can any one explain me this song pls i cont ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் அற்புதக் காட்சிய டி - அம்மா அற்புதக் காட்சிய டி |
( 4915 ) ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு வீதிஉண் டாச்சுத டி - அம்மா வீதிஉண் டாச்சுத டி ஆணி |
( 4916 ) வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு மேடை இருந்தத டி - அம்மா மேடை இருந்தத டி ஆணி |
( 4917 ) மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு கூடம் இருந்தத டி - அம்மா கூடம் இருந்தத டி ஆணி |
( 4918 ) கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை மாடம் இருந்தத டி - அம்மா மாடம் இருந்தத டி ஆணி |
( 4919 ) ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம் என்னென்று சொல்வன டி - அம்மா என்னென்று சொல்வன டி ஆணி |
( 4920 ) ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா சீர்நீலம் ஆச்சுத டி ஆணி |
( 4921 ) பாரோர் நிலையில் கருநீலம் செய்ய பவளம தாச்சுத டி - அம்மா பவளம தாச்சுத டி ஆணி |
( 4922 ) மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம் மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா மாணிக்கம் ஆச்சுத டி ஆணி |
( 4923 ) பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப் பேர்மணி ஆச்சுத டி - அம்மா பேர்மணி ஆச்சுத டி ஆணி |
( 4924 ) வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள் வெண்மணி ஆச்சுத டி - அம்மா வெண்மணி ஆச்சுத டி ஆணி |
( 4925 ) புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி பொன்மணி ஆச்சுத டி - அம்மா பொன்மணி ஆச்சுத டி ஆணி |
( 4926 ) பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம் படிகம தாச்சுத டி - அம்மா படிகம தாச்சுத டி ஆணி |
( 4927 ) ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம் இசைந்தபொற் றம்பம டி - அம்மா இசைந்தபொற் றம்பம டி ஆணி |
( 4928 ) பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட புதுமைஎன் சொல்வன டி - அம்மா புதுமைஎன் சொல்வன டி ஆணி |
( 4929 ) ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல என்னள வல்லவ டி - அம்மா என்னள வல்லவ டி ஆணி |
( 4930 ) ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் ஆகவந் தார்கள டி - அம்மா ஆகவந் தார்கள டி ஆணி |
( 4931 ) வந்து மயக்க மயங்காமல் நான்அருள் வல்லபம் பெற்றன டி - அம்மா வல்லபம் பெற்றன டி ஆணி |
( 4932 ) வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி மணிமுடி கண்டேன டி - அம்மா மணிமுடி கண்டேன டி ஆணி |
( 4933 ) மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது மற்றது கண்டேன டி - அம்மா மற்றது கண்டேன டி ஆணி |
( 4934 ) கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற் கோயில் இருந்தத டி - அம்மா கோயில் இருந்தத டி ஆணி |
( 4935 ) கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் கூசாது சென்றன டி - அம்மா கூசாது சென்றன டி ஆணி |
( 4936 ) கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் கோடிபல் கோடிய டி - அம்மா கோடிபல் கோடிய டி ஆணி |
( 4937 ) ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன் ஐவண்ணம் ஆகும டி - அம்மா ஐவண்ணம் ஆகும டி ஆணி |
( 4938 ) அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும் அப்பாலே சென்றன டி - அம்மா அப்பாலே சென்றன டி ஆணி |
( 4939 ) அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில் ஐவர் இருந்தார டி - அம்மா ஐவர் இருந்தார டி ஆணி |
( 4940 ) மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர் மணிவாயில் உற்றேன டி - அம்மா மணிவாயில் உற்றேன டி ஆணி |
( 4941 ) எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக இருவர் இருந்தார டி - அம்மா இருவர் இருந்தார டி ஆணி |
( 4942 ) அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில் அன்பொடு கண்டேன டி - அம்மா அன்பொடு கண்டேன டி ஆணி |
( 4943 ) அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன் அம்மை இருந்தாள டி - அம்மா அம்மை இருந்தாள டி ஆணி |
( 4944 ) அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் அமுதமும் உண்டேன டி - அம்மா அமுதமும் உண்டேன டி ஆணி |
( 4945 ) தாங்கும் அவளரு ளாலே நடராஜர் சந்நிதி கண்டேன டி - அம்மா சந்நிதி கண்டேன டி ஆணி |
( 4946 ) சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது சாமி அறிவார டி - அம்மா சாமி அறிவார டி ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் அற்புதக் காட்சிய டி - அம்மா அற்புதக் காட்சிய டி |
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment