Pages

Saturday, November 8, 2008

[vallalargroups:871] Re: akkatchi(அக்கச்சி)

எல்லாம் செயல் கூடும் என்னாணை  அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து.
 
வள்ளற்பெருமான் அருமையாக தன்னுடைய பாடலில் இயற்கையைத் தொடர்புபடுத்தி  ஞான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
 
கருணையே வடிவான கருணாமூர்த்தி தன்னுள் கண்ட மயில் ( காட்சிக்கு மயில் நடனம் ) என்று சொல்லப்படும் திருவுருக்காட்சியையும், குயில் ( இசைக்கு குயில் குரல் ) என்று சொல்லப்படும்  நாத ஓசையையும் தன்னுள் கண்டிருக்கிறார் என்பதை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.
 
அதனால் தன்னுள் என்ன மாற்றம்  நிகழ்ந்தது என்பதை வள்ள்ற்பெருமான் திருவாய் மலந்தருளினார்.
 
இக்கூற்றை நாம் பாடலின் முதல் கண்ணியில் மற்றும் குறிக்கோள் வைக்காமல் அடுத்தடுத்து வரும் கண்ணியில் கவனித்தோமென்றால் தெளிவு கிடைக்கும்.
 
தொடரட்டும் நமது சத்சங்கம். வளரட்டும் மெய்ஞான அறிவு.
 
எல்லா உயிகளும் இன்புற்று வாழ்க.
 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment