சிரநடுவில் தாம் கண்ட பேருண்மை அனுபவத்தை வள்ளல் பெருமான் மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகின்றாதை நோக்குங்கள்.
கையறவு இலாது நடுக்கண்ணை புருவப்பூட்டு
கண்டுகளி கொண்டு (திறந்(து)
உண்டு நடுநாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவதென்றே மறைகள் பாடுவது பாட்டு.
http://www.vallalar.org/WebComponents/FrontPage.aspx?ViewName=tmBlogs&WebSiteId=2&ConId=467
வடலூர் வள்ளலார் ஞானசபை முழுவதும் தத்துவ அமைப்பு. எண்கோண வடிவமானது. திசைகள் எட்டு. ஆதலின் எண்கோண வடிவம். எட்டிதழ்த் தாமரை (அட்டதள கமல) வடிவம். தெற்கு நோக்கியது. சைவத்தில் முதன்மையான சிதம்பரம் கோயில் தெற்கு நோக்கியது. வைணவத்தில் முதன்மையான ஸ்ரீரங்கம் கோயில் தெற்கு நோக்கியது. தெற்கு நோக்கிய சன்னதிகள் சிறந்தவை. வடக்கிலும் தெற்கு சிறந்தது என்பார் வள்ளலார். ஞானசபையும் தெற்கு நோக்கியது. சபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும் மேல்புறம் சிற்சபையும் உள்ளன. கிழக்கு நோக்கிய வாயிலையுடைய பொற்சபை, தெற்கு நோக்கிய வாயிலையுடைய ஞானசபை ஆகிய மூன்றும் ஆய்த எழுத்தைப்போல், சிவபெருமானின் முக்கண் போல் அமைந்த்துள்ளன. பொற்சபையும் சிற்சபையும் சிதம்பரத்தில் முன்னரே உள்ளவை. வள்ளலார் புதிதாகக் கண்டது ஞானசபை.
சிற்சபை .. சூரியன் , வலக்கண்
பொற்சபை சந்திரன், இடக்கண்
ஞானசபை .. அக்கினி, நெற்றிக்கண், புருவமத்தி
நமது உடம்பின் ஆறு ஆதாரங்களின் ஆறாவது ஆதாரம் புருவமத்தி, ஆக்ஞை என்பது இதன் பெயர், ஆக்ஞை – ஆணை, கட்டளை, எல்லா இடத்திற்கும் ஆணையிடும், கட்டளையிடும் இடமாதலின் இப்பெயர் பெற்றது. இதுவே. ஜாக்கிரஸ்தானம், விந்துஸ்தானம், அறிவிடம், லலாடம், முச்சுடரிடம், முச்சந்திமூலம், முப்பாழ்,, மகாமேரு, பாலம், கபாடஸ்தானம், சபாத்துவாரம் சிற்சபை, நெற்றிக்கண், புருவமத்தியமூலம், என இதற்குப் பல பெயருண்டு,
எண்கோண வடிவமான ஞானசபைக்குள் பன்னிருகால் மண்டபம் ஒன்றும் நாற்கால் மண்டபம் ஒன்றும் ஒன்றினுள் ஒன்றாக உள்ளன. பன்னிருகால் மண்டபத்தின் நடுவே நாற்கால் மண்டபம் உள்ளது. நாற்கால் மண்டபத்தின் நடுவே வள்ளற் பெருமான் ஏற்றிவைத்தருளிய அருட்பெருஞ்ஜோதி தீபம் உள்ளது. அருட்பெருஞ்ஜோதி தீபத்தின் முன்னர் ஆறடி ஒன்பதங்குல உயரமும் நாலடி இரண்டங்குல அகலமும் உள்ள கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. தீபத்தையும் கண்ணாடியையும் வள்ளற்பெருமான் சித்திவளாகத்தில் ஒருமண்டலம் (48 நாள்) வழிபாட்டில் வைத்திருந்து அதன்பின்பே சபையில் நிறுவச் செய்தார். கண்ணாடியின் முன் ஏழு வெவ்வேறு நிறத்திரைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
http://www.vallalar.org/WebComponents/FrontPage.aspx?ViewName=tmBlogs&WebSiteId=2&ConId=470
11/18/2008 6:30:01 AM
இறைவன் ஒவ்வொரு மனித தேகத்திலும் பூரணமாக விளங்குகின்றார்/ உச்சிங்குங்கீழே உண்ணாவுக்கு மேலே புருவமத்திக்கு நேர் உட்பாகத்தில் தலைநடு இடத்தில் ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையோடு எப்போதும் கருணை விளக்கென பிரகாசிக்கின்றார்.
உச்சிக்கு கீழே உண்ணாவுக்கு மேலே, நிதம் வைச்ச விளக்கு எரியுதடி வலைப்பெண்ணே
சித்தர் பாடல் அதாவது
நமது தலையில் மண்டை ஓட்டின் உள்ளே பெருமூளை, சிறுமூளை, முகுளம் என்ற மூன்று மூளைப்பகுதிகள் உள்ளது பெருமூளைக்கு கீழே ஓங்கார முகுள மூளைக்கு மேல் ஓர்குழி உள்ளதாம். அந்த குழி ப கர வடிவத்தில் உள்ளதாம்( cerebro spinal cavity) இதற்கு மேல் உள்ள வெற்றிடத்தில் தான் ஆன்மப் பிரகாசம் சதா நான் நான் என்ற வண்ணமாய் அறிவாகாயமாய் சுடர்விட்டுக் கொண்டு இருக்கின்றதாம். இந்த மெய்ஞ்ஞான (சத்தியஞான சபை) உணர்வுக்கு உள்ளீடாய் இருப்பது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி கடவுட் பிரகாசம்.
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment