Saturday, May 31, 2014

[vallalargroups:5461] Pyramids - some astounding facts

                                                                                                                                 
Pyramids – some astounding facts 

 
Yes, it is about the massive structures  on the banks of  river  Nile , Egypt 

 
Even now scientists can’t unfold the secrets and mysteries  behind these buildings completely

 
It is believed that these were built to preserve  the dead bodies of great personalities like kings with all the things they used in their lifetime as Egyptians believed that there was life  even  after the death

          
   Mystery is that the bodies don’t  decay

 
The mystery behind this non- decaying is that the pyramids are built in such a way that it keeps on energizing the matter that is kept inside and preserves  for years together

 
 Secret lies in the dimensions – base width,  slant height and its relation

          Buildings built  with these relative dimensions  and apex centre at the top , keep on drawing energies from Universal consciousness and preserves the matter for ever

 
For example, temple towers in south India  are similar to pyramids in structure and hence presiding deities in the sanctum sanctorum  draw  energized from Universal consciousness which enables them to fulfill the desires, aspirations , wishes , needs of all devotees who  throng.

 
In old houses, we can see at the front , two triangle shaped openings would  be cut on the either sides in which oil lamp will be lit and kept which can’t be put out even by  heavy winds – which mean that mind if put in pyramids will not wander and will be “STILL”

 
It is also found that,   wishes are turned into reality , if , they are  written in a piece of paper  in  RED INK and kept inside the pyramids . Try and see this rather than sending “ IMPORTANT MESSAGES “  that come from Tirupathi or Shiradi to 20  persons which is superstition.
 
This is equally going to temple and praying for fulfillment of wishes.
 
Now I have suggested a way to fulfill yr wishes without going to temple.
 
Savings in time and energy

 
 My Personal experience :

      I use Gillette ready shaver and after shaving , I keep  the razor inside the pyramid everytime  and to my astonishment, one razor  lasts for minimum 1.5 years and max 3 years
 Others can try this simple exercise.

 
   Lastly, students studying  in pyramids shaped rooms  study with greater concentration and do better  in the examinations  than others.

 
 
    BG Venkatesh



Friday, May 30, 2014

[vallalargroups:5460] தூங்காத தூக்கம் - யோக நித்திரை

தூங்காத தூக்கம் - யோக நித்திரை :

சித்தர் பாடல் :

ஆங்காரத்தை உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்கமலே தூங்கி சுகம் பெறுவது எக்காலம் ??

பெருமாள் ஸ்ரீ ரங்கத்தில் யோக நித்திரை செய்து கொண்டிருப்பதாக கூறுவர்

நாம் தினமும் இரவில் தூங்குகின்றோம் - அது என்ன - எப்படி என்று தெரியும் ??

அதென்ன தூங்காத தூக்கம் ??

தூங்காமலே தூங்குவது என்பது தான் நாம் செய்ய வேண்டிய சாதனை - பயிற்சி

நாம் தூங்கும் போது, பொறி புலன்கள், உணர்வு , உடல் எல்லாம் அடங்கி போகின்றது - அது செத்த சவத்திற்கு சமம் - அதனால் தான் தூங்குவது போலும் சாக்காடு ( மரணம் ) என்கிற்து குறள்

தூங்காமலே தூங்குவது என்பது - தூக்கம் போல் எல்லாம் நடக்கும் - ஆனால் , உணர்வு மட்டும் தூங்காமல் , விழிப்பு நிலையில் இருக்கும் - அந்நிலையில் - பஞ்ச இந்திரியங்களும் ஒன்றாகக் கூடி இருக்கும் - அதனால் மனமானது அலைபாயாமல் இருக்கும் - அதனால் இந்த நிலையை - தூங்காத தூக்கம் என்கின்றனர் நம் யோகிகள்

மனம் செயலற்றுப் போவதால் , அந்நிலையில் மிகவும் சுகமாக இருப்பதனால், தூங்காமலே தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று கேட்கின்றனர் ??




வெங்கடேஷ்





[vallalargroups:5459] கந்த புராணம் - ரத்தினச் சுருக்கம் ( சன்மார்க்க விளக்கம் )

கந்த புராணம் - ரத்தினச் சுருக்கம்
( சன்மார்க்க விளக்கம் )


 காமன் மன்மத பாணம் எய்ய
ஆண் காமமுற்று பெண்ணிடம் கூட
விந்து உருகி நாதத்துடன் கூட
கரு உருவாகி
பத்து திங்கள் கழித்து
குழந்தை பிறக்கும்

இது உலக நியதி - புற அனுபவம்


 பஞ்ச இந்திரியங்கள் ஒன்றாகக் கூட
பரவிந்து ( சிவம் ) மேலேறி
சுழுமுனையில் பர நாதத்துடன் ( சக்தி ) கூட
சண்முகமணியை உதிப்பித்து
மும்மலமாம் சூரபதுமனை அழிக்கும்

இது அக அனுபவம்


சன்மார்க்க விளக்கம் :

முருகன் வேல் கொண்டு சூரபதுமனை வதம் செய்தார் என்பது

வேல் = சுத்த உஷ்ணம்
சூரபதுமன் = வண்ணத் திரைகள்

சுத்த உஷ்ணத்தினால் மலங்கள் கழிந்து - திரைகள் எரிந்து - ஆன்மா பிரகாசிக்கும்


வெங்கடேஷ்

Thursday, May 29, 2014

[vallalargroups:5458] மீண்டும் வாரா வழி

சாகாக்கல்வி - மீண்டும் வாரா வழி

 
* மனம் அமைதி அடைவதற்கு வழி கேட்டேன்
  " திருவடியை பற்றி நில் "  என்றது

 
* வினைகளை ஒழிப்பது எப்படி என்றேன் ??
    " இரகசியம் எலும்பில் இருக்கின்றது " என்றது

 


* மீண்டும் வாரா வழி கேட்டேன்

போதப் பந்தை தட்டாதே
பந்தை நிலை கொளச் செய்
சாகரத்தை அலையில்லாமல் ஆக்கு
ஐம்புலக் கதவுகளை மூடு
ஐம்புலன்களை ஒன்று சேர்

போதம் தேய்ந்து தேய்ந்து
திருவடியில் தோய்ந்து தோய்ந்து நில்
திருவடியில் அமிழ்ந்துவிடு
நான் திருவடியில் கலந்திருக்கின்றேன் என்பதையும் மறந்து விடு

இதனை ஆற்றின்

மீண்டும் வாராய் இப்புவியில் என்றது

 
 
 
BG Venkatesh

[vallalargroups:5457] சோமாலியா

எல்லோரும் இந்தச் செய்தியை செய்தித் தாளில் படித்திருக்கலாம்

இந்த ஆண்டு இறுதிக்குள் , ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் , 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் மடிந்து போவாரகள் என்று ஐ நா சபை அறிவித்திருக்கின்றது
 
BG Venkatesh

Wednesday, May 28, 2014

[vallalargroups:5456] ஜீவனும் ஆன்மாவும் பாகம் 2

ஜீவனும் ஆன்மாவும்      பாகம் 2

அருள் தடித்த அளவு
போதம் இளைக்கும்
போதம் தடித்த அளவு
அருள் இளைக்கும்

விதையும் செடியும்
ஒரே நேரத்தில் உயிர் வாழ முடியாது போல்
விதையின் மரணம்
செடியின் உதயம் போல்

ஜீவனின் மரணம்
ஆன்மாவின் உதயம்
சந்திரனின் அஸ்தமனம்
சூரியனின் உதயம்

ஜீவன் இருந்தால்
ஆன்மா இல்லை
ஆன்மா இருந்தால்
ஜீவன் இல்லை

இது தான் ஜீவன் முக்தி


சந்திரன் நாளும் தேய்ந்து வருதல்
ஜீவன் மரணத்திற்கு  சமமாகும்

பின் நாளும் வளர்ந்து
வானில் முழு மதியாதல்
ஆன்மா உதயத்திற்கு சமமாகும்

சிதாகாசத்தில் பூரண மதி உதயமானால்
என்றும் பதினாறு தான் நம் வயது
இளமை மாறா தேகம் சித்திக்கும்
வல்வினைகள் இல்லை - நமனும் இல்லை
சாகாமல் இருக்கலுமாமே


வெங்கடேஷ்

Tuesday, May 27, 2014

[vallalargroups:5455] அருட்பெருஞ்சோதி - விளக்கம்

அருட்பெருஞ்சோதி - விளக்கம்

1 ஜோதி

2. பெருஞ்சோதி

3. அருட்பெருஞ்சோதி


1. ஜோதி என்பது ஜீவ ஒளி


2. சாதனைகளால் - சோம சூரியாக்கினிகளின் கலப்பினாலும் , அபானனைக் கொண்டு ஊதுவதினாலும், இந்த ஜோதி - பெருஞ்சோதியாக ஓங்கி வளரும்

இது எப்படி என்றால் - கொல்லன் உலையை ஊதுவது போன்றது - ஊதுவதினால் அந்த நெருப்பு - கொழுந்து விட்டு எரிவது போன்று இந்த ஒளியும் பெருஞ்சோதியாக ஒளிவிடும்

கொல்லன் உலையை ஊதுவது : இதனைத் தான் வள்ளலார் " மேடையிலே வீசிகின்ற மெல்லிய பூங்காற்றே " என்று தன் அனுபவத்தைப் பாடுகின்றார்

இதனைத் தான் - " உந்தீபற - உந்தீபற " என்று சமய நூல்களும் , வள்ளலாரும் கூறுகின்றனர்


3. இந்த பெருஞ்சோதி , சாதனைகளின் வளர்ச்சியினால் , ஒரு கட்டத்தில், அருளைக் கொடுக்கும்பொழுது , அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது

அதாவது - முப்புரத்தை எரித்தப் பின்னும், திரைகள் எல்லாம் தீக்கிரையான பின்னும், அது அருளை வீசும்போது,  அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது

இது ஒவ்வொரு ஜீவனின் பரிணாம வளர்ச்சிப் படிகள் ஆகும் - ஜீவன் சிவனாக ஓங்கும் வழியும் ஆகும்

 
 
 
வெங்கடேஷ்

Monday, May 26, 2014

[vallalargroups:5454] வாசியும் - நெற்றிக்கண்ணும்


வாசியும் - நெற்றிக்கண்ணும்

நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றானது , எல்லோர்க்கும், மூக்குத் துவாரதிற்குள் ஏறி , கீழிறங்கி நுரையீரலுக்கு வந்து விடும். அப்படி கீழிறங்காமல் . அதனை தடுத்து , மேலேற்ற வேண்டும் - இது ஒரு பயிற்சி

இதனை உணர்த்தத் தான் நடராஜர் தன் இடக்காலை மேலே தூக்கி நடமாடுகின்றார்


1. வாசி என்பது - இட கலை - சந்திர கலை ஆகும் - இதனை மேல் ஏற்றுவதற்குத் தான் உலகில் எல்லா யோகியரும் - ஞானியரும் அரும் பாடு படுகின்றனர்

இந்த வாசிக் குதிரையைத் தான் " அகோரம் " என்றும் , இந்த பயிற்சி செய்வோரை " அகோரிகள் " என்று அழைக்கின்றோம்

நெற்றிக்கண்ணைத் திறந்து , ஆன்மாவைத் தரிசனம் செய்வதற்கு இந்த வாசி என்னும் காற்று வேண்டும்.

இந்த சந்திரனின் கலைகள் மொத்தம் பதினாறு

இதனைக் கருத்தில் கொண்டே தான், நம் முன்னோர் , ஒவ்வொரு கோவில் முன்பும் , பதினாறு கால் மண்டபம் அமைத்து உள்ளனர் - அது வழியாக உள்ளே புகுந்து இறைவனை தரிசிக்க வேண்டும் என்று சொல்லாமலே சொல்லியுள்ளனர்

- அதாவது பதினாறு கலையுடைய சந்திரனைக் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்து, உள்ளே புகுந்து ஆன்மாவை தரிசிக்க வேண்டும்

நெற்றிக்கண்ணை திறப்பதற்கன திருமந்திரப் பாடல் :

மூக்கு நுனியில் கண்மூடாமல்தான் நோக்கி
காக்கு மனது கலங்காமல் நெற்றியை ஊன்றி
ஆக்கு மனதை அசையாமல் தான்
தீர்க்கமாய் நெற்றிக்கண்ணும் திறந்திடே

ஆனால் , சன்மார்கிகள் , அருட்பா உரை நடையில் வள்ளலார் " தக்க ஆசான் கொண்டு நெற்றிக்கண்ணை திறந்து கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார் என்று புறத்திலே இருக்கும் குருவிற்காக காத்துக்கொண்டிருக்கின்றோம்


2. கர்ப்பக்கிரகமானது , எல்லாக் கோவில்களிலும் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே அமைத்து இருப்பார்கள் = அதாவது , ஆன்மாவானது ஆயிரத்தெட்டு இதழ் கமலம் ( மூளையின் நடுவில் ஆழத்தில் ) நடுவே ஒளியாக இருக்கின்றது என்று காட்டியிருக்கின்றார்கள்

நம் ஊர் திருவிழாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நன்கு ஆய்ந்து - ( முதல் நாள் கொடியேற்றம் முதல் - கடைசி நாள் திருக்கலியாணம் வரை - ரத உற்சவம் வரை ) , அதில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொண்டால் , திருசிற்றம்பலத்திற்குள் நுழைவதற்கான வழியை அறிந்து கொள்ள முடியும்

ரகசியங்களை சாதனையில் புகுத்தி, வெற்றி கண்டால், திருசிற்றம்பலத்திற்குள் நுழையவும் முடியும்

நம் வேத காலத்து ரிஷிகள் , எல்லா ரகசியங்களையும், யோகசாதனைகளையும் இதிகாசங்களாகவும், புராணங்களாகவும், திருவிழாக்களாகவும், பண்டிகைகளாகவும் சித்தரித்து வைத்து, நம் வாழ்க்கையின் அங்கமாக்கிவிட்டார்கள்


திருசிற்றம்பலத்திற்குள் நுழையும் ரகசியங்களை திருமந்திரம் - திருவாசகம் தெரிவிக்கின்றன . அதனை நன்கு ஆய்ந்து படித்தால் தெரிந்து கொள்ளலாம்



வெங்கடேஷ்

Thursday, May 22, 2014

Re: [vallalargroups:5452] ஜீவனும் ஆன்மாவும்

ஜீவகாருண்ய ஒழுக்கம் கூறுவது:

பசு வென்பது என்னை? 

ஆணவம் மாயை கன்மம் என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசு வென்பது

நன்றி. 


2014-05-22 15:56 GMT+05:30 <venkatesh@precot.com>:

ஜீவனும் ஆன்மாவும்

1.ஜீவன் : மாயை வசப்பட்டுள்ளதால் , எப்பொழுதும் பயத்துடனே இருக்கும் - ஐம்புலன்களுடன் சம்பந்தப்பட்டு , சதா அசைந்து கொண்டே இருக்கும்

ஆன்மா : மாயை இலையாகையால், பயம் என்பதே கிடையாது - ஐம்புலன்களுடன் சம்பந்தப்படாது , தனியாக இருப்பதால் ( தனிக்குமரி ) அசைவற்று நிற்கும்

2. ஜீவன் : தத்துவங்கள் நடுவே இருக்கும்

ஆன்மா : 36 தத்துவங்களைக் கடந்து , தனியாக நிற்கும் - சாமானியர் யாரும் ஏறா நிலை அது - மிகவும் கஷ்டப்பட்டு ஏறக்கூடிய நிலை அது


3. ஜீவன் : பசி, தாகம், நித்திரை, காமம், நோய் , வினை ஆகியவற்றுக்கு உட்பட்டு , முடிவில் இறந்துவிடும்

ஆன்மா : பசி, தாகம், நித்திரை, காமம், நோய், வினை போன்றவை மாயை சம்பந்தப்பட்டது ஆகையால், இவைகளெல்லாம் , ஆன்மாவிற்கு கிடையவே கிடையாது

4. ஜீவன் : மண்ணாசை- பொன்னாசை - பெண்ணாசை உண்டு

ஆன்மா : இயற்கையிலேயே எந்த ஆசையும் இல்லாமலே இருக்கும் - அதன் இயற்கை குணம் தயை -
அதனால் " தயவு "  என்பது ஆன்மாவைக் குறிக்க வந்த சொல்லாகும்

5. ஜீவன் : எப்பொழுதும் இருமையில் இருக்கும் -

இரவு - பகல்
இன்பம் - துன்பம்
வெப்பம் - குளிர்
நன்மை - தீமை
வேண்டும் - வேண்டாம்
பாவம் - புண்ணியம்
அதனால் எப்பொழுதும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கும்

ஆன்மா : இரண்டும் " சமம் " என்ற பாவனையில் எப்பொழுதும் " ஒருமையில் " இருக்கும்
இதனைத்தான் - வடமொழியில் - " ஸ்திதப்ரக்ஞன் - சம நோக்கு கொண்டவன்" என்று பொருள் பட கூறுகின்றனர்

6. ஜீவன் : மாயை - கன்மம் ஆகிய இரு மலம் உண்டு

ஆன்மா : ஆணவம் என்கின்ற ஒரு மலம் மட்டும் உண்டு
 
வெங்கடேஷ்





--
Regards,

Anandhan. L
Ph: +91 74-112759-38
Web : http://vallalar.org/

Re: [vallalargroups:5451] ஜீவனும் ஆன்மாவும் - ஒரு திருத்தம்

6. ஜீவன் : மும்மலம் உண்டு

ஆன்மா : ஆணவம் என்கின்ற ஒரு மலம் மட்டும் உண்டு
 
bg venkatesh


-----vallalargroups@googlegroups.com wrote: -----
To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com>
From: venkatesh@precot.com
Sent by: vallalargroups@googlegroups.com
Date: 05/22/2014 04:03PM
Cc: "Vallalar Groups" <vallalargroups@gmail.com>
Subject: [vallalargroups:5450] ஜீவனும் ஆன்மாவும்


ஜீவனும் ஆன்மாவும்

1.ஜீவன் : மாயை வசப்பட்டுள்ளதால் , எப்பொழுதும் பயத்துடனே இருக்கும் - ஐம்புலன்களுடன் சம்பந்தப்பட்டு , சதா அசைந்து கொண்டே இருக்கும்

ஆன்மா : மாயை இலையாகையால், பயம் என்பதே கிடையாது - ஐம்புலன்களுடன் சம்பந்தப்படாது , தனியாக இருப்பதால் ( தனிக்குமரி ) அசைவற்று நிற்கும்

2. ஜீவன் : தத்துவங்கள் நடுவே இருக்கும்

ஆன்மா : 36 தத்துவங்களைக் கடந்து , தனியாக நிற்கும் - சாமானியர் யாரும் ஏறா நிலை அது - மிகவும் கஷ்டப்பட்டு ஏறக்கூடிய நிலை அது


3. ஜீவன் : பசி, தாகம், நித்திரை, காமம், நோய் , வினை ஆகியவற்றுக்கு உட்பட்டு , முடிவில் இறந்துவிடும்

ஆன்மா : பசி, தாகம், நித்திரை, காமம், நோய், வினை போன்றவை மாயை சம்பந்தப்பட்டது ஆகையால், இவைகளெல்லாம் , ஆன்மாவிற்கு கிடையவே கிடையாது

4. ஜீவன் : மண்ணாசை- பொன்னாசை - பெண்ணாசை உண்டு

ஆன்மா : இயற்கையிலேயே எந்த ஆசையும் இல்லாமலே இருக்கும் - அதன் இயற்கை குணம் தயை -
அதனால் " தயவு "  என்பது ஆன்மாவைக் குறிக்க வந்த சொல்லாகும்

5. ஜீவன் : எப்பொழுதும் இருமையில் இருக்கும் -

இரவு - பகல்
இன்பம் - துன்பம்
வெப்பம் - குளிர்
நன்மை - தீமை
வேண்டும் - வேண்டாம்
பாவம் - புண்ணியம்
அதனால் எப்பொழுதும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கும்

ஆன்மா : இரண்டும் " சமம் " என்ற பாவனையில் எப்பொழுதும் " ஒருமையில் " இருக்கும்
இதனைத்தான் - வடமொழியில் - " ஸ்திதப்ரக்ஞன் - சம நோக்கு கொண்டவன்" என்று பொருள் பட கூறுகின்றனர்

6. ஜீவன் : மாயை - கன்மம் ஆகிய இரு மலம் உண்டு

ஆன்மா : ஆணவம் என்கின்ற ஒரு மலம் மட்டும் உண்டு
 
வெங்கடேஷ்


[vallalargroups:5450] ஜீவனும் ஆன்மாவும்


ஜீவனும் ஆன்மாவும்

1.ஜீவன் : மாயை வசப்பட்டுள்ளதால் , எப்பொழுதும் பயத்துடனே இருக்கும் - ஐம்புலன்களுடன் சம்பந்தப்பட்டு , சதா அசைந்து கொண்டே இருக்கும்

ஆன்மா : மாயை இலையாகையால், பயம் என்பதே கிடையாது - ஐம்புலன்களுடன் சம்பந்தப்படாது , தனியாக இருப்பதால் ( தனிக்குமரி ) அசைவற்று நிற்கும்

2. ஜீவன் : தத்துவங்கள் நடுவே இருக்கும்

ஆன்மா : 36 தத்துவங்களைக் கடந்து , தனியாக நிற்கும் - சாமானியர் யாரும் ஏறா நிலை அது - மிகவும் கஷ்டப்பட்டு ஏறக்கூடிய நிலை அது


3. ஜீவன் : பசி, தாகம், நித்திரை, காமம், நோய் , வினை ஆகியவற்றுக்கு உட்பட்டு , முடிவில் இறந்துவிடும்

ஆன்மா : பசி, தாகம், நித்திரை, காமம், நோய், வினை போன்றவை மாயை சம்பந்தப்பட்டது ஆகையால், இவைகளெல்லாம் , ஆன்மாவிற்கு கிடையவே கிடையாது

4. ஜீவன் : மண்ணாசை- பொன்னாசை - பெண்ணாசை உண்டு

ஆன்மா : இயற்கையிலேயே எந்த ஆசையும் இல்லாமலே இருக்கும் - அதன் இயற்கை குணம் தயை -
அதனால் " தயவு "  என்பது ஆன்மாவைக் குறிக்க வந்த சொல்லாகும்

5. ஜீவன் : எப்பொழுதும் இருமையில் இருக்கும் -

இரவு - பகல்
இன்பம் - துன்பம்
வெப்பம் - குளிர்
நன்மை - தீமை
வேண்டும் - வேண்டாம்
பாவம் - புண்ணியம்
அதனால் எப்பொழுதும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கும்

ஆன்மா : இரண்டும் " சமம் " என்ற பாவனையில் எப்பொழுதும் " ஒருமையில் " இருக்கும்
இதனைத்தான் - வடமொழியில் - " ஸ்திதப்ரக்ஞன் - சம நோக்கு கொண்டவன்" என்று பொருள் பட கூறுகின்றனர்

6. ஜீவன் : மாயை - கன்மம் ஆகிய இரு மலம் உண்டு

ஆன்மா : ஆணவம் என்கின்ற ஒரு மலம் மட்டும் உண்டு
 
வெங்கடேஷ்


[vallalargroups:5449] மரணமிலாப் பெருவாழ்வு

மரணமிலாப் பெருவாழ்வு


வள்ளலார் - சாகாக்கல்வி பற்றி தேவர் குறளில் சொல்லப்பட்டிருக்கின்றது என்கின்றார்

திருக்குறள் முதல் அதிகாரத்தில் - இறைவனின் திருவடி பற்றி பத்து பாடல்கள் உள்ளன

அப்படியெனில் , சாகாக்கல்வி அறிய வேண்டுமெனில் , திருவடி ஞானம் வேண்டும் என்று புலனாகிறது

இதை அறிந்தே தான் வள்ளலார் , " திருவடிப் புகழ்ச்சி, திருவடிப் பெருமை " என்று எண்ணற்ற பாக்களை படியுள்ளார்

இந்தப் பெருவாழ்வு பெற , சில வழிகள் :

1. திருவடியைக் கொண்டு , பஞ்ச இந்திரிய சக்திகளும் புறத்திலே செல்லும் போக்கை மாற்றி, பிரணவத்துடன் பின்னிப் பிணைந்து இருக்கும் வழியை அறிந்து கொண்டவருக்கு மரணமில்லை

இதனைத் தான் வள்ளலார் , " இந்திரிய ஒழுக்கம் " என்று கூறுகின்றார் - அதையே சைவ சமயம் - " ஓம் நமசிவாய " என்று மந்திர வார்த்தையாக சொல்கின்றது
" ஓம் நமசிவாய " என்பது சிவனைக் குறிக்க வந்த பெயர் அல்ல - அதன் உட்பொருள் - பஞ்ச இந்திரியங்களையும் ஓம்காரமாகிய பிரணவத்தில் சேர்க்க வேண்டும்

இதனைச் செய்வதால் அளப்பரிய நன்மைகள் உண்டாம். அதில் முக்கியமானது - மனம் அடங்கிப்போதல்

முன்னாளில், யார் பஞ்ச இந்திரியங்களின் போக்கை புறத்திலே விட்டிருந்தார்களோ, அவர்களை எல்லாம் , " புறம்போக்குகள் " என்று அழைக்கப்பட்டனர்
அதுவே , பின்னால், மருவி " புறம்போக்கு " என்பது திட்டுவதற்கான சொல்லாக மாறி விட்டது


2. திருவடியுடன், சூக்கும பஞ்ச பூத சக்திகளின் கலப்பினால், தோன்றும் ஒருவித
சூக்கும சிவ அக்கினியை , சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் , மரணமில்லை

சலனமில்லாமல் என்பது மனம் மற்றும் பிராணனின் அசைவு இல்லாமல் என்பதாகும்
அசைவை ஒழிக்க வேண்டும் என்று வள்ளலார் வலியுறுத்துகின்றார் - அதனால் தான் " ஆடாதீர் - சற்றும் அசையாதீர் " என்கின்றார்


இந்த சாதனைகளும் , பயிற்சிகளும் , நெற்றிக்கண்ணை திறப்பதற்கும், சாகாத்தலை- வேகாக்கால் - போகாப்புனல் ஆகிய அனுபவத்திற்கு அழைத்து செல்லும்

3. ஆன்மா என்றும் அழியாதது - உடம்பு அழியக் கூடியது - அழியாததை அழியக்கூடியதுடன் சேர்த்து விட்டால் , உடல் என்றும் அழியா நிலையை அடைந்து விடும்
அதனால் ஆன்மாவை உடம்புடன் கலக்கச் செய்ய வேண்டும் - இந்த தேகம் ஆன்ம தேகமாக மாற வேண்டும்

மரணமிலாப் பெருவாழ்விற்கான பயிற்சிகள் :

1. ஓம்காரத்தை அமைக்க வேண்டும்
2. பஞ்ச இந்திரியங்களின் போக்கை மடை மாற்ற வேண்டும்
3. திருவடியை தெரிந்து கொண்டு, அதை பிரயோகிக்கும் முறை தெரிந்து கொள்ள வேண்டும்
4. உடல் , மனம் , பிராணன் அசைவை ஒழிக்க வேண்டும்


இவைகள் எல்லாவற்றையும் எவன் ஒருவன் சாதனைகள் மூலம் சாதிக்கின்றானோ , அவனால் மரணத்தை வென்று வாழ முடியும் என்பது திண்ணம்

இவையெல்லாம் , திருவடி உதவி இல்லாமல் சாதிக்க முடியாது என்பது மட்டும் திண்ணம்

 

 


வெங்கடேஷ்

Wednesday, May 21, 2014

[vallalargroups:5448] Fwd: ஆன்ம நேய அன்பர்களுக்கு வணக்கம் ....



ஆன்மநேய  அன்பர்களுக்கு வணக்கம் ....

இவ்வுலகில்  மனிதப் பிறப்பை இறை அருளால் பெற்று உள்ளோம் .மனிதப்  பிறப்பின்  முடிவான ஆன்ம லாபத்தை பெற்று இறைவனை அடைய ..ஒருமையுடன்  .அன்போடு  வாழ  வள்ளலார்  சன்மார்க்கத்தை  எல்லா உயிர்களுக்கும்  அளித்துள்ளார் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்  வகையில்  நாம்  ஜீவகாருண்யபணிபுரிய முயல்வோம் .
உயிர்களின் பசி பிணி அகற்ற  தங்களால் முடிந்த  பொருள் உதவியை  இந்தத்  திருப்பணி நிகழ்விற்க்கு அளித்து ஆன்மலாபம் அடைய வேண்டுகிறோம் .

சன்மார்க்க பணியில்
சன்மார்க்க அன்பர்கள் .




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, May 20, 2014

[vallalargroups:5447] Vallalar Vinnappam - Tamil / Telugu / English / Kannada Languages

Thanks to Anatha Bharathi




--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)