Pages

Saturday, June 6, 2009

[vallalargroups:1640] Re: பேதம் என்பது யாது ?

KARUNAIMIGU SANMARGA FRIENDS,
   பேதம் என்பது என்ன?எவையல்லாம் பேதம்?
   பேதம்என்பதுவேறுபாடு.                                                                          வள்ளலார் சீவ ஒழுக்கத்தில்,ஆண் மக்கள்,பெண் மக்கள் முதலியோரிடம் சாதி,சமயம்,குலம் கோத்திரம்,தேசமார்க்கம்,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்று பேதம் காணாது இருக்க வேண்டும் என்கிறார்.
சாதி,சமயம்,குலம்,கோத்திர வேறுபாடுகள் மக்களிடம் நீங்க வேண்டும்.
ஆன்ம ஒழுக்கத்தில் யானை முதல் எறும்பு ஈராக தோன்றிய சரீரங்களில் உள்ள சீவ ஆன்மா திருசபையாகவும்,அதனுள் பரமாத்மா பதியாகவும் கொண்டும் யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதம் அற்று இருக்க வேண்டும் என்கிறார்.
எல்லா உயிர்களையும் தன் உயிர் போல எண்ணி அகத்தில் ஒத்துரிமை உடையவர் எவரோ அவர் உள்ளம் தான் கடவுள் இருக்கும் இடம் என வள்ளலார் சொல்லுகிறார்.
வள்ளலார் சொல்லும் பேதம் என்பது, ஜீவகாருணிய ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டது.ஜீவகாருணியம் கொண்டோர் அகவினத்தார்,அது இல்லாதோர் புறவினத்தார்.புறவினத்தாரின் பசியை ஜீவகாருணிய உணர்வோடு போக்கலாம்.உதவலாம்.ஆனால் அவர்களின் ஜீவகாருணியம் இல்லாத செயல்களுக்கு துணை போக கூடாது.
எல்லா ஜீவர்களும் ஆன்ம அடிப்படையில் ஒருமைப்பாடு உடையவர்கள்.எனவே, வள்ளலாரின் ஆன்ம ஒருமைப்பாடு மூலம் பேதம் நீங்க படுகிறது.முக்கியமான ஒன்று ஜீவகாருணியம்,இரக்கத்தினால் தான் வள்ளலார் சொல்லும் பேதத்தை நீக்கலாம்.உயிர் இரக்கம வந்தால் தான் ஆன்ம ஒருமைப்பாடு வரும்.இது உண்மை.

2009/6/4 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Inbutru Vazga...
Dear Krishna,,
 
If you read vallalar "Anma ozukkam(4th Discipline)" that is an real time implementation of "Avoiding Petham"
 
Some more Reeference Tips from Vallalar Written Songs...
 
Song No 5297.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம்என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்சிந்தை மிக விழைந்ததாலோ

Song No 3403.
எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணி நல் இன்புறச் செயவும்
அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்ச நீக்கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சை காண் எந்தாய்
 
In general , we can't explain vallalar using words.
But You can find solution from Thiruarutpa itself.

Anbudan,
Karthikeyan
On 04/06/2009, Maheshkanna <maheshkanna007@gmail.com> wrote:

Niyathitkkum athmathirupthikkum Muranpadana seyalkal ellam batham endru Karuthappadukinrana
 
Utharanmaga Nithiya Karmamana tharmathai yar oruvan Udhasinap paduthukirano avan Batham Ullavanagave Karuthapadukiraan
 
2009/6/4 Krishna C kumar <krishnakumar.c.v@gmail.com>

Hi,

I am very much interested to understand the following

பேதம் என்பது யாது ?
எவையெல்லாம் "பேதம்" ?

Can someone kindly help me to understand this ...This could be a question that was asked already, but this small guy wants to know in detail...

மிக்க நன்றி!

Regards,
Krishna C






--
Vallal Malaradi Vaalga Vaalga


With KindRegards,
Karthikeyan.J


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment