Pages

Tuesday, July 22, 2008

[vallalargroups:594] ஆண்டவர் கட்டளையிட்டது எது ?

Ohm Satguru Ramalingaya Nama

Dear Vallalar Friends,

Today Sath-Sung(Sath-Vichara) Questions and Answers....,

நான் எவ்வாறு மற்றவர்களை உண்மை வழிக்கு கொண்டு வருவது ?
என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும்,
அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்;
மிரட்டிச் சொல்லுவேன்;
தெண்டன் விழுந்து சொல்லுவேன்;
அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்;
அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.
இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.
இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன்.

நாங்கள் இப்போது நல்ல ஒழுக்கத்தில் இல்லையே ? என்ன செய்வது ? கடவுளை அறிய வாய்ப்பு உள்ளதா?

இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் - சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது - அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.

---------------------------------------------

ஆண்டவர் கட்டளையிட்டது எது ? -  Answer Tommorrow


Anbudan,
Vallalar Karthi

Click Subscribe to this Vallalargroups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI
THANIPERNGKARUNAI ARUTPERUNJOTHI

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment