Pages

Tuesday, August 18, 2009

[vallalargroups:2011] Re: Naan Yaar - Vilakkam

அன்புள்ள நண்பர் வள்ளலார் கோட்டம் நண்பர் அவர்களுக்கு 
அடியேன் ஆறுமுக அரசு பணிந்து வரைவது. 
தங்களின் விளக்கம் மிக அருமை. 
எமது நான் யார் விளக்கத்தில் சிவம் என்பதை தாங்கள் சைவ சமயத்தில் வரும் சிவ பெருமான் என எண்ணி விட்டீர்கள் என்று உங்களுடைய விளக்கத்தை வைத்து எண்ணுகிறேன். சிவம் என்பது நீங்கள் கூறும் வுயிர் ஆற்றல் தோன்றுவதற்கு முன்னர் இருந்த ஆன்ம நிலையினையே ஆகும். சக்தி என்பது அந்த ஆன்ம நிலையினில் தோன்றிய முதல் இயக்கம் ஆகும். வள்ளல் பெருமானார் ஆரம்ப நிலையில் சைவ சமயம் சார்ந்து சிவ பெருமானை தெய்வமாக வணங்கினார்கள். ஆனால் பிற்காலத்தில் ஒன்றான பரம்பொருளை சிவம் என்றே குறிப்பிடுகிறார்கள். அந்த பிறப்பிற்கு வித்தான பரம்பொருளான சிவ்த்தைதான் அடியேனும் சிவம் என்று குறிப்பிட்டேன்.
மேலும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும்போது ஏற்ப்படும் அனுபவத்தை அறியும் அறிவு நான் என்ற வுணர்வு நம்மை விட்டு விலகும் போதே விடுபட்டிருக்கும். ஆக சீவன் சிவத்துடன் கலக்கும் போது சீவன் அதை அறிய கூடிய தன்மையுடன் இல்லாமல் சிவமாகவே மாறி இருக்கும்.
அன்புடன் 
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/8/17 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
    வள்ளலார் கோட்டம்:
அன்பு நண்பர் ஆறுமுகம் அரசு அவர்களுக்கும் மற்றும் வள்ளலார் வட்ட நண்பர்களுக்கும் வணக்கம். 
 
நண்பரின் 'யான்' என்பது பற்றிய விளக்கம், உண்மையை பற்றிய விளக்கம், நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.  சீவன் என்பது உணர்வுகளான உயிர்ப் பாற்றலின், ஆழ்மன செயல்பாட்டின்  மறுபெயர். இறையாற்றல் வேறு, உயிர்ப்பாற்றல் வேறு என்ற நிலை பிற்கால வைணவ துவைதம், சைவ சித்தாந்தக் கோட்ப்பாடுகளில், வைதீக சனாதனத்தின்,  சமணத்தின் தாக்கத்தால் தோன்றியவை. ஆதி காலத்தில் உயிர்ப்பாற்றலும் இறையாற்றலும் ஒன்றே என்ற கருத்துதான் நிலவி பழ்ந்த்தமிழ் கணியர்கள், சித்தர்கள், ஞானிகள், முனிவர்களால் பரப்பப் பட்டது. பிற்கால (அமணர்) அசீவகர்களும், புத்தர்களும் இதையே வலியுறுத்தினர்.
 
        'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்று முதல் சித்தரான திருமூலர் தெளிவாகக் குறிப்பிட்டது, உடம்பைத் தவிர்த்த உயிர் என்று ஒன்று தனியாக இயங்குவதில்லை. உயிர்ப்பாற்றல் ஒரு இயக்க, இயங்கு ஆற்றலே ஆகும். அது உடம்பின் ஓவ்வொரு திசுவிலும் செயல்படுகிறது.
 
        திருக்குறளும்:
 
        'யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோரின் உயர்ந்த உலகம் புகும்' (346) என்கிறது. அந்தத் துறவு நிலை தோன்றும்போது இருமைக் கோட்பாடு அறுபடுகிறது. இறை அருளும், நம் உள்மன அருளும் ஒன்றே என்பதே வள்ளலார் வலியுறுத்தும் கருத்து.
 
        தற்கால விஞ்ஞான அறிவியல் விளக்கங்களின் படி 'இயங்காத சடப்பொருள்' என்று ஒன்றும் இல்லை; அணுவினுள் அணுவிலும் (இறையாற்றலிலும்) இயங்காற்றல் தொடர்ந்து நடைபெறுகிறது.  அது தனை ஆறியாத் தனிப்பெரும் ஆற்றல்.  வலை பின்னும் சிலந்தி (ஈறறிவு மட்டுமே உடையது; பகுத்தறியும் ஆறிவு ஆற்றல் அற்றது). எனினும், வலை கட்டினால் தனக்கு உணவாகப் புழுக்கள் விழும் என்ற பகுத்தறிவு இல்லாமலேயா செயல்படுகிறது. 
     
    'தனை அறிதல் அரிதாய் எல்லாப் பொருளும் தோன்றுவதற்கு முதலாய் அமைவதன் மூலப்பகுதி' என இறை ஆற்றலைக் குறிப்பது மணிமேகலைக் காப்பியம்.
 
அந்த இயங்காற்றலை முன்னர் 'சக்தி' (பார்வதி) என உருவகப் படுத்தியவர் களும், அதனை சிவனின் ஒரு பாதியாகவே கண்டனர்; வேறாகத் தனித்துக் காணவில்லை.  இயங்காற்றல் என்பது தாமே தோன்றி தாமே நிகழ்வது.
 
       'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
        பிற்பகல் தாமே வரும் என்பது' குறள் 319
         
         வினைகள் தாமே தோன்றி இயங்குவன என்பது பழந்தமிழரின் வினைமுதலியற்  கோட்பாடு.  பிற்கால சமயங்கள் 'கருத்து' முதலியல் கோட்பாட்டை முன்னிறுத்தி சர்ச்சைகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தின.
 
    அன்பர்கள் இதனை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.  பழைய சமயங்களின் கோட்பாடுகள் பொய்யானவை என்று ஞான சரிகையில் வள்ளலார் தெளிவாக வலியுறுத்துயுள்ளார்.
 
    பழைய சமயங்களின் மறு உருவாக்கமாக வள்ளலாரின் அருளுரைகளை
எண்ணுவது, நம்மை அறியாமை இருளிலிருந்து முற்றுமாக அகற்றாது.
 
    'இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு'    என்பது குறள் 362
  
அருட்பெரும் சோதியின் தனிப்பெரும் கருணை கோட்பாடு களைப் போற்றுவோர் பழைய சமையக் குப்பைகளை ஒதுக்கி, வைத்து, விலகி நின்று சுயமாக சிந்தித்துத்  தெளிவு பெறவேண்டும்..  
 
அன்பன் செ.நாராயணசாமி
           

From: Arumugha Arasu.V.T <arvindhoffset@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Saturday, 15 August, 2009 10:41:38 AM
Subject: [vallalargroups:2004] Naan Yaar - Vilakkam

நான் யார் விளக்கம் 

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு 
நமது புராணங்களில், ஞான நூல்களில், சித்தர் இலக்கியங்களில், அற நூல்களில், நான் யார் என்ற கேள்விக்கு விளக்கங்கள் பலவாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அதில் நமது ஆன்மாவே நான் என்றும், நமது ஜீவனே நாம் என்றும், வுடலோடு கூடிய ஜீவனே நான் என்றும் பலவாறாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நமது வள்ளல் பெருமானார் மற்றும் சித்தர்களும் ஜீவனும் சிவமும் ஒன்றாக கலப்பதற்கு முன்பு விளங்கும் நிலையினை அதாவது நாம் வுலகில் வுடல் வுணர்வு, மன வுணர்வு, அறியும் வுணர்வு ஆகிய வுனர்வுடன்  கூடிய வுனர்வையே நான் என்று கூறுகிறார்கள்.
வுனர்வுறு வுணர்வும் வுனர்வெலாம் கடந்த அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி 
என்று நமது வள்ளல் பெருமான் கூறியிருப்பதிலிருந்து நான் என்பது வுனர்வாகவே இருக்கிறது 
அந்த நான் என்கின்றன வுணர்வு கடந்து ஜீவனும் ஆன்மாவும் கலக்கும் ஜீவ ஐக்கியமே சிவா நிலை அடைதலாம். ஆக நான் என்பது வெறும் வுணர்வு மட்டுமே.  ஆதியில் சிவம் இயக்கமற்று நிலை கொண்டு இருந்த போது சக்தி என்னும் இயக்கம் சலனமாக தோன்றியது. சலனத்தின் விளைவாக ஒன்று என்ற நிலை மாறி இரண்டு என்கின்ற நிலையின் காரணமாக ஆன்மா ஜீவன் என்கின்ற இரு நிலை தோன்றியது. ஜீவன் நான் என்கின்ற வுணர்வு பெற்றபோது இந்த வுலகம் தோன்றியது. அதன் பின் ஜீவன் செயலாற்ற தொடங்கியதும் வினை தோன்றியது. அது நல் வினை என்றும் தீ வினை என்றும் இரண்டாக பிறப்பிற்கு மூலமாய் அமைந்தது. ஆக நாம் நான் என்கின்ற வுணர்வை விடுத்து ஒருமை நிலையை அதாவது சிவ நிலையை அடைவதின் மூலமாய் பிறப்பிலிருந்து விடுபடலாம். 
ஆக நான் என்பது வுணர்வு மட்டுமே என்பதை நாம் அறியலாம்.


--
Arutperum Jothi ! Arutperum Jothi !
Thaniperum Karunai ! Arutperum Jothi !

Ella Vuyirgalum Inbutru Vazhga !

Yours
V.T. Arumugha Arasu


See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.





--
Anbudan,
V.T. Arumugha Arasu

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment