Ella Uyirgalum Inbutru Vazga
வள்ளலார் யாருக்கு உணவு கொடுக்க சொல்கிறார் ?
- ஆதரவே இல்லாத ஏழைக்கு
- உள்ளபடி பசித்த ஏழைக்கு
எத்தனை பேருக்கு கொடுக்க சொல்கிறார் ?
தங்கள் தரத்திற்குத் தக்கபடி
பசியை நீக்குவதால் என்ன பயன் ?
- பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது,
- மண்ணும் சூடு செய்யாது -
- பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா -
- விடூசிகை* விஷக்காற்று விஷசுரம் முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா -
- அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் -
- அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் -
சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் - - வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் -
- சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் -
துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் - - சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment