"கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்
கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே"
கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே"
கனன்று கொண்டிருக்கின்ற நெருப்பு இருக்கின்ற இடத்தில் புகை என்பது கிளம்பும். ஆனால் விளக்கின் ஜோதியில் புகை சிறிய அளவிலேயே வெளிப்படும். விளக்கின் ஜோதிக்கு அடிப்படையான விளக்கு தேவை அதுபோல் நமக்குள் இலங்கும் சிவமாகிய நமது ஆன்ம ஒளிக்கு அடிப்படையான நமது வுடல் விளங்குகிறது அதிலும் நமது வுடலில் புருவ மத்தியத்தில் ஆன்ம பிரகாச ஒளி புகை என்னும் திரை நீக்கினால் கற்பூர ஒளியை போலே காட்சி கிடைக்கும் அதுதான் ஆன்ம காட்சி அது கிடைப்பதற்கு முதலில் மனதின் ஓட்டத்தை கவனித்து வந்தால் அது நமது ஜீவ அறிவில் ஒடுங்கும் அதன் பின் ஜீவ அறிவின் துணைக்கொண்டு ஆன்ம தரிசனம் காணலாம். நமது மனம் நமது ஐம்புலன்களின் வழியாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது நமது ஐம்புலன்களை உள் நோக்கி திருப்பும்போது மனம் தனது புற ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு நமது அறிவின் அடிமையாக செயல்பட தொடங்குகிறது. நமது புறக் கண்களுக்கு புலப்படாத காட்சிகள் எல்லாம் நமது அகக் கண்களுக்கு ஜோதி ரூபமாக தெரியும். நமது ஐம்புலன்களை உள் நோக்கி திருப்ப நமக்கு நமது மூச்சு காற்றே துணை புரிகிறது. நமது மூச்சை வெளியில் விடுவதன் மூலம் நாம் ஆயுள் நஷ்டம் அடைகிறோம் என்று நமது வள்ளல் பெருமான் கூறுகிறார்கள். அதன்படி பார்த்தால் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் காற்று வுள்ளே சென்று பின் திரும்பும்போது கரிமில வாயுவாக திரும்புகிறது ஆக கரிமில வாயுவே புகை மற்றும் திரை அதே ஆக்சிஜன் காற்று மேல் நோக்கி திருப்பி விடும் போது புகை அற்ற தன்மையை அதாவது நெருப்பின் தன்மையோடு ஆன்ம காட்சி கிடைக்க வழி செய்கிறது. இதைதான் நமது வள்ளல் பெருமானும் சித்தர்களும் வழியாக காட்டியுள்ளார்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்புடன்
ஆறுமுக அரசு
--
V.T.A. Arasu
2009/4/28 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Vallal Malaradi Vaalga VaalgaDear All,can u explain below line"கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்
கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே"vallalar world annadhan trust porursathish
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
V.T.A. Arasu
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment