Pages

Tuesday, March 31, 2009

[vallalargroups:1339] சித்திவளாக வழிபாட்டு விதி 1873

சித்திவளாக வழிபாட்டு விதி 1873

ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், நினைந்து நினைந்து என்னும் தொடக்கமுடைய 28 பாசுரமடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வபாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நான் இப்போது இந்த உடம்பிலிருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன். என்று திருவாய்மலர்ந்தருளினார்.

இருப்புச் சங்கிலிப் பெருவாயில் கடந்து உட் செல்லுவோர். மன்றத்தின் தென் கிழக்கிலுள்ள எழுவார் மேடையை அடைதல் வேண்டும். இம்மேடை நம் அறிவு பீடத்தின் தென்கிழக்கு அதாவது இடது கண் இடத்தைக் குறிப்பதாகும். இதன் மீது பன்னிருகால் மண்டபமுண்டு. இம் மேடைக்குப் படிகள் ஆறு. இம்மேடை மேலேறி நோக்கினால் ஞானசபைக் கொடியும் மேற்படி சபையும் விளங்கும். இதன் உண்மை, ஜீவதயையுடையவர்களாய் சூரியகலை நிலையிலிருந்து, திருவருள் உணர்வைபட பெற்று நிற்கும் போது, அருளொளி விளக்கம் தோன்றுகின்றன. அகத்தில் தோன்றிய அருளொளி சுத்த சன்மார்க்கக் கொடியும், ஞான சபையுமாகவும் அறியப்படும். இக்காட்சியினால் இறவா வரம் பெறப்படுகின்றது. சுத்த சரீரம் எழுப்பப்படுகின்றது. இந்த நிலையில் அழியாத அருளறிவு சித்திக்கிறது. ஆகையினால், இந்த மேடைக்கு எழுவார் மேடை என்ற அருட்சிறப்புக் காரணப்பெயர் வழங்கப்பட்டது. மேலும் இதற்குள்ள ஆறு படிகளும் ஆறாதார நிலைகளைக் குறிப்பதாயும், இதற்கு மேல் விளங்கும் பன்னிருகால் மண்டம், துவாதசாந்த நிலையைக் குறிப்பதாயும், அந்தப் பன்னிரண்டாம் அனுபவ நிலை மீது ஒளிர்வது சத்திய ஞான சபையாயும், சிதகாச விளக்கமாயும் திகழ்வதாம்.

சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக்

கட்டளை 30-01-1874 ஸ்ரீமுக வருடம் தை 19

நான் உம்ள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப்போகின்றேன். பார்த்து

அவநம்பிக்கையடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நோம்ந்து பார்த்தால்

யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்





--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment