Pages

Thursday, June 4, 2009

[vallalargroups:1623] Fwd: திருநல்லூர்:-----திண்ணில யங்கொண்டு நின்றான் றிரிபுர மூன்றெரித்தான் கண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற் சேவடியே ----ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப்போல் காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே








Subject: Fwd: திருநல்லூர்:-----திண்ணில யங்கொண்டு நின்றான் றிரிபுர மூன்றெரித்தான் கண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற் சேவடியே ----ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப்போல் காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே
 

 
திருநாவுக்கரசர்!        திருச்சிற்றம்பலம்!         சிவாயநம!


"ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப்போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே
"


ஆற்றில் இழந்த பொருளைக் குளத்தில் சென்று தேடும் அறிவிலிகளைப்போல, எம்பெருமானைத் தரிசிப்பதற்குக் காற்றை விட வேகமாக உலகமெங்கும் சுற்றித் திரிவர்.  

"




                 நான்காம் திருமுறை 

                                 097 திருநல்லூர் 
 


பாடல் எண் : 5

வெண்மதி சூடி விளங்கநின் றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாடல றாதநல் லூரகத்தே
திண்ணில யங்கொண்டு நின்றான் றிரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற் சேவடியே

பொழிப்புரை :

வெண்பிறை சூடி உலகு விளங்க நிற்பவனாய்த் தேவர்கள் தொழுமாறு கூத்தாடும் காட்சி நீங்காத நல்லூரை உறுதியான இருப்பிடமாகக் கொண்டு நிற்கும் திரிபுர சங்காரியினுடைய வீரக்கழல் கள் அணிந்த சேவடிகள் அடியேனுடைய கண்கள்முன்னும் நெஞ்சி னகத்தும் உள்ளன.
 

 
 

பாடல் எண் : 6

தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப்போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே


பொழிப்புரை :

எல்லார் உள்ளத்தும் தெளிவு ஏற்படச் சிவ பெருமான் திருநல்லூரிலே நிலையாக உறைந்திருந்தால் தங்களுக்கு அவன் காட்சி வழங்குமாறு அடியவர்கள் அக்கோயிலுக்குச் சென்று அவனைக் கண்டு கொண்டு நெஞ்சு நிறைவுபெறாதவராய், தம் பொருத்தமல்லாத புத்தியினால், ஆற்றில் இழந்த பொருளைக் குளத்தில் சென்று தேடும் அறிவிலிகளைப்போல, எம்பெருமானைத் தரிசிப்பதற்குக் காற்றை விட வேகமாக உலகமெங்கும் சுற்றித் திரிவர்.  




 
பாடல் எண் : 7

நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங்கொர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே


பொழிப்புரை :

காலையிலே மலர்கின்ற தாமரைப் பூக்களை உடைய குளங்கள் ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் நல்லூரிலே கீளோடு கூடிய இக்கோவணத்தைப் பத்திரமாக வைத்திருந்து பின்னர் யான் வேண்டும் போது கொடுப்பாயாக என்று சொல்லி வஞ்சனையாக அதனை மறைத்து, ஒளி பொருந்திய கண்களை உடைய அவன் மனைவியோடு அமர் நீதி என்ற வாணிகனை அடியவனாகக் கொண்ட புகழ்ச்செய்தியை இப்பரந்த உலகத்திலுள்ளவர்கள் சிறப்பாகப் பேசு கிறார்கள்.   


 
 
 
 
To Read In English:



                  NAANGAAM THIRUMURAI

                              096 THIRUNALLUR
 
 
 

Song 5:

ve'nmathi soodi vi'langka:nin 'raanaivi'n 'noarka'lthozha
:na'n'nila yaththodu paadala 'raatha:nal loorakaththae
thi'n'nila yangko'ndu :nin'raan 'riripura moon'reriththaan
ka'n'nu'lum :negnsath thakaththu mu'lakazha'r saevadiyae

Translation:

Civaṉ stood renowned having worn a white crescent, to be worshipped by the celestials.
stood having a strong temple in nallūr where songs with appropriate measure of time, never cease. burnt the three wandering cities. his red feet wearing armour dwell always in my eyes and in the recess of my heart
 
 
 

Song 6:

thae'r'rap padaththiru :nalloo rakaththae sivaniru:nthaal
thoa'r'rap padassen'ru ka'nduko'l 'laartho'ndar thunmathiyaal
aa'r'ri'r keduththuk ku'laththini'r 'raediya vaatharaippoal
kaa'r'ri'r kaduththula kellaa:n thiritharvar kaa'npatha'rkae

Translation:

as Civaṉ dwells in Tirunallūr to be seen clearly by devotees some devotees will not go there and have a vision of him to become conspicuous in his presence, through their folly.
like those foolish people who having lost something in a river searched for it in a tank.
will wander as swift as the wind throughout the world, to have his vision
 
 


Song 7:

naadko'nda thaamaraip pooththadagn soozh:ntha:nal loorakaththae
keedko'nda koava'nang kaaven'ru sollik ki'ripadaththaan
vaadko'nda :noakki manaivi yodumangkor vaa'nikanai
aadko'nda vaarththai yuraikkuman 'roaviv vakalidamae  

Translation:

in Nallūr, which is surrounded by lotus tanks which blossom in the morning. having said, `keep the loin-cloth with the waist-band, safe` Do not the people of this world speak highly of the news of admitting a merchant in that place with his wife whose eyes were like sword, by uttering a lie


 
 


திருநாவுக்கரசர்!       திருச்சிற்றம்பலம்!         சிவாயநம!

அப்பர் அடிமை

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தேவழுவா திருக்க வரந்தர வேண்டும்"

 


Explore and discover exciting holidays and getaways with Yahoo! India Travel Click here!





--
NAMASHIVAYA

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment