appreciated.may your work to be continued and enlighten all. gud luck
2008/7/1 vallalar groups <vallalargroups@gmail.com>:
> Why we need to do SELF-ENQUIRY(SATH-VISARAM) ?
> Dear Sanmarga Friends,
>
> Our Vallalar has given "Very BIG Advice" to us.
>
> Every one has to understand this "The Great Sermon" (பேருபதேசம்).
>
> vallalar has mentioned "This is final advice" to all...
>
> This Core Section "The Great Sermon" (பேருபதேசம்) contains all thiruarutpa
> songs meanings and lot key tips for everyone has to follow..
>
> This "The Great Sermon" (பேருபதேசம்) available in Tamil as weel as English..
>
> Prof.Dr.Ganapathy has translated into English. Please forward this "The
> Great Sermon" to your english readers.
>
>
> "The Great Sermon" (பேருபதேசம்)
>
> In English (http://www.vallalarspace.com/vallalargroups/Articles/1335 )
>
> The Great Sermon
>
> The Great Sermon of Saint Vallalar, delivered at 8 a.m, on Wednesday, the
> 22nd of May 1873, at the sacred abode of Siddhivalagam in Mettukuppam, on
> the occasion of the first ever flag hoisting ceremony.
>
> Dear People gathered here, Do not while away your time any more, as you have
> been doing so far.
>
>
>
> Right from now on, and with in a short period of ten days, when God makes
> his advent at the House of Truth and Charity, you be engaged in an enquiry
> of the scriptures. Such an enquiry should be about us, and about God protect
> us from above.
>
>
>
> Either together, or individually, or in the company of those who are in tune
> with your thinking and conduct, if you request velaiah mudaliar, he will
> offer you an adequate and dignified exposition. You can ask him, or do some
> useful enquiry by yourselves.
>
>
>
> If you have already begun your enquiry, the first thick screen of green, of
> all the screens, that in ignorance hides our spiritual knowledge, will first
> go. Once this is gone, the other screens also will quickly go. The nature of
> the green color is that it is the basic color of black.
>
>
>
> Praying that such a thick screen should go, contemplate on God. Though this
> color is the basis of our ills, when you constantly pray to God, even while
> resting in bed, to let Him enlighten you of truth, all that you should know
> shall be known to you,
>
>
>
> This enquiry relates to the infinite world of the spirit, and the finite
> world of Earth. Of these two, the enquire into the earthy world, is not an
> enquiry at all. Generally, when it is said that one is engaged in an
> enquiry, it is not to be understood as an enquiry. It is not also an enquiry
> after truth. For, the meaning of "enquiry" here is that it negates an
> enquiry into the ordinary world. Thus, an enquiry, such as this, is always
> about an enquiry into the infinite world.
>
>
>
> Just as the moss, covering water, is removed, the green screen of desires
> that hides our Soul can be removed by the high intensity of the heat of the
> investigation, and not by other intensities. This intense heat is found in
> the experiences of yogi. This can not be created by human dimensions.
> Praying to God, and ever thinking of him, will create the high heat, more
> than when indulging in an enquiry. The yogis generate this intense of heat,
> by doing penance in the woods, on the mountains, and in the caves.
>
>
>
> By Praying to god, and thinking of Him, a million upon million times over,
> more intense heat can be generated, than by doing penance.
>
>
>
> Thus, in eight hours duration, with no thoughts of the earthly world, but
> with thoughts of the spiritual world, with spiritual intensity, and with
> thoughts of god, we would receive what you should.
>
>
>
> In
> Tamil((பேருபதேசம்)-
http://www.vallalarspace.com/VallalarGroups/Articles/1337
>
>
>
> பேருபதேசம்
>
> ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு,
> மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி
> கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.
>
> இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம்
> கழித்துக்கொண் டிராதீர்கள்.
>
> இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் -
> வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த
> விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை
> அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க
> வேண்டியது.
>
> விசாரணை எவ்வாறு செய்வது?
> அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது,
> உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத
> முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம்
> அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும்
> விசாரிக்கலாம்.
>
> விசாரணையின் பயன் என்ன? / நாம் ஏன் விசாரணை செய்ய வேன்டும்?
> இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக்
> கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய
> பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக
> விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால்,
> கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது.
>
> விசாரணை எப்பொழுது செய்வது?
> இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை
> நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும்
> படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க
> வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
>
> உண்மை விசாரணை எது?
> அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம்
> பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல.
> சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம்
> விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்:
> வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக
> விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது.
>
> ஆன்மாவைத் மூடியிருக்கின்ற திரைகளை எவ்வாறு நீக்குவது?
> ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல்
> மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற
> உஷ்ணங்களால் நீக்க முடியாது.
> அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில்
> உண்டுபண்ணுவதற்குத் தெரியாது.
>
>
> எப்பொழுது அதிக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்?
> அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை
> நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை
> முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ்
> உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு
> பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும்
> நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக
> உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.
>
> எவ்வளவு நேரம் விசாரணை செய்ய வேன்டும்?
> எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம
> நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து
> கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.
>
>
>
> For Full Version , please visit
> In English (http://www.vallalarspace.com/vallalargroups/Articles/1335 )
>
> In
> Tamil((பேருபதேசம்)-
http://www.vallalarspace.com/VallalarGroups/Articles/1337
>
> Anbudan,
> Vallalar Groups
>
> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
> >
>
--~--~---------~--~----~------------~-------~--~----~
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERNGKARUNAI ARUTPERUNJOTHI
Visit this group at
http://groups.google.co.in/group/vallalargroups?hl=en
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment