Pages

[vallalargroups:5890] வள்ளலார் வாக்கு.

மரணத்தை தடுக்க சுத்த சன்மார்க்கத்தார் தவிர தடுப்பார் யாரும் இல்லை....வள்ளலார் வாக்கு.

[vallalargroups:5885] பசுவதையை முழுமையாகத் தடைசெய்யுங்கள்:உச்சநீதிமன்றம்!!

பசுவதையை முழுமையாகத் தடைசெய்யுங்கள்:உச்சநீதிமன்றம்!!!

உலகத்தின் பூஜையறையாகவும்,உலகின் வழிகாட்டியாகவும் இருந்த நாடுதான் நமது பாரத தேசம்! கி.பி.1750 உடன் முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை உலகின் ஒரே வல்லரசு நாடாகவும்,செல்வ வளம் மிக்க நாடாகவும் இருந்தது நமது பாரதம் மட்டும் தான்;

இதற்கு உரிய காரணங்கள் நான்கே நான்கு மட்டுமே! கோவில்,பசு,விவசாயம்,பெண் இனம் இந்த நான்கின் ஆன்மீகப் பின்னணி அறிந்த  நமது முன்னோர்கள் உயர்ந்த மதிப்புடன் பராமரித்துவந்தார்கள்;

பாரதம் என்ற தேசத்தில் மட்டுமே பசு,கோவில்,பெண்,விவசாயம் இந்த நான்கும் போற்றப்பட்டும்;பாதுகாக்கப்பட்டும் வந்தது;800 ஆண்டு கால இஸ்லாமியப் படையெடுப்பின் போது கூட இவைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பும்,ஆபத்தும் ஏற்படவில்லை;

வெறும் 300 ஆண்டுகளாக நம்மை ஆள்கின்றேன் என்ற பெயரில் சுரண்டிய  ஆங்கிலேயன் காலத்தில் உண்டான ஆபத்துக்களும்,சிக்கல்களும் இன்று வரை 8.1.2018 தீர்க்கப்படவில்லை;

கோமாதா என்ற பசுவின் காயத்ரி மந்திரம்:

ஓம் மாதா பாலாயை ச வித்மஹே
மந்த்ர தேவதா தேஹாயை ச தீமஹி
தந்நோ ஸ்ரீ கோதேவி ப்ரசோதயாத்

எப்பேர்ப்பட்ட தெய்வீக அம்சங்களுடன் பசு என்ற விலங்கு இருந்தால்,அதற்கு என்று காயத்ரி மந்திரத்தை நமது முன்னோர்களாகிய ரிஷிகள் உருவாக்கியிருப்பார்கள்?!?

குருகுலக் கல்வியும்,திண்ணைப் பள்ளிக்கூடங்களும் பசுவின் பெருமைகளை போதித்துவந்தன;இவைகளை நிர்மூலமாக்கினான்  ஆங்கிலேயன்;அந்த இடத்திற்கு திமிர் பிடித்த மனிதர்களை உருவாக்கும் மெக்காலே கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தான்;

1875 இல் கொண்டு வந்த இந்த முட்டாள்த்தனமான கல்வித்திட்டத்தை மாற்றி,நமது பாரம்பரியத்தை போதிக்கும் கல்வித்திட்டத்தை இன்றுவரை கொண்டு வர வேண்டும் என்ற அக்கறை ஒரு போதும்  அரசுக்கு இருந்தது இல்லை;

கோமாதாவின் பெருமைகளை மீண்டும்  அனைவரும் அறிந்து கொள்ளும் முன்பு,அதை முழுமையாக அழித்துவிட்டு,அழித்ததன் அடையாளம் தெரியாமல் இருக்கவே ஆன்மீகப் பின்னணி இல்லாத செயற்கைப் பசுவாகிய ஜெர்ஸிப்பசுவை  ஆங்கிலேயன் உருவாக்கி, விவசாயிகளுக்கு இலவசமாகவே தானம் செய்தான்; ஆங்கிலேயன் என்ற முகமூடி அணிந்து கொண்டு இதைச் செயல்படுத்தியது இலுமுனாட்டிகள் என்பதையும் நினைவில் கொள்ளவும்;

கலியுகாதி 5118 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம்;பசுக்களின் பெருமைகளை பூமியில் பரப்பிட சித்தர்கள் பலர் கலியுகத்தின் ஆரம்பத்தில் நமது பாரத தேசம் முழுவதும் வாழ்ந்துவந்தார்கள்;அவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வாழ்நாளின் முடிவில் ஆன்மீக பூமியான தமிழ்நாட்டுக்கு வருகை தந்து முக்தியை சுலபமாகத் தரும் அண்ணாமலையில் வாழ்ந்தார்கள்;

பசும்பால் சித்தர்,பசு மடத்துக் கோனார்,பால் சோறு சித்தர் என்ற புனை பெயர்களில் விண்ணுலகில் இருந்து பாரத நாட்டிற்கு வருகை தந்து கோமாதா என்ற நாட்டுப் பசுக்களின் பெருமைகளைப் பரப்பினார்கள்;1900 வரையிலும் கூட ஒருவன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருகின்றான் என்பதை வைத்து அவனை சமுதாயம் மதிப்பதில்லை;எத்தனைப் பசுக்களைப் பராமரிக்கின்றான் என்பதைக் கொண்டே ஒருவனை செல்வந்தனாக மதித்தார்கள்;

தெரியாமல் ஒரு பசுவை   ஒருவன் மிதித்துவிட்டாலே,மிதித்தவனது அடுத்த 100 பிறவிகளில் வறுமையால் வாடவேண்டும்;ஏனென்றால்,ஒரே ஒரு பசுவின் உடல் முழுவதும் 300 விதமான தெய்வீக சக்திகள் குடிகொண்டிருக்கின்றன;இதை இன்றைய நவீன விஞ்ஞானம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க 1000 ஆண்டுகள் ஆகும்;

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆன்மீக பூமியான பாரத நாடு தனது ஆத்ம பலத்தை இழக்க வேண்டும் என்பதற்காக 1947 வரை சுமார் 276 பசுவதைக் கூடங்களை  ஆங்கிலேயன் உருவாக்கினான்;அது இன்று 30,000 பசுவதைக் கூடங்களாக விஸ்வரூபம் எடுத்து ஒரு நாளுக்கு 1,00,000 கோமாதாக்களைக் கொடூரமான முறையில் (24 மணி நேரமும்) கொன்று கொண்டு இருக்கின்றது; நாம் கோமாதவின் தெய்வீகப் பெருமைகளைச் சிறிதும் உணராமல் இருப்பதால் தான் இவைகள் இன்றும் 8.1.2018 கூட இயங்கி வருகின்றன;

இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு கோமாதா என்ற பசுப்பாதுகாப்பில் நாட்டம் உடையோர் சிலர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்;

அகில பாரதிய கோசேவக் சங்கம்,அகிம்சா சேனா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இதில் முனைப்பு காட்டின;அகில பாரதிய கோசேவக் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான ராஜீவ் பாய் எப்படியாவது பசுவதையை நாடு முழுவதும் நிறுத்த வேண்டும் என்ற தாகத்துடன் சட்டரீதியான போராட்டத்தில் இறங்கினார்;

125 கோடி இந்தியர்கள் பாரத தேசத்தில் வாழ்ந்து வந்தாலும்  ஆங்கிலேயனின் மெக்காலே கல்வித் திட்டத்தினால் கோமாதாவின் பெருமைகளை அறிந்தவர்கள் 0.000001% அளவுக்கு சுருங்கிவிட்டார்கள்;இன்றைய கால கட்டத்தில் பாரத நாடு முழுவதும் வாழும் இந்துக்கள் மட்டுமா தினசரி வருமான ஏற்றத்தாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்? 

இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும், 
சீக்கியர்களும்,பவுத்தர்களும், சமணர்களும் தான் சிரமப்பட்டுவருகின்றார்கள்!!!இதற்குக் காரணம் பசுவை தினமும் வதைத்துக் கொல்வதுதான் காரணம்....

இது மிகவும் முக்கியமான தேசிய பிரச்சினை என்பதால் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால் சரியாக இருக்காது;அரசியல் சாஸன அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று ராஜீவ் பாய் வற்புறுத்தினார்;மூன்று ஆண்டுகள் காலப் போராட்டத்திற்குப் பிறகு,உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதி தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது;கி.பி.2004 இல் துவங்கிய வாதம் கி.பி.2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை நீடித்தது;

கோமாதா என்ற பசுக்களைக் கொல்ல வேண்டும் என்று வாதிட்ட தரப்பினர் பொருளாதார ரீதியாக மிகுந்த வசதி படைத்தவர்கள்!!! அவர்கள் பிரபல வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தார்கள்;

சோலி சாரப்ஜி (இவரது கட்டணம் ரூ.20,00,000/-);

கபில்சிபில்(இவரது கட்டண ரூ.22,00,000/-)

ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி(இவரது கட்டணம் ரூ.33,00,000/-)

ஆகியோர் கசாப்புக் கடைக்காரர்கள் சார்பில் வாதிட்டார்கள்;

அதிக கட்டணம் வாங்கும் வழக்கறிஞரை அமர்த்த ராஜீவ் பாயிடம் பணம் இல்லை;எனவே,உங்களுக்காக நீதிமன்றமே வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து தரும் என்று தலைமை நீதிபதி கூறினார்;இதன் அடிப்படையில் வழக்கறிஞர் எம்.இ.எஸ்குரி அமர்த்தப்பட்டார்;

"கிழட்டுப் பசுவைப் பராமரிப்பது பொருளாதார ரீதியாக மிகுந்த சுமையை அளிக்கும்;மாறாக,பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை ஏற்றுமதி செய்தால் அன்னியச் செலாவணி ஈட்டலாம்;வறட்சி காரணமாக மகசூல் குறைந்துள்ளது;வைக்கோலோ அல்லது புல்லோ போதுமான அளவில் கிடைக்கவில்லை;

எனவே,பட்டினியால் கால்நடைகள் சாவதைவிட அவற்றை(பெற்ற தாயைக் கொல்வது போல) வெட்டிக்கொன்று இறைச்சியை விற்பனை செய்தால் கணிசமான தொகையை ஈட்டலாம்;

மக்களுக்கெ வாழ்க்கை நடத்த போதுமான இடவசதி இல்லை;கால்நடைகளை பராமரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்புடையது அல்ல;எனவே,செண்டிமென்ட் பார்க்காமல் பசுக்களைக் கொன்று குவிப்பதில் தவறில்லை;"என்று அபத்தமான வாதங்களை ராஜீவ் பாய் தனது ஆணித்தரமான வாதங்களால் தூள் தூளாக்கினார்;

ஒரு பசுவைக் கொன்றால் அதிகபட்சம் ரூ.10,000/-தான் கிடைக்கும்;ஆனால்,சாணம்,கோமியம் ஆகியவற்றை செம்மையான முறையில் பயன்படுத்தினால் பல கோடி ரூபாய்கள் வருமானம் ஈட்ட முடியும்;

பசு தினம் தோறும் 10 கிலோ சாணம் தருகின்றது; 3 கிலோ கோமியம் தருகின்றது;   1 கிலோ சாணத்தைப் பயன்படுத்தினால் 33 கிலோ இயற்கை உரம் தயாரிக்க முடியும்;இந்த ஆர்கானிக் உரத்திற்கு நல்ல வரவேற்பு நாடு முழுவதும் இருக்கின்றது;வருடம் தோறும் இதுபற்றிய விழிப்புணர்ச்சியால் இதன் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது;

1 கிலோ சாணத்தைப் பயன்படுத்தி எப்படி 33 கிலோ இயற்கை உரம் தயாரிக்க முடியும்? என்று ராஜீவ் பாயிடம் கேட்டார் நீதிபதி! 

இதை நிரூபித்துக் காட்டுகின்றேன் என்று ராஜீவ் பாய் கூறினார்;செயல் விளக்கத்தின் மூலம் ராஜீவ் பாய் நிரூபித்துக் காட்டியதைக் கண்டு நீதிபதி வியப்பில் மூழ்கிவிட்டார்;விஞ்ஞானிகளும் இதை ஆய்வு செய்து உறுதிபடுத்தினார்கள்;

ரசாயன உரங்களில் 2 அல்லது 3 நுண்ணூட்டச் சத்துக்கள் மட்டுமே உள்ளன;ஆனால்,சாணத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தில் மங்கனீஸ்,பாஸ்பேட்,கோபால்ட்,சிலிகான்,பொட்டாசியம்,
இரும்புச்சத்து,சுண்ணாம்புச்சத்து என 18 நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன;

எங்கள் கிராமத்துக்கு வாருங்கள்;எனது பெற்றோர் 15 ஆண்டுகளாக இந்த உரத்தைத் தயாரித்து வருகின்றார்கள்;இதை நேரில் காணுங்கள் என்று ராஜீவ் பாய் விடுத்த அழைப்பை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்;இயற்கை உரம் தயாரிப்பதன் மூலமாக கிராமீயப் பொருளாதாரம் மலர்ச்சி அடைகின்றது;பல மாநிலங்களில் இதன் மூலமாக சில நூறு கிராமங்கள் பொருளாதாரத் தன்னிறைவை எட்டியுள்ளன;

ஒரு கிலோ இயற்கை உரம்,சர்வதேச சந்தையில் ரூ.6/-க்கு விற்பனை செய்யப்படுகின்றது;365 நாட்களும் பசுவிடம் இருந்து சாணம் கிடைக்கின்றது;இதைக் கொண்டு தினம் தோறும் குறைந்த பட்சம் 300 கிலோ இயற்கை உரம் தயாரிக்க முடியும்;

இந்தத்தயாரிப்பு மூலமாக வருடத்திற்குக் கிடைக்கும் தொகை ரூ.6,57,000/-இருபது ஆண்டுகள் கோமாதா என்ற பசுவின் மூலமாக கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.1,31,40,000/-இதனால்தான் சாணத்தில் செல்வத்தின் கடவுளாகிய திருமகள் வாசம் செய்வதாக இந்துக்கள் நம்புகின்றார்கள்;

இனி அடுத்தபடியாக கோமியத்தைப் பற்றி பார்ப்போம்;

ஒரு பசு தினம்தோறும் 2 அல்லது 2.5 லிட்டர் கோமியம் தருகின்றது;புற்றுநோய்,நீரழிவு,மூட்டுநோய்,சுவாசக் கோளாறு உள்ளிட்ட 50 நோய்களுக்கு கோமியத்தில் இருந்துதான் மருந்து தயாரிக்கின்றார்கள்;

ஒரு லிட்டர் கோமியத்தின் விலை ரூ.500/-சர்வதேச சந்தையில் ஒரு லிட்டர் கோமியத்தின் விலை ரூ.1,500/-இதை திட்டமிட்டு சந்தைப்படுத்தினால்,தினம் தோறும் ரூ.3000/-கிடைக்கும்;ஒரு வருடத்திற்கு ரூ.10,00,000/-என்று கணக்கிட்டால்,இருபது ஆண்டுகளில் கோமியம் மூலமாக மட்டுமே ரூ.2,00,00,000/-கிடைக்கும்;சாணத்தில் இருந்து மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்ய முடியும்;

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எல் பி ஜியை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டுவதைப் போல சாணத்தில் இருந்து பெறப்படும் மீத்தேன் வாயுவை உபயோகித்து இருசக்கர வாகனங்களை மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களையும் இயக்க முடியும்;

நீதிபதியின் அனுமதியுடன் அவரது கார் மீத்தேன் வாயுவைக் கொண்டு இயக்கப்பட்டது;இதனால்,புகை வெளிப்பாடு குறைந்துவிடும்;ஒலி மாசுவும் குறைந்துவிட்டது;பொருளாதார ரீதியாகவும் இது மிகுந்த ஆதாயம் அளிக்கக் கூடியது;

டீசலைப் பயன்படுத்தினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4 வரை ஆகின்றது;ஆனால்,மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தினால் 50 காசு மட்டுமே ஆகின்றது;மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தினால் பில்லியன் கணக்கில் பணத்தையும்,அன்னியச் செலாவணியையும் மிச்சப்படுத்த முடியும்;

பாரத நாட்டில் 17 கோடி பசுக்களும்,மாடுகளும் உள்ளன;இவற்றின் மூலமாக பெறப்படும் சாணத்தில் இருந்து மீத்தேன் வாயுவை தயாரிப்பதை முடுக்கிவிட்டால்,அரபு நாடுகளிடம் எண்ணெய்க்காக கையேந்த வேண்டியதில்லை;அமெரிக்காவிடம் டாலருக்காக யாசகம் கேட்கவேண்டியதில்லை;பாரதத்தின் பொருளாதாரம் 1750 வரை இருந்தது போலவே மீண்டும் சுயச்சார்பு (தன்னிறைவு) பெற முடியும்;

இந்த வாதங்களை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டா உச்சநீதி மன்ற நீதிபதிகள்,கசாப்புக் கடைக்காரர்களை நோக்கி வேறு ஏதேனும் வாதத்தை முன் வைக்கின்றீர்களா? என்று கேட்டனர்;

அதற்கு அவர்கள், "மதரீதியாக பசுக்களையும்,மாடுகளையும் வெட்டலாம்;மத உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது" என்று கூறினார்கள்;

இதை முறியடிக்கவும் ராஜீவ்பாய் பல ஆதாரங்களைத் தொகுத்து அளித்தார்;

 "எல்லா முஸ்லீம்களுமே மாடுகளை வெட்ட வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது;முஸ்லீம்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே இன்னும் சொல்லப்போனால், குரேஷி என்ற உபபிரிவினர் மட்டுமே மாடுகளைக் கொல்வதில் தீவிரமாக உள்ளனர்;மாடுகளைக் கொல்வது இஸ்லாமுக்கு உடன்பாடானது என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை;திருக்குரானில் இதற்குச் சான்று கிடையாது;

பாரதத்தை ஆண்ட பல முஸ்லீம் மன்னர்கள் பசுவதைக்கு தடை விதித்து இருந்தார்கள்;முகலாய வம்சத்தின் முதல் மன்னரான பாபர்,பசுவதைக்குத் தடைவிதித்திருந்தார் என்பதற்கான சான்று அவரது சுயசரிதையான பாபர் நாமாவிலேயே உள்ளது;அவரது மகன் ஹூமாயூனும் இதையே பின்பற்றினார்;அடுத்தடுத்து வந்தவர்களும் இதே தடத்தில் பின்பற்றினார்கள்;இஸ்லாமிய வெறியர் என்று கூறப்படும் ஓளரங்கசீப் காலத்திலும் பசுவதைக்குத் தடை நீடித்தது;

தென்பாரதத்தை எடுத்துக் கொண்டால்,திப்புச்சுல்தானின் தந்தையாகிய ஹைதர் அலி மிகக் கடுமையான சட்டத்தை இயற்றியிருந்தார்;யாரேனும் பசுவைக் கொன்றால் அவரது தலையை வெட்டி எறிய வேண்டும் என்பதுதான் தண்டனை;

திப்புச் சுல்தான் காலத்திலும் பசுவதைக்குத் தடை நீடித்தது;ஆனால்,தண்டனையை மென்மைப்படுத்திவிட்டார்;தலையை வெட்ட வேண்டாம்;கைகளை மட்டும் வெட்டினால் போதும் என்பது திப்புச் சுல்தான் காலத்து நிலவரம்;

திருக்குரான்,ஹதீஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களைச் சமர்ப்பித்த ராஜீவ்பாய் எந்த இடத்திலும் பசுவதைக்கு ஆதரவான வாசகம் எதுவும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்;

இன்னும் ஒரு படி மேலாக பேகம்பூர் முகமது சாகிப்,பசுவைக் கொன்றவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளதை ராஜீவ் பாய் சுட்டிக் காட்டியுள்ளார்;

இந்த எதிர்வாதங்களைக் கேட்டு கதிகலங்கிப் போன,கசாப்புக் கடைக்காரர்கள் எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டார்கள்;நீதிமன்றமும் இசைவு தந்தது.ஆனால்,அவர்களால் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை;

இதையடுத்து 26.10.2005 அன்று உச்சநீதி மன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது;இந்த 66 பக்க தீர்ப்பில் 'கோமாதா என்ற பசு இனத்தை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை மட்டுமல்ல;மாநில அரசுகள்,யூனியன் பிரதேச அரசுகளும் நிறைவேற்ற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது;

கோமாதா என்னும் பசுவை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களின் கடமை என்று தீர்ப்பளித்துள்ளது;

பொருளாதார ரீதியாகவும்

சுற்றுச்சூழல் ரீதியாகவும்

ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோமாதா என்ற பசுவை கண் எனக் காப்போம்;

பசுவளத்துறை என்ற தனி இலாகாவை மத்திய அரசும்,மாநில அரசுகளும்,யூனியன் பிரதேச அரசுகளும் உடனடியாக உருவாக்க வேண்டும்;

அவைகளை செம்மையான முறையில் இயங்க வைத்து,பொருளாதாரத்தை ஓங்க வைக்க வேண்டும் என்பது கோமாதா என்ற பசுவின் ஆர்வலர்களின் விருப்பமும்,கோரிக்கையும் ஆகும்;

ஆதாரம்:விஜயபாரதம்,

பக்கங்கள்42 டூ 46;வெளியீடு 12.1.2018

Wednesday, January 24, 2018

[vallalargroups:5884] 2017-11-26-#49 ThayavuThiru Thambaiyya Avargal on Vallalar Aruliya Pinda Anubavam.mp3

Vallalar Groups has shared the following audio file:
Sender's profile photoPinda Anbavam Part 1 By Thanjavur. thiru.Thambaiah Avl
Google Drive: Have all your files within reach from any device.
Google Inc. 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, USA
Logo for Google Drive

[vallalargroups:5883] pinda anubavam 2

Vallalar Groups has shared the following audio file:
Sender's profile photoபிண்ட அனுபவம் part 2 by th.thambaiah avl
Google Drive: Have all your files within reach from any device.
Google Inc. 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, USA
Logo for Google Drive

Tuesday, January 23, 2018

[vallalargroups:5881] Invitation: Free online Sathvicharam arranged by Vallalar mission USA @ Sun 28 Jan 2018 7:30pm - 9:30pm (IST) (Vallalar Groups)

Free online Sathvicharam arranged by Vallalar mission USA

When
Sun 28 Jan 2018 7:30pm – 9:30pm India Standard Time
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
Vallalar Groups
Attachments
VUM Eng
Discourse on Suddha Sanmargam Ethics by Dr.Thill Raghu
Pls see the attachment for contact number and access code

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

[vallalargroups:5880] Vadalur toilet work on progress... at kalapattu ayya place by sanmarkka sevai maiyam

Vadalur toilet work on progress... at kalapattu ayya place by sanmarkka sevai maiyam