்து அவற்றைப் பற்றி அறிவோம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment