Pages

Monday, March 23, 2009

[vallalargroups:1306] Sath Vicharam - Question - அசுத்த உஷ்ணம்

Vallal Malaradi Vaalga Vaalga

Message From Vallalar Devotee.Radha:

பெருமான் பேருபதேசாதி  சத் விசாரம் மூலம்  உண்டாகும் உஷ்ணம் மற்ற ஏனைய தவ முயற்சிகளால் உண்டாகும் உஷுனத்துடான் பல மடங்கு அதிகம் என்று கூறுகின்றார். இந்த உஷ்ணம் சுத்த உஷ்ணம் ஆகும். இது எத் தன்மை உடையது  என்றால் இது நம்மை வீடு பேறு என கூறப்படும் மரணமில்லா பெரு வாழ்வு எனும் அந்த அற்புத நிலை இட்டு செல்லும் என்று அய்யவின் உபதேசங்களிருந்து ஊகிக்க முடியும். இது இப்படி  இருக்கையில்,

அசுத்த  உஷ்ணம் என்பது என்ன, ?
அது எப்போது உண்டாகுகிறது, ?
அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்றால் - எது?
நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் உண்டாக்குகின்றதோ  அதுவே அசுத்த உஷ்ணம்,
அது உலக விசாரத்தால் உண்டாகுகின்றது,
அதை சத் விசாரம் அதாவது ஆண்டவரை பற்றி விசாரிப்பது, அண்டத்தை பற்றி, பிண்டததை பற்றி விசாரிப்பது (பேருபதேசத்தில்), ஆண்டவர் நிலை மற்றும் நம் நிலை பற்றி ஒப்பிட்டு பார்ப்பது போன்று செய்தால் அசுத்த உஷுநத்தை தவீர்கலாம். இதை பெருமான் செய்து சாதிததுவிட்டார். யாரும் அடையா பேரையும் பெற்றுவிட்டார்.

Message from Vallalar Devotee.Karthikeyan:

அசுத்த  உஷ்ணம் என்பது என்ன, ?
நமது உடலில் தோன்றும் தீங்கு  விளைவிக்க கூடிய உஷ்ணம் - அசுத்த  உஷ்ணம்

அது எப்போது உண்டாகுகிறது, ?
உலக விசாரத்தின் போது
அதாவது
காமத்தில்(பற்று) ஈடுபடும்போது,
கோபம் ஏற்படும்போது ,
பொறாமை கொளும்போது ,
ஆசை ஏற்படும்போது ,
வஞ்சகம் ஏற்படும்போது ,
பிறருடைய பொருள் மீது ஆசை ஏற்படும்போது,
பிற உயிர்களுக்கு  தெங்கு செய்ய நினைக்கும் போது / செய்யும் போது
பொறி புலன்கள் உலகத்தை நாடி வெளி செல்லும் போது
அசுத்த  உஷ்ணம் உண்டாகுகிறது

அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்றால் - எது?
இறைவனுடன் தொடர்பு கொள்ளும் போது.
சத் விசாரம் செய்யும் போது
பிற உயிர்களுக்கு நன்மை செய்யும் போது
நிர்-அகங்காரம்  ஏற்படுபோது
இதனை  தவிர வள்ளலார் சொல்லும் உணவை ஊட்கொள்ளும் போது
வள்ளலார் சொல்லும் மூலிகையை ஊட்கொள்ளும் போது
உடலை பக்குவமாக வைத்து கொள்ளும் போது ( தலை மூழ்குதல்) மற்றும்
வள்ளலார் கூறும்  நித்திய ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் போது
அசுத்த  உஷ்ணம் தவிர்க்கலாம்

Others Views also welcome

Anbudan,
Karthikeyan.J

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment