Pages

Thursday, August 30, 2018

[vallalargroups:5993] உடலின் மொழி

👬உடலின் மொழி👫

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்


       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

       நம் உடலை நேசிப்போம்.....

[vallalargroups:5992] Purusarttham (The four objectives worthy of human pursuit)

Vallalar has put before us these divine objectives:

Purusarttham (The four objectives worthy of human pursuit)

The four Purusartham that we could get or realise:

● To do Yéma Siddhi (alchemic transformation of Matter – alchemic perfection means turning things into the purified form like that of pure gold – also purified ecstasy of the golden perfection)

● To get educated on the art of Deathlessness (and become immortal by physical transformation – blissful living of a deathless Supernal Life)

● To subdue the tattvas (transformation of constitutions) – the human body constitute 96 tattvas (36 tattvas + 60 tattvigams)

● To seek the Supreme Divine and become Divine (and manifest the Divine)

Vallalar

GraceLight.Org

Wednesday, August 29, 2018

[vallalargroups:5991] Invitation: Fist Sunday Sathvicharam at Bangalore Sanmarga Sangam @ Sun 2 Sep 2018 10:30am - 4:30pm (IST) (Vallalar Groups)

Fist Sunday Sathvicharam at Bangalore Sanmarga Sangam

When
Sun 2 Sep 2018 10:30am – 4:30pm India Standard Time - Kolkata
Where
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, Vadalur Sri Jothi Ramalinga Swamigal Samarasa Sanamarkka Sangam 5th Cross,LaxmiNaraya Puram 560021, Bangalore, Karnataka (map)
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
vallalargroups@googlegroups.com
VALLALAR MISSION ORG
Attachments
Thiruvadi perumai
Discourse on Thiruvadi perumai by Sadhu Santhanam Ayya Kolappakkam

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

Sunday, August 26, 2018

[vallalargroups:5989] Invitation: Thiruvarutpa Isai Kacheri byThirubuvanam G.Aathmanathan a... @ Sun 26 Aug 2018 7pm - 9pm (IST) (Vallalar Groups)

Thiruvarutpa Isai Kacheri byThirubuvanam G.Aathmanathan and American students by Vallalar mission USA

When
Sun 26 Aug 2018 7pm – 9pm India Standard Time - Kolkata
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
vallalargroups@googlegroups.com
Attachments
26082018.png
Please see the attachment to attend the event online

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

Tuesday, August 21, 2018

[vallalargroups:5988] sanmarkka kid activity towards kerala flood

Our Sanmargie Purushothaman niece Priya who donated all her 4 years of saving for bicycle for Kerala

 எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே

Saturday, August 18, 2018

Wednesday, August 8, 2018

[vallalargroups:5986] 🏵 கருணை ஆரமுதே எனது கடவுளே

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி 🌻
அருட்பெருஞ்ஜோதி 🌻
தனிப்பெருங்கருணை🌻
அருட்பெருஞ்ஜோதி 🌻

    🏵 கருணை ஆரமுதே எனது கடவுளே 🏵
      ************************************
              பணமே நிலமே பாவையரே
 என்று பட்டிதொட்டி எல்லாம் 
பருத்த உனோடு
பன்றிபோல் 
ஆடி ஓடி தேடி 
அலைந்து திரிந்த இப்பாவியை 🙏

அன்பென்பது ஓர்அணுவளவும்
 தெரியாது, 
அகங்காரம் என்னும் 
யானைமீது ஏறிஅமர்ந்து,  
பசியினால் கண் பஞ்சடைத்து,
காது செவிடுபட 
பரிதவித்து நின்று ,
 ஐயா ....!
என்று என்னையும் ஓர் பொருட்டாய் பசிபொறாது என்எதிர்நின்று 
யாசித்த பெரியோரை,
கண்ணெதிரே நிற்பது 
என்னுள் அமர்ந்திருந்து
என்னை வாழவைக்கும் 
எனது ஆருயிர் தெய்வம்தான் என்று சிந்திக்கும் அறிவு சிறிதுமற்று
கடவுளை காணக்கிடைத்தும் 
கைத்தொழ மனம் இல்லாது,
கல்நிகர் நெஞ்சனாய், 
ஈரமற்ற இதயத்தவனாய்,
ஏதும் தெரியாதவன் போல்
பசிமுகம் பாராமல் 
கடந்து சென்ற
இவ்வன்மனத்து பாவியை 🌺

நெறியலா நெறிகளில் 
காலத்தைக் கடத்தி,
எனது ஆருயிர்க்கு 
துணையான கடவுள் 
இவரோ ! அவரோ! 
என்று ஊர்உராய் 
ஓடித்திரிந்து
 நாடித்தளர்ந்த
 இப்பாவியை 🏵

கற்றக் கல்வியே 
நம்மை கடைத்தேற்றும் 
என்றுக் கருதி ,
எனது உயிர்க்கு 
உற்ற கல்வியை கற்க தெரியாது ,
கற்பிப்பாரும் யாருமின்றி 
கோலிழந்த குருடனாய்
 கலங்கி நின்ற 
இக் குருட்டுப்பாவிக்கு 🌼

கடவுளை ஒத்த 
நுதற்கண்ணையே 
அளித்து காக்கும் 
"சுத்தசன்மார்க்கம்" என்னும்
 ஊன்று கோலை
கொடுத்து 
இக் கண்கெட்ட 
குருட்டு பாவிக்கும் 
வழிதுறை காட்டிய 
சற்குருவே 🔥

சாதல் பிறத்தல் என்னும் 
இயற்கைச் சட்டத்தையே 
உடைத்தெறிந்து ,
சாகா வரத்தையும் பெற்று ,
ஏகர் அனேகர் என்று 
இவ்வுலகம் போற்றும்
ஒன்றான அருட்பெருஞ்ஜோதி 
கடவுளையும் ஒன்றி அணைந்தவரே வள்ளலே எந்தாயே🌻

வழிவழியாய் வந்த 
அருளாலர்கள் மரபில் ,
தன்னுயிர் உய்தது 
போதாதென்று,
இம்மண்ணுயிரெலாம் 
உய்திட வேண்டும் என்று 
ஆண்டவரிடம் கண்ணீர்விட்டு
கதறி அழுத வள்ளலே 
எனதாருயிர் தந்தையே ஐயாவே🌺

இ்ப் பொல்லா வினையேன் 
குற்றமெல்லாம் 
குறிப்பில் கொள்ளாமல் ,
செல்லா நெறியில் சென்று ,
கல்லா கல்வியை கற்று 
காலம் கழித்து வீண்போகாமல்,
மரணத்தை தவிர்க்கும்
சாகாக் கல்வியைக் 
கற்றுத்தரும் 
"சுத்தசன்மார்க்கத்தை" 
காட்டுவித்து,
மண்ணுயிரெல்லாம்
கதிபெற்று வாழ்ந்திட
வழிதுறை காட்டிய
எனது இன்னுயிர் தந்தையே 🌺

வினைப் பெருக்கத்தால் 
அவத்தையுற்று துன்பக்கடலில் 
வருந்தி நெகிழ்ந்து ,
வினையை போக்குவதற்கு 
வழிதுறை தெரியாது 
மண்ணுயிர்கள் எல்லாம்
கலங்கி திரிவது கண்டு
மனம்தாளது ,
இம் மேதினியில் 
பார்திலகம் என்றோங்கும்
உத்தரஞாண சிதம்பரமாயும்,
உத்தரஞாண சித்திபுரமாயும்,
வடலூர் என்றும்,
பார்வதிபுரம் என்றும்
திருவருளாலும் 
உலகவராலும்  அழைக்கப்படுகின்ற "சத்தியஞான" சபையில் 
அண்டத்தையும் அகிலத்தையும்
ஆக்கி அழித்து காத்தருளுகின்ற அருட்பெருஞ்ஜோதி இறைவர்
இவ்வுலக உயிர்கள் எல்லாம் இன்பம் அடையும் பொருட்டே
ஒருமைத் திருநடம்புரிகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்ஜோதி தரிசனத்தை
ஜீவர்கள் எல்லோரும் கண்டு,
அவரவரவர்களின்
வல்லிய வினைகளைக் கழித்து, 
அவர்கள் எல்லோரும் 
சுத்தசன்மார்க்க அருள் நெறியில் 
உடலும் உயிரும் அழியாமல்
தழைத்து ஓங்கி 
நிலைத்து வாழ்ந்திட
திருவருள் கருணையால் 
சங்கம்,சபை,சாலை என்பதை
அமைத்துக்கொடுத்து 
இவ்வுலகவரை 
சுத்தசன்மார்க்க நெறியில் 
வாழ்விக்கும் வள்ளலே 
எனது திருவருட் தயாநிதியே💥

இக்கடையேன் 
உமது திருத்தாளினை 
எனது உயிரால் பிடித்திருக்க ,
நீர் எனது கைப்பிடித்து ,
மண்,பெண்,பொன் என்ற 
விடயக் காட்டில் மோகம் கொண்டு ஆசை,பாசம்,பந்தம்,பற்று என்ற நரகக்குழியில் விழுந்திடா வண்ணம்  , 
அப்பனே அம்மையே குருவே 
எனது உயிர்த்துணையே   
வல்வினையேன் செய்த பிழைகள் 
எல்லாம் திருவுளம் கொள்ளாது
என்கைப்பிடித்த
உமது திருக்கரம் தளர்ந்துவிடாமல் 
இறுகப்பிடித்து காத்தருள்வாயே.............🌻🔥🌺🏵🙏
....நன்றி ,
....வள்ளல் மலரடிப் போற்றி போற்றி !
....பெருமான் துணையில்,
...வள்ளல் அடிமை,
...வடலூர் இரமேஷ்.

Saturday, August 4, 2018

[vallalargroups:5985] சன்மார்க்கத் திருமண அழைப்பிதழ் - ‍ 23‍ ஆகஸ்டு 2018 - மேட்டுக்குப்பம்

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகித் திகழ்கின்ற திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருளாலும், தவத்திரு கோவை. சிவப்பிரகாச சுவாமிகளின் குருவருளாலும் எனது திருமணம் திருவளர்செல்வி ஞான. தனலட்சுமி அவர்களுடன் ஆகஸ்டு 23 2018 ஆம் நாள் வியாழக்கிழமை வடலூரைச் சார்ந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு அருகில் உள்ள தவத்திரு கோவை. சிவப்பிரகாச சுவாமிகளின் வள்ளலார் வளாகத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறும்.

திருமண வரவேற்பு ஆகஸ்டு 26 ஆம் நாள் பெங்களூரில் உள்ள ஶ்ரீராம் புரம் சன்மார்க்க சங்கத்தின் திருமண மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் நடைபெறும்.

அதுசமயம் தாங்களும் தங்களின் குடும்பத்தாரும் வருகை தந்து எங்களை வாழ்த்தி அருள பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

அழைத்துமகிழும்:

ஆனந்தபாரதி (ஆனந்தன்)
மற்றும் குடும்பத்தார்.
விருத்தாசலம்.
+91 7411275938